Published:Updated:

நட்பின் பிரிவால் ஏற்பட்ட மனஅழுத்தம்... மீள்வது எப்படி? #NoMoreStress

அடிப்படையில் எந்த உறவுக்கும் ஆதாரமாக இருப்பது அந்த உறவில் இருக்கும் நேர்மையும் அதில் சம்பந்தப்படும் இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான். இந்த இரண்டு காரணிகளின் மீதே ஒரு உறவு கட்டமைக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் நண்பர்களிடம் பேசுங்கள்; அவர்களோடு ஊர் சுற்றுங்கள்' என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், சிலருக்கோ மனஅழுத்தம் ஏற்படக் காரணமாக இருப்பதே அந்த நட்பாகத்தான் இருக்கிறது.

Break-up in friendship
Break-up in friendship
``நான், 27 வயது இளைஞன். நானும் என் நண்பனும் இரண்டு ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். தினமும் ரயிலில் பணிக்குச் சென்றுவந்தோம். எங்களுடன் தினமும் பயணிக்கும் மற்றொருவருடன் ஒருநாள் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று முதல் என் நண்பன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, என்னுடன் சண்டைபோட்டவருடன் நண்பனாகிவிட்டான். என்னுடன் இப்போதெல்லாம் ரயிலில் பயணிப்பதில்லை. அவனிடம் நான் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ கேட்டும் பார்த்துவிட்டேன். கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை 8 மாத காலமாக என்னுடன் அவன் பேசுவதில்லை. என்னை மொத்தமாக ஒதுக்கிவிட்டான். அவன் இல்லாமல் இப்போது என்னால் வேலை, குடும்பம் என என் அன்றாட வாழ்வில் கவனம் செலுத்த முடியவில்லை. என் பணியிடத்தில் என் செயல்திறன் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் உள்ளாகியிருக்கிறேன். இதைவிட்டு நான் வெளியே வர வேண்டும். என்ன செய்வது?"
என ஒரு வாசகர் mentalhealth@vikatan.com மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார்.

`அடிப்படையில் எந்த உறவுக்கும் ஆதாரமாக இருப்பது அந்த உறவில் இருக்கும் நேர்மையும் அதில் சம்பந்தப்படும் இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான். இந்த இரண்டு காரணிகளின் மீதே ஒரு உறவு கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், அந்த உறவுக்குள் பிரிவு அல்லது முறிவுக்கான வாய்ப்புகள் உண்டாகின்றன' என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Break-up in friendship
Break-up in friendship

இந்தக் கேள்வியை உளவியல் ஆலோசகர் ஜெயமேரியிடம் முன்வைத்தோம். ``காதல் மட்டுமல்ல. எந்த வகையான உறவில் இருப்பவர்களுக்கும் நடுவில் ப்ரேக்-அப் ஏற்பட்டாலும், அதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது, அதன் விழுமியங்களை (Value) சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது அல்லது பாதுகாத்துக் கொள்ளாததே. அதாவது, உறவின் விழுமியங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது எனலாம். நம்முடைய நண்பர் ஒருவர், நம் நட்பின் விழுமியங்களை சரியாக மதிக்காதபோதுதான் அந்த உறவில் சிக்கல் ஏற்படுகிறது. அந்தச் சிக்கல், பிரிவை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தற்காலிகப் பிரிவாகவும் இருக்கலாம், நிரந்தரப் பிரிவாகவும் இருக்கலாம். அடிப்படையில் நட்பு, ஈகோ, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள், அதனால் இப்படிப்பட்ட சூழலை இன்னமும் உற்று நோக்கவேண்டும். இப்போது அந்த இரண்டு நண்பர்களையும் வைத்துப் பேசி, அவர்களுடைய பிரிவின் காரணத்தை நன்கு அலசி ஆராய்ந்தே பதிலளிக்க முடியும். அந்தக் காரணம் தெரியாமல் இதற்குத் தீர்வு காண முடியாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு