Published:Updated:

தாம்பத்தியம் சலிக்கிறதா? நீங்கள் இதை முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை S2 E10

Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

``திருமணமான ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு செக்ஸ் என்பது தினமும் பல் தேய்ப்பதுபோல வழக்கமான ஒரு விஷயமாகிவிடும். அப்போது, தாம்பத்திய உறவில் திருமணமான புதிதில் இருந்தது போன்ற எந்த த்ரில்லும் இருக்காது. ஆசை உணர்வுகளும் குறைந்துவிடும்."

தாம்பத்தியம் சலிக்கிறதா? நீங்கள் இதை முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை S2 E10

``திருமணமான ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு செக்ஸ் என்பது தினமும் பல் தேய்ப்பதுபோல வழக்கமான ஒரு விஷயமாகிவிடும். அப்போது, தாம்பத்திய உறவில் திருமணமான புதிதில் இருந்தது போன்ற எந்த த்ரில்லும் இருக்காது. ஆசை உணர்வுகளும் குறைந்துவிடும்."

Published:Updated:
Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

ஜோதிகா நடித்த `காற்றின் மொழி' படத்தின் காட்சி ஒன்று. நாயகன் விதார்த், பழுதான தொலைக்காட்சியை சரிசெய்ய புகார் கொடுத்து பல நாள்களாகியும் மெக்கானிக் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அதற்காக கோபப்படுகிற விதார்த்தை நோக்கி, `நம்ம ஹனிமூன்ல டிவி ரிப்பேர் செய்ய வந்த மெக்கானிக்கை ரூமுக்குள்ள வராதேன்னு எப்படி விரட்டுனே நீ' என்பார் ஜோதிகா. `ஆமா, அப்போ டிவி பழசு; நீ புதுசு. இப்போ டிவி புதுசு; நீ பழசு...' என்று கிண்டல் செய்வார் விதார்த். திருமணமான சில வருடங்களில் எல்லா தம்பதியருக்கும் தோன்றுகிற உணர்வுதான் இது. சரி, தாம்பத்திய உறவு சலிப்படையாமல் இருக்க என்ன செய்யலாம்? சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் சொல்கிறார்.

காற்றின் மொழி
காற்றின் மொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தாம்பத்திய உறவு சலிப்படையாமல் இருக்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, ஓரல் செக்ஸ். தாம்பத்திய உறவில் இன்னமும் புதிராகவே இருக்கிற இந்த முறையை தாம்பத்திய உறவின் அற்புதம் என்றே சொல்லலாம். திருமணமான ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு செக்ஸ் என்பது தினமும் பல் தேய்ப்பதுபோல வழக்கமான ஒரு விஷயமாகிவிடும். அப்போது, தாம்பத்திய உறவில் திருமணமான புதிதில் இருந்தது போன்ற எந்த த்ரில்லும் இருக்காது. ஆசை உணர்வுகளும் குறைந்துவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை அறிவியல்பூர்வமாகவும் சொல்லலாம். திருமணமான புதிதில் நம் மனதிலும் உடலிலும் பரவசமொன்று இருந்து கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதற்கு காரணம் நம் உடலில் இருக்கிற பினைல் எத்திலமின் (Phenylethylamine) என்கிற ஹார்மோன்தான். ஒரு புதிய பொருளை வாங்கும்போதும்கூட இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமிருக்கும். புது செல்போன் வாங்கினால் சில நாள்கள் எந்நேரமும் போனில் எதையாவது தேடிக்கொண்டிருப்பதற்கு காரணமும் பினைல் எத்திலமின்தான். கொஞ்ச நாள்களில் அதன் மீதான ஆசை குறைய குறைய ஹார்மோன் சுரப்பும் குறைந்துவிடும்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

நாம் தாம்பத்திய உறவுக்கு வருவோம். செக்ஸில் ஆர்வம் குறைந்து, அதன் தொடர்ச்சியாக துணை மீதான ஆர்வமும் குறைந்தவுடன் சிலர் வாழ்க்கைத்துணையையே மாற்றி விடுகிறார்கள். இது தனி மனிதர்களைப் பொறுத்தும் அவரவர் நாட்டுக் கலாசாரத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. வாழ்க்கைத்துணையை மாற்றுதல் திருமண உறவுக்கு நல்லதல்ல. கூடவே, பால்வினை நோய்கள், தேவையற்ற கர்ப்பம், தேவையற்ற பிரச்னைகள் என வாழ்க்கையே சிதைந்துவிடலாம். இதற்கு மாற்றாக, செக்ஸில் நிலையை மாற்றலாம். அதில் `ஓரல் செக்ஸ்' முக்கியமான ஒரு நிலை. கணவர்களுக்கு வித்தியாசமான உணர்வு கிடைக்கும். பெண்களுக்கோ உச்சக்கட்டம் அடைவதில் எந்தத் தடையும் இருக்காது.

90 சதவிகிதம் பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைவதில் பிரச்னை இருக்கிறது. அவர்களுக்குப் பெண்ணுறுப்பு என்பது இனப்பெருக்க உறுப்பாக இருக்கிறது. கிளிட்டோரிஸ்தான் பாலுறுப்பு. அங்கு விரலால் தூண்டும்போது எரிச்சலோ, காயமோ ஏற்படலாம். அப்போது ஓரல் செக்ஸ் சரியாக இருக்கும். `இப்படியெல்லாம் செய்வாங்களா' என்கிற பெண்களின் கூச்சமும், ஆண்களின் அறியாமையுமே பலரும் ஓரல் செக்ஸில் ஈடுபடாமைக்கான காரணங்களாகும்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

ஓரல் செக்ஸால் ஏதாவது பிரச்னை வருமா என்றால், உடலுறவின் மூலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றனவோ, அவை அத்தனையும் ஓரல் செக்ஸிலும் உண்டு. எச்சில் மூலமாக ஹெச்.ஐ.வி-கூட பரவலாம். இதுவே, கணவன் - மனைவி இடையே என்றால் பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்.

ஓரல் செக்ஸில் தொண்டை புற்றுநோய் வருவதற்கு சிறிய அளவில் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது மிக மிக அரிதான பிரச்னை என்பதால், அதை நினைத்து பயப்படத் தேவையில்லை'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!