Published:Updated:

ஜென்டில் பேரன்டிங், ஏர்லி லேர்னிங், மான்ட்டிசரி பேரன்டிங்... குழந்தை வளர்ப்பில் எது பெஸ்ட்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இன்ஸ்டாவில் பேரன்ட்டிங் பகிரும் அம்மா
இன்ஸ்டாவில் பேரன்ட்டிங் பகிரும் அம்மா ( Instagram )

கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற 'ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களின்' செயல்பாடுகள் ஏதுமின்றி, மிகவும் நிதானமாகக் குழந்தைகளை வளர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

'குழந்தை வளர்ப்பு' என்றாலே பதற்றம், பயம் என அதுவரை உணராத உணர்வுகள் புதிய பெற்றோர்களைத் தொற்றிக்கொள்ளும். தூக்கமின்மை, களைப்பு போன்ற கடுமையான நாள்களை இனிய நிமிடங்களாக மாற்றும் ஏராளமான குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா. கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற 'ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களின்' செயல்பாடுகள் ஏதுமின்றி, மிகவும் நிதானமாகக் குழந்தைகளை வளர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

Ranjani
Ranjani
Instagram

தான் கருவுற்ற நாளிலிருந்து, தன்னுடைய எதிர்பார்ப்புகளையும் அனுபவங்களையும் தவறாமல் சமுக வலைதளங்களில் பதிவிடும் ஏராளமான 'சூப்பர் மாம்'கள் தற்போதைய காலகட்டத்தில் உள்ளனர். 'இதற்கெல்லாம் எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது' என்று முணுமுணுக்கும் அம்மாக்களும் வலைதளங்களில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், 'ஏன் இவன் கொஞ்சம் நேரம்கூட அமைதியா இருக்கவே மாட்டேங்குறான்... நீங்க வீட்டுல நிறையா பேசுவீங்களோ என்று என்னைப் பலரும் கேட்கிறார்கள். அதற்கான பதில்...' என்று ஆரம்பித்த அந்த வித்தியாச இன்ஸ்டா பதிவின் எனர்ஜெடிக் மாம் ரஞ்சனியைச் சந்தித்தோம்.

குழந்தை வளர்ப்பு பற்றித் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதற்கான காரணம் என்ன?

குழந்தை வளர்ப்பு தனித்தன்மையானது. அதில் தாய்க்கும் தந்தைக்குமே வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும். குழந்தை பிறந்ததும், சென்ற தலைமுறையினரின் அட்வைஸ், இன்றைய தலைமுறையினரின் பார்வை எனக் குழந்தை வளர்ப்பில் ஏராளமான பரிந்துரைகள் குவியும். மற்றவர்களின் வளர்ப்பு முறை பார்த்து, எதை நாம் பின்பற்றுவது போன்ற குழப்பங்கள் எழும். அப்படிப்பட்ட குழப்பத்தில் நானும் இருந்தேன். அந்தச் சமயத்தில் ஆரம்பித்ததுதான் சரியான 'பேரன்டிங்' எது என்பதற்கான என்னுடைய தேடுதல் வேட்டை.

Tanvik
Tanvik
Instagram

குழந்தை வளர்ப்பு முறை பற்றி ஏராளமான ஆராய்ச்சி வேலைகளில் இறங்கினேன். அவற்றில், ஜென்டில் பேரன்டிங் (Gentle Parenting), ஏர்லி லேர்னிங் (Early Learning), மான்ட்டிசரி பேரன்டிங் (Montessori Parenting) போன்றவற்றைப் பற்றி அறிந்தேன். முழுமையாக இல்லையென்றாலும், 80 சதவிகிதம்வரை அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். 3 வயதான என் மகன் தன்விக், அறிவாற்றலோடு வேகமாக வளர்வதைக் கண்முன்னே பார்க்கிறேன். என்னைப் போன்று குழப்பத்தில் இருக்கும் அம்மா அப்பாக்களுக்கு என் அனுபவ பகிர்வு நிச்சயம் உதவும் என்ற எண்ணத்தில்தான் இன்ஸ்டாவில் இன்ஸ்டன்ட்டாக அப்டேட் செய்யத் தொடங்கினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த கேள்விக்குமுன், "நானாக்கு (எனக்கு) பசிக்குது மம்மி" என்று தன்விக் செல்லமாக அம்மாவிடம் சொல்ல, "டேபிள் மேல பழங்கள் இருக்கு. போய் சாப்பிடு டேனி (தன்விக்கின் செல்லப் பெயர்), அம்மா வந்துடுறேன்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார் ரஞ்சனி.

Tanvik with Ranjani
Tanvik with Ranjani
Instagram

ஏர்லி லேர்னிங்' என்றால் என்ன?

நம்ம தலைமுறையினர் A,B,C,D... ஒண்ணு, ரெண்டு, மூணுலாம் தலையில் குட்டு வாங்காமல் படித்திருக்கவே முடியாது. ஆனால், அப்படி எந்தவித வலியையும் பரிசாகப் பெறாமல், குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருள்களைக்கொண்டு படிக்கும் முறைதான் ஏர்லி லேர்னிங். எண்களுக்கும் எண்ணுவதற்குமான வித்தியாசம்தான் இந்த வகைப் படிப்பு. அவர்களுக்கு வார்த்தை வடிவங்கள் தெரியாது. ஆனால், பொருள்களின் வடிவம் மற்றும் எண்ணிக்கை தெரியும். என் டேனி உங்களைவிட நன்றாக எண்ணுவான்" என்றதும், தானாகவே முன்வந்து பிழையில்லாமல் ஒன்று முதல் பத்து வரை பாட்டாகவே பாடினான் டேனி.

Tanvik
Tanvik
Instagram

தொடர்ந்து, "பொதுவாகவே குழந்தைகள் 2-லிருந்து 6 வயதுவரை மிகவும் சென்சிடிவ்வாக இருப்பார்கள். அதிலும் படிப்பு விஷயத்தில் கேட்கவே வேண்டாம். இதுபோன்ற சமயத்தில் அவர்களை மிரட்டியோ கட்டுப்படுத்தியோ படிக்க வைக்க முயன்றால் நிச்சயம் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வெறுமையான உணர்வு என் டேனிக்கு இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான் என்னை வெவ்வேறு கல்வி முறைக்கு மாற்றியது. என் பேபி பேசுவது. படிப்பது, பாடுவது எல்லாமே அவனுடைய சொந்த ஆர்வத்தால் மட்டுமே.

Tanvik
Tanvik
Instagram

நான் எதையும் கட்டாயப்படுத்தி அவனைச் செய்யச் சொன்னதேயில்லை. அவனுக்குச் சிறந்த வழிகளைக் காட்டினேன். அதை அவன் முழுமனதோடு பின்பற்றிக்கொண்டிருக்கிறான். அதில் அவன் மேன்மேலும் ஆர்வமுடன் பயில்வதால், அவனை உற்சாகப்படுத்திக்கொண்டு மட்டுமே வருகிறேன். நிச்சயம் இது எல்லா தாய், தந்தைகளும் பின்பற்றினால், நல்ல பலன் கிடைக்கும்" என்றதும் தோட்டத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் தன்விக்.

"அழுக்காகிடுச்சு, வாஷ் பண்ணுங்க அம்மா" என்று தன் தாயிடம் அன்பு கட்டளையிட்டான் தன்விக்.

'மான்ட்டிசரி' பேரன்டிங் முறை பற்றிச் சொல்லுங்கள்?

காலையில் எழுந்ததும், முதலில் காபி குடிக்கலாமா, குளிக்கலாமா என்பதில் தொடங்குகிறது நம் எண்ணங்களின் குழப்பம். எப்போது என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பல நேரங்களில் நம்மிடம் இருக்காது.

Ranjani and Tanvik
Ranjani and Tanvik
Instagram

பிறக்கும்போது தனித்தன்மையான அறிவோடுதான் அனைவரும் பிறக்கிறோம். ஆனால், நம் வளர்ப்பு மற்றும் கல்விமுறை, நம் தனித்திறமையை ஒதுக்கி கண்மூடித்தனமாக ஒரேகோட்டில் பயணிக்கக் கட்டாயப்படுத்துகிறது. இதுபோன்ற செயல்கள் நம்மிடமிருக்கும் திறமையை முற்றிலும் அழித்துவிடுகின்றன. இந்த நிலை, சிறிய தோல்வியைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளிவிடும். இதுபோன்ற பிரச்னைகள் தன்விக்குக்கு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மான்ட்டிசரி வழி கல்விமுறையைப் பின்னப்பற்றுகிறேன்.

3 வயதுதான் ஆகிறது ஆனால், என்னுடைய எந்த உதவியும் இல்லாமல் அவனே சாப்பிடுவான், குளிப்பான். பொம்மைகளோடு விளையாடிவிட்டு அவனே சமத்தா அடுக்கி வைப்பான். அவற்றை எடுத்து வைக்கவில்லை என்றால் நான் எடுத்து வைத்துவிடுவேன் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

Mom Ranjani and Son Tanvik
Mom Ranjani and Son Tanvik
Instagram

ஆனால், எனக்கு அந்த வேலையைக் கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பான். சுதந்திரமாக இருப்பான். ஆனால் அதற்கும் சில எல்லைகள் உண்டு. அதையும் அவன் பின்பற்றுவான். குழந்தைகள் இயற்கையோடு இணைந்திருப்பவர்கள். அதைதான் இந்த மான்ட்டிசரி பாடம் கற்பிக்கிறது. இயற்கையோடு ஒன்றியிருக்கப் பழக்கப்படுத்துகிறது.

"அம்மா... நானாக்கு தூக்கம் வருது" என்று சிணுங்கிய டேனியை தாலாட்டோடு படுக்கையில் படுக்க வைத்துவிட்டுத் தொடர்ந்தார் ரஞ்சனி.

ஜென்டில் பேரன்டிங் பற்றி?

