Published:Updated:

ஸ்வீட் ஃபேமிலி முதல் ஜாய்ன்ட் ஃபேமிலிவரை... வாசகர்களின் `குடும்ப தின' பகிர்வு! #VikatanAlbum

வாசகர் குடும்பம்
வாசகர் குடும்பம்

வாசகர்கள் பலரும் ஷேர் செய்ததில் விகடன் தேர்ந்தெடுத்தவற்றை ஆல்பமாய் இங்கே பதிவு செய்திருக்கிறோம்.

லகமே மே 15 அன்று சர்வதேச குடும்பதினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தது. இந்த தினத்தை நம் வாசகர்கள் மறக்காத தினமாய் ஆக்குவதற்கு ஐடியா செய்தோம். கொண்டாட்டத் தருணத்தை அழகான புகைப்படமாகப் பதிவுசெய்து அனுப்புமாறு விகடன் வாசகர்களைக் கேட்டிருந்தோம்.

குடும்பம் - லாக்டௌன்
குடும்பம் - லாக்டௌன்

நம் வாசகர்களும் குடும்ப தினத்தைக் கொண்டாடிய புன்னகையோடு அதை மறக்காமல் நமக்குப் புகைப்படங்களாய் அனுப்பியும் வைத்தார்கள். செய்திக் கட்டுரையை வெளியிட்ட நொடியிலிருந்து புகைப்படங்கள் விகடன் மெயிலுக்கு வந்த வண்ணம் இருந்தன.

சர்வதேச குடும்ப தினம்... ஃபேமிலி செல்ஃபி எடுத்து விகடனோடு கொண்டாடுங்கள்!

வந்திருந்த பெரும்பாலான புகைப்படங்கள் மூத்த தலைமுறை, இளைய தலைமுறை எனக் கூட்டுக் குடும்பமாய் அமைந்திருந்தன. சில குடும்பங்கள் ஸ்வீட் சிம்பிள் ஃபேமிலியாக இருந்தன.

வீட்டிலேயே பத்திரமாக இருந்து குடும்ப தினத்தைக் கொண்டாடிய ஸ்வீட் மொமென்ட்டை குடும்பப் புகைப்படங்களாக வாசகர்கள் பலரும் ஷேர் செய்ததில் விகடன் தேர்ந்தெடுத்தவற்றை மட்டும் ஆல்பமாய் இங்கே பதிவு செய்திருக்கிறோம்.

சர்வதேச குடும்ப தினத்தை வீட்டிலிருந்தே கொண்டாடிய விகடன் வாசகர்கள்... போட்டோ ஆல்பம்!

குடும்ப தினத்தொடு சேர்த்துப் பாட்டியின் பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடும் குட்டிப்பேரன், மொட்டைமாடியில் ஜாலியாய் க்ளிக்கிக்கொண்ட கியூட் ஃபேமிலி, வீட்டுக்கெதிரே மூடிய பார்க் அருகே கொஞ்சம் ரிலாக்ஸாய் துருதுரு சுட்டிகளுடன் `ஸ்மைல் ப்ளீஸ்'... இப்படிக் கதம்பமாகவும் வண்ணக் காட்சிகளாகவும் தெரிந்தன அத்தனை புகைப்படங்களும்.

நமது மகிழ்ச்சியை அடுத்தவருக்கும் பகிர்வதுதானே அர்த்தம் நிறைந்த வாழ்வு... பகிர்ந்திருக்கிற உங்கள் மகிழ்ச்சி பல மடங்காய் பெருகட்டும், வாசகர்களே!

அடுத்த கட்டுரைக்கு