Published:Updated:

உடனடி மகிழ்ச்சி தருகிற உளவியல் மருந்து... அணைப்பு! #HugDay

ஹக்

ஒருவருக்கொருவர் அணைத்துக்கொள்ள உள்ளத்தில் உணர்வு தோன்றும். அந்தத் தருணங்களின் இயல்பான 'ஹக்'குகள் இருவருக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பை இன்னும் பலமாக்கும்.

உடனடி மகிழ்ச்சி தருகிற உளவியல் மருந்து... அணைப்பு! #HugDay

ஒருவருக்கொருவர் அணைத்துக்கொள்ள உள்ளத்தில் உணர்வு தோன்றும். அந்தத் தருணங்களின் இயல்பான 'ஹக்'குகள் இருவருக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பை இன்னும் பலமாக்கும்.

Published:Updated:
ஹக்

உலகம் பார்க்க வருடத்துக்கு ஒருமுறைதான் காதலர் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், காதலும் அது சார்ந்த அன்பின் வெளிப்பாடுகளும் தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியவை. காதல் மனிதர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது சகல உயிர்களுக்கும் பொதுவான உணர்வு.

ஹக்
ஹக்

காதல் எங்கும் நிறைந்திருப்பது, எல்லோருக்குமானது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை காதலின் கொண்டாட்ட நாள்கள். யெஸ், இது காதலர் வாரம். இளமை கொண்டாடும் எட்டு நாள் திருவிழா! காதலர் வாரத்தின் ஆறாம் நாளான இன்று ஹக் டே! அன்பை அணைப்பின் வழி பகிரும் நாள் இன்று!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காதலின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பது அழகு. அதில் அணைப்பின் பங்கு முக்கியமானது. முதல் காதல் எப்படி மறக்க இயலாததோ அதேபோல, முதல் அணைப்பும் மறக்க இயலாததே. அணைப்பு என்றால், அன்பின் வெளிப்பாடாக நிகழும் அணைப்பு. 'எது வந்தாலும் போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன் உனக்கு. என் தோள்கள் உன் மகிழ்ச்சிகள் சாய்வதற்கு மட்டுமல்ல; உன் துக்கங்கள் கண்ணீர் சிந்துவதற்கும்' என்று சொல்லாமல் சொல்வதற்கான ஒரு நாள்தான் 'ஹக் டே.'

ஹக்
ஹக்

கூடலுக்கு இட்டுச் சேர்த்திடும் அணைப்பைவிட, `உன்கூடவே இருக்கிறேன்' என்பதைச் சொல்லும் அணைப்பு இன்னும் அழகானது. ‘எந்தத் தருணத்திலும் உன்னுடன் இருப்பேன்’ என மொழியின் வழியாகத் தரும் உத்தரவாதத்தைவிடவும், ஓர் அணைப்பு இன்னும் அதிகமாகச் சொல்லும். காதல் உறவில் அணைப்பின் முக்கியத்துவம் பற்றியும், அது மனதிலும் மூளையிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``மனதுக்குப் பிடித்தவரை மிக நீண்ட நேரம் அணைக்கையில் மூளையில் இருக்கிற ஆக்ஸிடோசின் ஹார்மோன் வெளியேறி மனதை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த மகிழ்ச்சி ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும். அணைப்பு உடனடி மகிழ்ச்சி தருகிற ஓர் உளவியல் மருந்து என்கிறது அறிவியல். ஓர் அழுத்தமான அணைப்பு இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்கின்றன சில ரிலேஷன்ஷிப் ஆய்வு முடிவுகள்.

ஹக்
ஹக்

கோபத்தில் இருப்பவர், அச்சத்தில் இருப்பவர், அழுகிற குழந்தை என எவரையும் ஓர் அணைப்பின் மூலம் ஆசுவாசப்படுத்திவிடலாம். இந்த நாளில், இந்த நேரத்தில் எனத் திட்டமிட்டு `ஹக்' செய்யவேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் அணைத்துக்கொள்ள உள்ளத்தில் உணர்வு தோன்றும்.

அந்தத் தருணங்களின் இயல்பான அணைப்புகள் இருவருக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பை இன்னும் வலுவாக்கும். இருவருக்குள் ஒரு கம்ஃபர்ட் வட்டத்தை உருவாக்கிக்கொள்ள அணைப்பு எப்போதும் கைகொடுக்கும்" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

ஹக்
ஹக்

தனிமை, நட்பு வட்டம், உறவு வட்டம், பொதுவெளி என எந்தச் சூழலிலும் காதல் துணையின் அரவணைப்பு தனித்துவமானதுதான். நாம் இருக்கிற இடத்தின் இனம்புரியாத ஏதோவொரு வெறுமையைக் கண்டறிந்து நிரப்புவது, துணையின் அணைப்பால் மட்டுமே சாத்தியம். பொதுவெளியில் பரிமாறிக்கொள்ளும் கண்ணியம் மீறாத அணைப்பு கலாசார சீரழிவு அல்ல; அது அன்பின், காதலின் கட்டற்ற வெளிப்பாடு.

துணையின் அணைப்பில் தலைசாய்த்துக்கொள்ளும்போது, காய்ச்சல் வெப்பம்கூட கொஞ்சம் தணிகிற அபூர்வம் காதலில் நடக்கும். தோல்வியில் ஆறுதலையும், வெற்றிக்கான ஆற்றலையும் தருவதாலேயே அணைப்பிலும், அணைப்பின் நினைவுகளிலும் வாழ்கின்றன அத்தனை காதல்களும்.

ஹக்
ஹக்

இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்ல, தம்பதிகளும் நீ....ண்ட அணைப்பின் மூலம் தங்களுடைய அன்பைச் சொல்லலாம், காதலைப் பரிமாறிக்கொள்ளலாம்.