சொன்ன பேச்சு கேட்காததற்கு, பளார் பளார் என்று அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு இருக்கிறது. ஆனால், ஜென்டில் பேரன்டிங் அப்படியல்ல. ஒரு விஷயத்தைச் செய்யக் கூடாது என்று நாம் குழந்தைகளிடம் சொல்லும்போது, அதற்கான காரணம் என்ன என்பதையும் மெள்ள மெள்ளக் கூறி அதன் விளைவுகளைப் புரிய வைப்பதே ஜென்டில் பேரன்டிங். ஆரம்பத்தில் அவர்களுக்கு எதுவும் புரியாது. அடம்பிடிப்பார்கள். அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

Tanny
Tanny
Instagram

ஆனால், குறைந்தது 10 முறையாவது பொறுமையாக அவர்களிடம் சொல்லும்போது, ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் அவ்வளவு அழகாகப் புரிந்துகொள்வார்கள் நம் வீட்டு வாண்டுகள். அவர்களின் செயல்களைப் பார்த்து நீங்களே பூரித்துப்போவீர்கள். அப்படிப் பூரித்தபோது எடுத்ததுதான் இந்தப் புகைப்படம்" என்று மெய்சிலிர்க்கக் கூறி கியூட்டான புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.

இந்த வளர்ப்பு முறைகளில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

இதுபோன்ற வளர்ப்பு முறைகளில் பெற்றோர்களின் பங்களிப்பு மட்டுமல்ல, வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தால், அவர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். அவர்கள் வழக்கமான முறையில் அவர்களை வழிநடத்தினால், மேலும் குழந்தைகள் குழப்படைந்துவிடுவார்கள்.

Tanny cooks
Tanny cooks
Instagram

உதாரணத்துக்கு, வயதானவர்கள் அதிகமாக டிவி பார்ப்பார்கள். இப்படிச் செய்தால் குழந்தைகளும் அதற்குப் பழகிவிடுவார்கள். அப்படி இல்லாமல், குழந்தைகளோடு இணைந்து விளையாடுவது, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிச்சயம் அவர்கள் அவற்றை விரும்பிச் செய்வார்கள். எங்கள் வீட்டில் எப்போதாவது நான் மொபைல் எடுத்துப் பார்த்தால்கூட, 'நானுகூட வந்து விளையாடு அம்மா" என்று செல்லமாக மிரட்டுவான். முடிந்தவரை தேவையில்லாத தீய விஷயங்களுக்குப் பழக்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்.

அடம்பிடிக்கும் நேரத்தில் என்ன செய்வீர்கள்?

Ranjani and Tanvik
Ranjani and Tanvik
Instagram

எதற்காக அடம்பிடிக்கிறான் என்பதை முதலில் கவனிப்பேன். நல்ல விஷயமாக இருந்தால் நான் அவன் பக்கம் சென்றுவிடுவேன். இல்லையென்றால் பொறுமையாக எடுத்துச் சொல்லி, அதற்கான மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சி செய்வேன். என் பையனுக்குப் பிடித்த காய்கறி உருளைக்கிழங்கு இல்லை... 'வெண்டைக்காய்'. அதுவும் தானாகவே விரும்பிக் கேட்பான்" என்றார் மெல்லிய குரலில். டேனி விழித்துக் கொண்டால் வெண்டைக்காய் கேட்பானே... அன்றைக்கு வீட்டில் வெண்டைக்காய் இல்லையாம்!

உங்களுடைய பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

Ranjani with her Mom
Ranjani with her Mom
Instagram

என் அம்மா அப்படியே ஷாக் ஆகிட்டாங்கன்னுதான் சொல்லணும். 'உன்னால மட்டும்தான் இப்படியெல்லாம் பண்ண முடியும். இவ்வளவு பொறுமையா என்னால முடியாது' என அடிக்கடி சொல்வாங்க. அப்பாவுக்கு முழுமையான உடன்பாடு இல்லையென்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

உங்கள் கணவர் பற்றி?

Tanvik family
Tanvik family
Instagram
``உன் சேட்டைக்கு இல்லையாம்மா ஒரு எண்டு..!" - அம்மா எழுதும் மகள் புராணம் #MyVikatan

அவருக்குச் சில விஷயங்கள் புரியும், பல விஷயங்கள் புரியாது. ஆனால், நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார். இதுபோன்ற வளர்ப்பு முறைக்கு நேரம், பொறுமை மிகவும் அவசியம். அவருக்கு இரண்டுமே குறைவு. அதனால், அவர் பின்பற்ற சில காலங்கள் தேவைப்படும். அதுமட்டுமில்லை, அவருக்கும் சேர்த்து நானே அவ்வளவு பேசுவேன் தன்விக்குடன்" என்று ரஞ்சனி கூறியபோதுதான் புரிந்தது, தன்விக் ஏன் இவ்வளவு பேசுகிறான் என்று! நாள் முழுவதும் நம்முடன் பயணித்த ரஞ்சனிக்கு நன்றி கூறிவிட்டு, உறங்கிக்கொண்டிருக்கும் டேனியைப் பிரிய மனமின்றி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு