Published:Updated:

லாக்டெளனில் பிரேக் அப் பிரச்னைகள்... எதிர்கொள்வது எப்படி? உளவியல் ஆலோசகரின் வழிகாட்டல்

பிரேக் அப்
பிரேக் அப்

இந்த உணர்வுகளிலிருந்து வெளியில் வருவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் நிச்சயம் வெளியில் வர முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பலர் காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவர்கள்தான்.

'நமக்கு செட் ஆகாது'. ஸோ... 'லெட்ஸ் பிரேக் அப்'- இன்றைய காதல்களின் முடிவிற்குப் போதுமான குறைந்த பட்ச வார்த்தைகள்! 'ஏன் இவ்ளோ லேட் ரிப்ளை?'யில் தொடங்கி 'நைட்டு 12 மணிக்கு மேல எதுக்கு ஆன்லைன்ல இருக்க?' போன்ற கேள்விகளே பிரேக் அப்பை ஏற்படுத்தலாம் என்றான பிறகு நம் இளைஞர்களும் அதிலிருந்து மீண்டு வரத் தொடங்கிவிட்டார்கள்.

Love
Love

எனினும் எத்துணை வலிமையானவர்களையும் காதல் தோல்வி சிறிது அசைத்துப் பார்க்கவே செய்கிறது! காதலனோ/காதலியோ இந்த உறவு வேண்டாம் என்று பிரிந்து செல்லும்போது பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து வெளியில்வர அதற்கேற்ற சூழலும், நண்பர்களின் உதவியும் நிச்சயம் தேவைப்படும்.

ஒரு லாங் டிரைவ், நண்பர்களுடன் அவுட்டிங், கல்லூரி, அலுவலகம் என்று எதுவேண்டுமானாலும் பிரேக் அப்பில் இருந்து நம்மை மீட்டெடுக்கலாம். மற்ற நாள்களில் ஏற்படும் பிரேக் அப்புக்கு இது ஓகே. நாம் இப்போதிருக்கும் லாக்டெளனில் ஏற்படும் காதல் தோல்விக்கு?

Breakup
Breakup

காதலர்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடியாத இந்த லாக்டெளனிலும் மொபைல் சண்டையின் காரணமாக நிறைய காதல்கள் முடிவுக்கு வருகின்றன என்கிறார்கள் இளைஞர்கள்! கொரோனா பரவல், வொர்க் ஃப்ரம் ஹோம், நீண்டு கொண்டே செல்லும் லாக்டெளன் என்று ஏற்கெனவே அதீத மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இப்போது ஏற்படும் பிரேக் அப் என்பது மேலும் ஒரு சறுக்கல்தான்!

`லாக்டௌனால் பிரிந்திருக்கும் இணையுடன் போனில் பேசும்போது...'- தம்பதிகள், காதலர்களுக்கு மனநல ஆலோசனைகள்

லாக்டெளனில் ஏற்படும் பிரேக் அப் பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்று உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.

"காதல் தோல்வியில் உள்ளவர்களுக்கு நாம் எளிதாக அறிவுரை கூறிவிடலாம். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வது ரொம்பவே கஷ்டம். காரணம் ஏற்கெனவே அவர்கள் உடைந்து போயிருப்பார்கள். அம்மா, அப்பா, நண்பர்கள் என்று நமக்குப் பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் நம்மை விட்டுப் பிரிவதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

உளவியல்ஆலோசகர் வசந்தி பாபு
உளவியல்ஆலோசகர் வசந்தி பாபு

அதுவே லவ் என்று வரும்போது நம் கண்ணுக்கு உலகில் உள்ள மற்ற விஷயங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் காதலன்/காதலியே பெரிதாகத் தெரிவார். பிறந்ததிலிருந்து நம் கூடவே இருந்த சொந்தங்களை விடப் பார்த்துக் கொஞ்ச நாளே ஆன அந்தக் காதல்துணைக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். உருகி உருகிக் காதலிப்போம். அந்தக் காதலில் விரிசல் வரும்போது ஏக்கம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை என்று எல்லாமே நம் மனதை அடைத்துக்கொள்ளும்.

இந்த உணர்வுகளிலிருந்து வெளியில் வருவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் நிச்சயம் வெளியில் வர முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பலர் காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவர்கள்தான். லாக்டெளன் போன்ற ஒரு சூழலில் ஒருவருக்குக் காதல் தோல்வி ஏற்படும்போது அதைப் பல விதங்களில் அணுகலாம்.

