Published:Updated:

ரிலேஷன்ஷிப்பிற்கு நடுவே வரும் பெஸ்ட்டிஸ்... என்ன செய்வது? #AllAboutLove - 11

பெஸ்ட்டிஸ்
News
பெஸ்ட்டிஸ் ( pixabay )

ஆணோ, பெண்ணோ தன் இணை மீதான கவனம் குறைந்து இன்னொருத்தர் மேல் கவனம் அதிகம் சென்றால் அது நிச்சயம் ரிலேஷன்ஷிப்புக்குப் பிரச்னைதான். அதுவும் அந்த நண்பர் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி என்பது போல நெருக்கமான ஆளாக இருந்தால் அவ்வளவுதான்.

வயது, இருபதுகளின் தொடக்கத்திலிருக்கும் ஒரு காதல் ஜோடி. ரம்யா - ரமேஷ் என நாமே பெயரிட்டுக்கொள்வோம். இருவரும் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலே காதலிக்கத் தொடங்கினார்கள். முதல் வருடக் கொண்டாட்டம் முடிந்தது. ஓராண்டில் ஒன்றிரண்டு சண்டை தவிர பெரியதாக எதுவுமில்லை. காதலின் ஹனிமூன் காலக்கட்டத்தைத் தாண்டியும் சிக்கல் இல்லாமல் போகும் ரிலேஷன்ஷிப். ஆனால், கடந்த ஒரு மாதமாக ரமேஷுக்கு ஒரு மனச்சிக்கல். அதைப் பற்றி ரம்யாவிடமும் பேச பயம். எல்லாவற்றுக்கும் காரணம், சித்து.

சித்து ரம்யாவின் பள்ளிக்கால நண்பன். இடையில் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தவன் இப்போது திரும்பிவிட்டான். இனிமேல் சென்னைதான். அதுவும் ரம்யா வீட்டுக்கருகேதான். கிட்டத்தட்ட 15 ஆண்டுக்கால நட்பு இருவருக்கும். சித்துவைப் பற்றி ரம்யா ரமேஷிடம் நிறைய சொல்லியிருக்கிறாள். சொல்லப்போனால், அந்தக் கதைகள்தான் ரமேஷுக்கு ரம்யா மீது மிகப்பெரிய மரியாதையும் காதலும் வரக்காரணம் என்று கூட ரமேஷ் சொல்லியிருக்கிறான். அப்படியொரு நட்பு சித்துவுக்கும் ரம்யாவுக்கும். ஆனால், நிஜத்தில் சித்து வந்து நின்றபோது மகிழ்ச்சிக்குப் பதில் குழப்பமே அதிகமானது ரமேஷுக்கு.

love
love
Pixabay

ஏன்?

நடந்த சம்பவங்களைச் சொன்னால்தான் புரியும். ரம்யாவும் ரமேஷும் சினிமாவுக்குப் போகத் திட்டமிட்டிருக்கிறார்கள். ரமேஷுக்கு எதோ அவசர வேலை இருந்ததால் ரம்யாவை டிக்கெட் புக் செய்ய சொல்லியிருக்கிறார். ரம்யாவுக்கு எந்த உதவியென்றாலும் சித்து செய்வது 15 ஆண்டுக்கால பழக்கம். சித்துவிடம் உதவி கேட்க, அவரும் `ஹேய் நானும் போகணும்னு நினைச்சேன்' என சொல்ல, ரம்யாவுக்கு குஷி ஆகிவிட்டது. 3 டிக்கெட் ஆக போடச் சொல்லிவிட்டார். ரமேஷுக்கு விஷயம் தெரிய வந்தபோது பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. மூவரும் படத்துக்குப் போனார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன் பின் இடைவேளை, படம் முடிந்து சென்ற பீச், டின்னர் என எல்லாவற்றிலும் சித்துவும் கலந்துகொண்டார். அந்த 6 மணி நேரத்தில் ரம்யா ரொம்பவே எக்ஸைட் ஆகியிருக்கிறார். சித்துவிடம்தான் அதிக நேரம் பேசினார். ரமேஷிடம் பேசினாலும் அது சித்துவைப் பற்றிதான் இருந்தது. தன் காதலனும் நண்பனும் ஒன்றாக தன்னுடன் இருப்பது நிச்சயம் ரம்யாவுக்கு சந்தோஷம்தான். ஆனால், ரமேஷ் எப்படி உணர்ந்தார் என்பதைப் பற்றி ரம்யாவும் யோசிக்கவில்லை; சித்துவும் யோசிக்கவில்லை.

