Published:Updated:

மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...! - வைரலாகும் புகைப்படம்

ஆ.சாந்தி கணேஷ்

'ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.

couple
couple

ஆணோ, பெண்ணோ தன் துணை மீதான காதலை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற இந்தப் படமும் அப்படியொரு காதலைச் சொல்லியபடிதான் வைரலாகிக்கொண்டிருக்கிறது. மனைவி மீதான ஒரு கணவரின் பேரன்பை அருகிலிருந்து கவனித்த சக பயணி ஒருவர், இதைப் படமெடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தது வைரலாகியுள்ளது.

representational image
representational image

இப்படியொரு ஆச்சர்ய புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவரின் பெயர் கோட்னி லீ ஜான்சன். அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ ஆவார். விமானப் பயணத்தில் தான் கண்ட காட்சியைத்தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், 'ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.

அவர்கள் வெளிநாட்டு தம்பதியர். கணவர் நின்றபடி இருக்க, மனைவி கணவருடைய இருக்கையிலும் சேர்த்து நிம்மதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல... கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள்.. அந்தக் கணவர் நின்றபடியே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், கணவரின் காதலை சிலாகிக்க, இன்னும் சிலர் 'தன்னலமற்ற கணவர்' என்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர். 'சுயநலம் பிடித்தவர்' என்று தூங்கிக்கொண்டிருந்த மனைவியை சிலர்  திட்டவும்  செய்தனர். 

couple
couple
twitter.com/courtneylj

'என் கணவரை இப்படியெல்லாம் நிற்க வைக்க மாட்டேன். அவர் 10 நிமிடம் சேர்ந்தாற்போல நின்றாலே என் மனசு தாங்காது' என்று ஒரு பெண்  பதற, 'இப்படி சீட்டில் படுப்பதைவிட கணவருடைய மடியில் படுத்துத் தூங்கியிருக்கலாம் அல்லது தோளில் சாய்ந்து தூங்கியிருக்கலாம். அது இன்னும் இதமாக இருந்திருக்குமே...' என்று இன்னொரு பெண் அறிவுரையும் சொல்லியிருக்கிறார். 'பாவம் அந்த மனைவிக்கு உடல் நலம் சரியில்லைபோல' என்று ஒரு பெண் வருத்தப்பட, இன்னொருவர் 'டைட்டானிக்' பட கிளைமாக்ஸில் நாயகியைக் காப்பாற்றிவிட்டு நாயகன் தண்ணீருக்குள் இருக்கும் GIF-ஐ போட்டு செல்ஃபிஷ் என்று கமென்ட் செய்திருக்கிறார். இதனைத் தாங்க முடியாத சிலரோ, 'அது அவங்களோட சொந்த விஷயங்க. அதைப்பத்தி நாம யார் கமென்ட் செய்ய..? ஆனால், அதுவொரு நல்ல காதல் புகைப்படம்' எனப் பதிவிட்டுள்ளனர்.