Love
Love

லாக்டெளனில் உங்களுக்கு பிரேக் அப் ஏற்பட்டு காதல் துணை உங்களைப் பிரிந்து சென்றிருக்கும் வேளையில் மீண்டும் 'அவர் நமக்குக் கிடைக்காமல் போய்விடுவாரோ' என்ற எண்ணத்தில் கால், மெஸேஜ் மூலம் அவரை டார்ச்சர் செய்யாமல் அமைதியாக விட்டுவிடுங்கள். லாக்டெளனில் எல்லாருக்கும் ஏற்படும் ஒருவித மனஅழுத்தம் உங்கள் காதலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

காதல், திருமண வாழ்வைப் பாதிக்கும் இன்செக்யூர்டு உணர்வு... அறிகுறிகள், பிரச்னைகள், தீர்வுகள்!

அந்த மனநிலையில் அவர் இருந்தபோது நீங்கள் பேசிய ஏதாவது ஒரு வார்த்தை உங்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தி பிரேக் அப்புக்குத் தூண்டியிருக்கலாம். இந்நேரத்தில் நீங்கள் அவரிடம் சென்று பேசுவதால் வெறுப்பு அதிகரிக்கவே செய்யும் என்பதால் அமைதியாக விட்டுவிடுங்கள். உங்கள்மேல் காதலும், உங்களைப் பற்றிய புரிந்துணர்வும் இருப்பின் நிச்சயம் அவர் திரும்பி வருவார்.

Love Failure
Love Failure

அப்படி வரவில்லை என்றால்... போனால் போகட்டும் விட்டுவிடுங்கள். இந்த இக்கட்டான நிலையில் ஆறுதலாகக் கூட இல்லாதவர்கள் வேறு எப்போது உடன் இருக்கப்போகிறார்கள் என்று யோசியுங்கள். உங்களைப் பற்றி யோசித்துப் பார்க்காதவர்களுக்காக நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள், உங்கள் நாய்க்குட்டி எல்லாம் எப்போதும்போலவே உள்ளனர். இடையில் உங்கள் வாழ்க்கையில் வந்த ஒருவர்தான் இப்போது பிரிந்து சென்றுள்ளனர். அவர் வந்த பின் உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள், சந்தோஷங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் வருவதற்கு முன்பும் நீங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உங்களுக்காக இருப்பவர்களைக் கொண்டாடத் தொடங்குங்கள்.

Friends
Friends

லாக்டெளனில் எல்லாருமே வீட்டில் இருப்பார்கள் என்பதால் அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். நண்பர்களுக்கு கால் செய்து உங்கள் காதல் தோல்வி பற்றிக் கூறி ஆறுதல் கேட்கலாம். உங்கள் காதலரின் நினைவை ஏற்படுத்தும் பாடல்களைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த மற்ற பாடல்களைக் கேளுங்கள்.

வாழ்வை இனிக்கச் செய்ய
இரண்டு விஷயங்கள்!

அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்களைச் சுற்றி உங்களுக்காகவே நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ரசியுங்கள். நிச்சயம் உங்கள் பழைய காதலை மறக்க முயலாதீர்கள். அது அவர்களின் நினைவை அதிகரிக்கவே செய்யும். அதுபோல் 24 மணிநேரமும் அவர்களின் நினைப்பிலேயே இருந்துவிட்டு உடனே மறக்க வேண்டும் என்பதும் இயலாத காரியம்.

love
love

அவர்கள் உங்கள் வாழ்வில் வந்ததன் காரணம் சில மாற்றங்களை ஏற்படுத்தவே. அந்த மாற்றங்கள் நடந்த பிறகு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, எதையும் 'டேக் இட் ஈசி'யாக எடுத்துக்கொள்ளப் பழகுங்கள். உங்கள் மனம் தானாகப் பக்குவமடையத் தொடங்கும்" என்றார் வசந்தி பாபு.

மக்களே... காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். அது சுமையாக மாறி விடக் கூடாது. ஒருவேளை உங்கள் காதலர் ஏதேனும் காரணங்களால் பிரிந்துசெல்ல நேர்கையில் அதனை நினைத்தே வருந்திக்கொண்டிருக்காமல், பின்னாளில் 'நினைத்துப் பார்த்து சந்தோஷப்படவும், நினைத்தவுடன் அழுவதற்கும்' அவர்கள் கொடுத்துச் சென்ற ஞாபகங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.

love
love

'ஒரு காதல் தோல்வி காணும்போதும் காதல் உண்டு' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்விலும் மற்றொரு காதல் வரும். அது நீங்கள் இழந்த சந்தோஷங்கள் அனைத்தையும் மீட்கும் என்று நம்புங்கள்!

அடுத்த கட்டுரைக்கு