யாருக்கு முக்கியத்துவம் தருகிறோம், எதற்குத் தருகிறோம் என்பதை வைத்தே அந்த ரிலேஷன்ஷிப்பின் பலம் இருக்கிறது.

முதல் முறை என்பதால் சித்து மீது ரமேஷுக்கு எந்தப் புகாரும் அப்போது இல்லை. ஆனால், அதன் பின் எப்போது சினிமா போனாலும் சித்துவும் இருந்தது ரமேஷுக்கு சற்றே நெருடியது. சினிமா மட்டுமல்ல; அதன் பின்னர் ரம்யா - ரமேஷ் எப்போது சந்தித்தாலும் சித்துவும் இருந்துவிடுவார். சில முறை கான்ஃப்ரன்ஸ் கால் கூட ரம்யா போட்டிருக்கிறார். இதைப் பற்றி ரம்யாவிடம் பேச நினைத்தார் ரமேஷ். கொஞ்சம் சிக்கலான டாபிக். அதனால், சென்னையைவிட்டு எங்கேவாது டிரிப் சென்று அங்கு பேசலாம் என ரமேஷ் நினைத்தார். இருவருக்கும் பிடித்தமான பாண்டிச்சேரிக்கு ஒரு டிரைவ் போகலாம் என கேட்க, ரம்யாவும் மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறார். ஆனால், அடுத்த நொடியே `சித்துக்கிட்ட பி.எம்.டபிள்யூ இருக்கு. அவனையும் வரச் சொல்லலாம்' எனச் சொல்ல, ரமேஷுக்கு பாரதிராஜா படம் போல அலைகளும் பறவைகளும் அப்படி அப்படியே நின்றன. வேறு வழியில்லாமல் அங்கேயே பேசத் தொடங்கிவிட்டார். ரமேஷ் தனக்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்பதைச் சொல்ல, அது ரம்யாவுக்கு சித்துவைக் குறை சொல்வதாக மட்டுமே புரிந்தது. விவாதம் சண்டையானது. சண்டையில் ரம்யா சில தவறான விஷயங்களைப் பேச, ரமேஷும் சில வார்த்தைகளைவிட, ரம்யா அழ, கோவத்தில் ரமேஷ் `அதான.. இன்னும் அழலையேன்னு பாத்தேன்' எனச் சொல்லிவிட, உடனே கிளம்பிவிட்டார் ரம்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன் இப்படி ஒரே ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. அப்போது ரம்யா தனியே இருந்து யோசிக்க, அவர் தவறும் புரிந்தது. ரமேஷ் தவறும் புரிந்தது. பின் நிதானமாக ரமேஷிடம் பேச, இருவரும் பரஸ்பரம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், இந்த முறை ரம்யா தனியாக இல்லை. சித்துவிடம் சென்று நடந்ததைச் சொன்னாள். சித்து பதிலேதும் சொல்லவில்லை. ரம்யா நச்சரித்துக் கேட்க, அவர் தன் பிரச்னையைச் சொன்னார்.

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்
Pixabay

`உங்களுக்கு நடுவ வரக்கூடாதுன்ற இங்கீதம் கூட எனக்குத் தெரியாதா? அவர்தான் அன்னைக்கு தியேட்டர்ல வாங்க வாங்கன்னு கூப்பிட்டாரு. அப்புறம் நீங்க எங்க போனாலும் என்னையும் கூப்ட்டாரு. எப்படியும் நாம தினம் மீட் பண்ணுவோம். இல்லைன்னா ஃபோன்ல பேசுவோம். ஆனா, அவர் கூப்டப்ப வரலைன்னு நான் சொன்னா சந்தேகப்பட மாட்டாரா? அதனாலதான் தனியா மீட் பண்ணாம அவர் இருக்கும்போது மட்டும் உன்னை மீட் பண்ணேன். அவருக்கும் முன்னாடியே நாம ஃப்ரெண்ட்ஸ் ரம்யா. ஆனா அவர ஹர்ட் பண்ணாமதான் உன் கூட இப்ப ஃப்ரெண்டா இருக்கேன். அப்படி இருக்கிறப்ப என் மேல இப்படி ஒரு பழி போட்டா.. எனக்கு இவர் சரியான ஆள்ன்னு தோணல. யு டிசைட்'

போச்சு. ரம்யாவால் இப்போது சரியாக யோசிக்க முடியவில்லை. ரமேஷ் தனக்குச் சரியான இணை இல்லையோ என யோசித்தார். காரணம், சித்துவுக்கு ரம்யாவை 15 ஆண்டுகளாகத் தெரியும். சித்து சொன்னால் தனக்கு நல்லதாகத்தான் இருக்கும் என்பது ரம்யாவின் நம்பிக்கை. சின்ன விரிசல் பெரிதாகி இப்போது பிரேக் அப்பில் முடிந்துவிட்டது.

இதில் யார் மீது தவறென சொல்ல முடியும்? கம்யூனிகேஷன் கேப் எனச் சொல்லலாம். ரமேஷ் சித்துவிடம் நேராகப் பேசியிருக்கலாம் எனச் சொல்லலாம். இன்னும் பல `இதைச் செய்திருக்கலாம்' எனச் சொல்லலாம். ஆனால், நிகழும்போது நம்மால் அவ்வளவு துல்லியமாக யோசித்து செயல்பட முடியாது என்பதே யதார்த்தம்.

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்
Pixabay

ரம்யா - ரமேஷுக்குப் பதில், கீதா - கிருஷ்ணன் என இன்னொரு கதை எடுத்தால் அங்கே சித்துவுக்குப் பதில் கீதாவின் தோழி சித்தாரா என ஒருத்தரால் சிக்கல் வந்திருக்கலாம். ஆணோ, பெண்ணோ தன் இணை மீதான கவனம் குறைந்து இன்னொருத்தர் மேல் கவனம் அதிகம் சென்றால் அது நிச்சயம் ரிலேஷன்ஷிப்புக்குப் பிரச்னைதான். அதுவும் அந்த நண்பர் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி என்பது போல நெருக்கமான ஆளாக இருந்தால் அவ்வளவுதான். இதைச் சமாளிக்க அதீத பக்குவம் தேவை. தன் இணையிடம் அந்த நண்பர் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். தன் பார்ட்னருக்கு அதில் ஏதும் சிக்கல் இருந்தால் லாஜிக்கலாக எல்லாம் பேசாமல், பார்ட்னர் கேட்பதைச் செய்ய வேண்டும். அதுதான் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. காதலுக்கு எந்த லாஜிக்கும் கிடையாது என்னும்போது இங்கும் அப்படித்தான். ஒருவேளை தன் இணை தன்னுடைய வாழ்க்கையில் அதிகம் டாமினேட் செய்வதாகவோ, அல்லது கன்ட்ரோல் செய்வதாகவோ தோன்றினால் அந்தப் பிரச்னையைப் பற்றி நிச்சயம் பேச வேண்டும். ஆனால், அதை `என் பாய் பெஸ்ட்டி அல்லது கேர்ள் பெஸ்ட்டியை எப்படி தப்பா பேசுவ' என ஒரு நபரோடு இணைத்துப் பேசினால் சிக்கல்தான்.

ரிலேஷன்ஷிப்பில் எல்லாமே முக்கியத்துவம்தான். யாருக்கு முக்கியத்துவம் தருகிறோம், எதற்குத் தருகிறோம் என்பதை வைத்தே அந்த ரிலேஷன்ஷிப்பின் பலம் இருக்கிறது.

நண்பர்களை எந்த எல்லை வரை அனுமதிப்பது ஒரு ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது, அவர்களால் வேறு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம், இன்னும் பலவற்றைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தொடரலாம்.