Published:Updated:

`பள்ளித் தோழியைச் சந்தித்தால் தற்போதைய காதல் என்னவாகும்?' -இளைஞரின் குழப்பம் #LetsSpeakRelationship

காதல்
காதல்

'நான் பலவீனமாகத்தான் இருப்பேன். நீங்கள்தான் என்னைச் சரிசெய்ய வேண்டும்' என்ற தொனி உங்கள் கேள்வியில் தெரிகிறது.

ஸ்கூல் ரீயூனியன் இன்விடேஷன் வந்திருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை முடித்து 10 வருடங்கள் ஆகின்றன. பள்ளி நாள்களில் நான் காதலித்த வகுப்புத் தோழியும், ரீயூனியனுக்கு நிச்சயம் வருவாள். நான் தற்போது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். ஆனாலும், காலம் விலக்கியதால் தூரமாகிப்போனேனே தவிர, பழைய காதல் இன்னும் என் மனதில் ஈரம் காயாமல்தான் கிடக்கிறது.

Love
Love

இப்போது என் பிரச்னை என்னவென்றால், நான் காதலித்த பெண் ஒருவேளை இன்னும் சிங்கிளாக இருந்தால், ரீயூனியன் சந்திப்பில் என் மனம் மீண்டும் அவள் பக்கம் சென்றுவிடுமோ என்பதுதான். என்ன செய்ய..? - பெயர் வெளியிட விரும்பாத நபர்

பதில் சொல்கிறார், உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

'' 'நான் பலவீனமாகத்தான் இருப்பேன். நீங்கள்தான் என்னை சரிசெய்ய வேண்டும் ' என்ற தொனி உங்கள் கேள்வியில் தெரிகிறது. அதனால் உங்கள் பிரச்னைக்கு நான் சொல்லும் முதல் தீர்வு, உங்கள் மேல் நம்பிக்கையில்லை என்றால், அந்த நிகழ்ச்சிக்கு செல்லவே செல்லாதீர்கள்.

பள்ளி நாள்களில் பழகியவளைப் பார்த்தால் மனம் மாறிவிடுவேன் என்றால், தற்போது இருக்கிற ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் திருப்தியாக இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான், உங்கள் மனது பள்ளித் தோழியைப் பார்த்தால் மாறிவிடுமோ என்று பயப்படுகிறீர்கள்.

Love relationship
Love relationship

இன்னொரு பக்கம், எப்போதோ டீன் ஏஜில் அரும்பிய காதல் இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் பள்ளித் தோழியிடம் அப்படியே இருப்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. உங்களைப்போலவே அந்தப் பெண்ணும் வேறொரு காதல் வயப்பட்டிருக்கலாம் அல்லது காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ அவருக்கு நடந்திருக்கலாம்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கல்யாணமாகியிருந்தாலும் சரி, அவர் வேறொரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் சரி, நீங்கள் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் சரியானது. ஒரு காதலில் இருக்கிற ஆண், இந்தப் பெண்ணா, அந்தப் பெண்ணா என்று யோசிப்பதெல்லாம் மன முதிர்ச்சியில்லாத தன்மை. இத்தனை வருடங்களில், அந்தப் பெண்ணுக்கும் விருப்பு வெறுப்புகள் மாறியிருக்கும். அன்று நீங்கள் காதலித்த பெண்ணாகவே இன்றும் அவர் இருப்பார் என நீங்கள் யோசிப்பதும், அந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்வதும் சரியல்ல.

Love
Love
காதலிலும் திருமணத்திலும் ஃபீலிங் ஒண்ணுதானே... ஆனா ஏன் இந்தப் பாகுபாடு? #LetsSpeakRelationship

எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் கேள்வியிலிருந்து உங்களுக்கு அந்தப் பெண்ணின் நினைவு ரீயூனியன் இன்விடேஷன் வந்ததிலிருந்து அடிக்கடி வருகிறது என்பது புரிகிறது. அதனால்தான், இப்போதிருக்கும் காதலில் இருந்து மனம் மாறிவிடுமோ என்ற பயம் உங்களுக்கு வந்திருக்கிறது. பள்ளிப் பருவத்தில் வருவது வெறும் ஈர்ப்புதான். அது ஓர் அழகான நினைவாக அடிமனதில் இருந்தாலே போதும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
அடுத்த கட்டுரைக்கு