Published:Updated:

`உன் லவ்வர் இதுக்கு முன்னாடி..' - கிசுகிசுக்களிலிருந்து காதலைக் காப்பாற்ற 10 வழிகள்!

நம்முடைய நாகரிகமான கோபம்கூட நம் காதலை கிசுகிசுப்பு பேசுபவர்களிடமிருந்து காப்பாற்றும் தெரியுமா?

ஒரு காதலை பிரேக்அப்-பில் தள்ளுவதற்கான அத்தனை மோசமான தகுதிகளையும் கொண்டது, கிசுகிசு. `உன் பாய் ஃப்ரெண்டு எப்படிப்பட்டவன் தெரியுமா...' என்று காதலியின் மனதை கலைக்கப்பார்க்கும். `உன் லவ்வர் இதுக்கு முன்னாடி...' என்று மொட்டுவிட்ட காதலை குழிதோண்டி புதைத்தேவிடும். இப்படிப்பட்ட கிசுகிசுக்களில் உங்கள் காதல் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க...

1
Couple / Representational Image ( Pixabay )

துணையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

ஒரு நபருடன் காதலில் விழுவதற்கு முன்பே அவரைப் பற்றி சகலமும் தெரிந்துகொள்ள முயலுங்கள். அப்போதுதான் ஓரளவுக்காவது உங்கள் வருங்கால துணையைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். தவிர, `என் ஆளைப்பத்தி எனக்கு எல்லாம் தெரியும்' என்ற நம்பிக்கை, கிசுகிசுக்களுக்கு உங்கள் காதுகளைக் கொடுக்க விடாது.

2
Couple / Representational Image ( Pixabay )

வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள்!

காதலர்கள், பரஸ்பரம் தங்கள் துணையிடம் வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள். அடுத்தவர் கிசுகிசு பேசினால்கூட, `ஓ... அந்த விஷயமா, எனக்கு ஏற்கெனவே சொல்லிட்டாளே/னே' என்று உங்கள் காதல் துணை கெத்தாகச் சொல்கிற அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள். இந்த இயல்பிருந்தால், கிசுகிசுக்களை இருவருமே இடது கையால் கையாண்டுவிடலாம்.

3
Couple / Representational Image ( Pixabay )

பிஸியாக இருங்கள்!

வேலையில் எப்போதும் பிஸியாக இருந்தீர்கள் என்றால், கிசுகிசுப்பாளர்கள் உங்கள் பக்கமே வரமாட்டார்கள். `இவன்/ள் நாம சொல்றதைக் கேட்ட மாட்டாங்க' என்று வேறொரு காதை தேடிச் சென்றுவிடுவார்கள்.

4
Couple / Representational Image ( Pixabay )

பிஸியாக இருப்பதுபோல நடிக்கவாவது செய்யுங்கள்!

கிசுகிசு பேசுபவர்களை உங்கள் பக்கமே வரவிடாமல் செய்வதற்கு இன்னொரு ஜாலி வழியும் இருக்கிறது. அவர்கள் பத்தடி தூரத்தில் உங்களை நோக்கி வரும்போதே, வேலையே இல்லையென்றாலும் பிஸியாக இருப்பதுபோல நடிக்கவாவது செய்யுங்கள். முடியவில்லையா, மொபைல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தாவது நலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் காதல் நிச்சயம் தப்பிப் பிழைத்துவிடும்.

5
Couple / Representational Image ( Pixabay )

கிசுகிசு கேட்பதில் ஆர்வம் காட்டாதீர்கள்! 

ஒத்த இயல்புகள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது கிசுகிசு பேசுபவர்களுக்கும் பொருந்தும். உங்களுக்கு கிசுகிசுக்களை கேட்பதில் ஆர்வமிருந்தால், பேசுகிற இயல்பு கொண்டவர்கள் உங்களை நோக்கி வரத்தான் செய்வார்கள். முதலில் கிசுகிசு கேட்கிற இயல்பை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால், அடுத்தவர்களைப் பற்றி உங்களிடம் கிசுகிசுப்பவர்கள், உங்கள் காதலைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக கிசுகிசுக்கத்தான் செய்வார்கள்.

6
Couple / Representational Image ( Pixabay )

நன்கு அறிந்தவர்களும் பரப்பக்கூடும்!

உங்களைப் பற்றிய கிசுகிசுக்களை உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் பரப்பக்கூடும். `வாய் தவறி சொல்லிட்டேன்', `யதார்த்தமா சொல்லிட்டேன்' என்று தங்கள் தவற்றுக்கு சமாதானமும் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு, கவனமாக இருக்கப் பழகுங்கள்.

7
Couple / Representational Image ( Pixabay )

கோபம் காட்டுங்கள்! 

நம்முடைய நாகரிகமான கோபம்கூட நம் காதலை கிசுகிசுப்பாளர்களிடமிருந்து காப்பாற்றும் தெரியுமா? இப்படிப்பட்டவர்களிடம், `என் லவ்வர் பத்தி எனக்குத் தெரியாததைவிடவா உனக்குத் தெரியும்' என்று கோபம் காட்டுவதுகூட, மோசமான கிசுகிசுக்களில் இருந்து உங்கள் காதலை காப்பாற்றிக்கொள்கிற வழிதான்.

8
Couple / Representational Image ( Pixabay )

இது, சுலபமான வழி!

உங்கள் துணை பற்றிய வதந்திகளை ஒரு காதில் வாங்கி மறு காதில் விடலாம். இருப்பதிலேயே மிகச் சுலபமான வழி இதுதான்.

9
Couple / Representational Image ( Pixabay )

நம்பிக்கை நல்லது!

துணை மீதான உங்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையும், கிசுகிசுக்களைப் புறந்தள்ளிவிடும். அந்த நம்பிக்கை கண்மூடித்தனமானதாக இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

10
Couple / Representational Image ( Pixabay )

சொல்பவர் நலம் விரும்பியா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கிசுகிசுவைப் பகிர்வது உங்களுடைய நலம் விரும்பி என்றால், அதை உங்கள் துணையிடம் பகிர்ந்து, தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பின் செல்ல