Published:Updated:

`போர் பூமியில் இருந்து பரிசாக வந்த காபி மெஷின்!' - இந்தியா - உக்ரைன் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை

இந்திய உக்ரைன் ஜோடி அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா ( Instagram )

போர் தொடங்கியதால் அனா உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். படையெடுப்புத் தொடங்கியவுடன் உக்ரைனிய தலைநகர் கீவில் உள்ள பதுங்குக் குழியில் பல நாள்கள் மறைந்திருந்த அனா, பல நெருக்கடிகளைச் சமாளித்து போலாந்து நாட்டைச் சென்றடைந்தார்.

`போர் பூமியில் இருந்து பரிசாக வந்த காபி மெஷின்!' - இந்தியா - உக்ரைன் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை

போர் தொடங்கியதால் அனா உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். படையெடுப்புத் தொடங்கியவுடன் உக்ரைனிய தலைநகர் கீவில் உள்ள பதுங்குக் குழியில் பல நாள்கள் மறைந்திருந்த அனா, பல நெருக்கடிகளைச் சமாளித்து போலாந்து நாட்டைச் சென்றடைந்தார்.

Published:Updated:
இந்திய உக்ரைன் ஜோடி அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா ( Instagram )

ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில், இந்திய - உக்ரைன் ஜோடியிடையே காதல் மலர்ந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அனுபவ் பாசின் (33), மற்றும் உக்ரைன் பிரஜையான அனா ஹாரோடெட்ஸ்கா (30) இருவரிடையே மலர்ந்த அந்தக் காதல்... டும் டும் டும் நிகழ்வுக்கு நகர்ந்துள்ளது.

அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா
அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா
Instagram

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2019-ம் ஆண்டு அனா இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது அனுபவிடம் நண்பராகி இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அதன் பிறகு, சொந்த நாட்டுக்குத் திரும்பியதும் வாட்ஸ்அப் சாட்டில் பேசத் தொடங்கி யிருக்கின்றனர். 2020-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அனா. அப்போது இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால், கோவிட் லாக்டௌன் அமல்படுத்தப் பட்டதால் சொந்த நாடு திரும்பினார் அனா. பெருந்தொற்றுக் கால பயணக் கட்டுப்பாடுகளால் இன்டர்நெட் மட்டுமே இவர்கள் காதலை வளர்த்தெடுத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இருவரும் துபாயில் சந்தித்துக்கொண்டனர். ``லாக்டௌனின்போது அனாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்தேன். இதுவே எங்களிடையே இருந்த நட்பை காதலாக்கியது. நான்காவது முறையாக மீண்டும் இந்தியாவில் நாங்கள் சந்தித்தபோது என் அம்மாதான் அனாவிடம், என் மகனைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டார். எனக்குப் பதிலாக என் அம்மாவே அனாவிடம் புரொப்போஸ் செய்துவிட்டார்" என்கிறார் அனுபவ்.

அம்மாவுடன் அனா
அம்மாவுடன் அனா
Instagram

அதன்பின் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து அதற்கான ஆவணங்களைத் தயார்செய்துகொண்டிருந்தனர் இருவரும். அப்போதுதான் ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது.

போர் தொடங்கியதால் அனா உக்ரைனை விட்டு வெளியேறி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். படையெடுப்பு தொடங்கியுவுடன் உக்ரைனிய தலைநகர் கீவில் உள்ள பதுங்குக் குழியில் பல நாள்களுக்கு மறைந்திருந்தார் அனா. பல நெருக்கடிகளைச் சமாளித்து உடன் பணியாற்றியவர்களின் உதவியுடன் அனா போலந்து நாட்டைச் சென்றடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு வாரங்கள் போலந்திலிருந்து விசா பெற முயன்றபோது, இறுதியாக இரண்டு வருடங்களுக்கு இந்திய விசா கிடைத்து விட்டது. `ராஜா ராணி' பட க்ளைமாக்ஸ் காட்சி போல டெல்லி விமான நிலையத்தில் அனுபவ் தன் காதலியை க்யூட்டாக புரொப்போஸ் செய்து வரவேற்றார். மேளதாளத்துடன் அவர்கள் இணையும் காட்சியைப் பார்த்து நெட்டிசன்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

``நான் உக்ரைனில் இருந்தபோது போரால் வீடுகளை இழந்தவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பிற உதவிகளைச் செய்வதற்கான தன்னார்வப் பணிகளில் ஆன்லைன் மூலம் ஈடுபட்டு வந்தேன். போர் நிறைவடையும் வரை அந்தப் பணிகளைத் தொடர்வேன். நான் உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு வாரத்துக்குப் பிறகுதான் என் அம்மா வெளியேற முடிந்தது. ஆனால், வயது மூப்பின் காரணமாக என் பாட்டி சொந்த கிராமத்திலிருந்து வெளியேற முடியவில்லை. நான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டியையும் பாட்டியிடம்தான் விட்டு வந்திருக்கிறேன்" என்கிறார் அனா.

அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா
அனுபவ் பாசின் மற்றும் அனா ஹாரோடெட்ஸ்கா
instagram

அனா இந்தியாவுக்கு, தன் பாட்டி கல்யாணப் பரிசாக கொடுத்த காபி மெஷினை எடுத்து வந்தாராம். அனுபவ், `உனக்கு என்ன பைத்தியமா? போர் நடந்து கொண்டிருக்கிறது. நீ காபி மெஷினை எடுத்து வந்திருக்கிறாய்...' என்று கேட்டதற்கு அனா, `என் பாட்டி நமக்காக வழங்கிய கல்யாணப் பரிசு. அதை நான் விட்டு வரமாட்டேன்' என்றாராம். தற்போது திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் விண்ணைத்தாண்டி வந்த இந்தக் காதல் ஜோடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism