சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் ஷர்மிளா- ஆஷ்லி
``குழந்தைகள் விஷயத்தில் பெரும்பாலான பெற்றோர், அதீத பாதுகாப்புடன் நடந்துகொள்வார்கள். குழந்தைகள் வளர்ந்து, பதின்ம வயதுக்கு வந்த பிறகும் அவர்களைக் குழந்தைகளாகவே அணுகுவார்கள். அவர்களுக்கு சின்னதாக ஓர் அடியோ, காயமோ படக்கூடாது, வலியோ, சோகமோ, நிராகரிப்போ, ஏமாற்றங்களோ, தோல்வியோ, மோசமான அனுபவங்களோ நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் அதீத எச்சரிக்கையுடன் இருப்பார்கள். பெற்றோரின் இத்தகைய நடவடிக்கையால் பிள்ளைகள் எந்தச் சூழலுக்கும் தயாராகாதவர்களாகவே வளர்வார்கள். குழந்தைகளுக்கு எது நடந்தாலும் பயந்து நடுங்குவார்கள். நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என பயப்படுவார்கள்.
குழந்தைகளை சுதந்திரமானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?
அதீத பாதுகாப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள். பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு பெற்றோர், பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதன் மூலம் உண்மையில் பிள்ளைகளின் தன்னம்பிக்கையைச் சிதைக்கிறார்கள். இதை பெரும்பாலான பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். பிள்ளைகளை சுயமாக இயங்க விடுங்கள். பெற்றோராக அதை அனுமதியுங்கள். பிள்ளைகளை வளர விடுங்கள். அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன், சுயம் மிக்கவர்களாக இயங்கும்படி வளர்க்கப் பாருங்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஓவர் பாதுகாப்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்...
அறிவாற்றல் திறன் இன்மை
ரிஸ்க் எடுப்பதில் பயம்
மனநல பிரச்னைகள்
தன்னம்பிக்கையின்மை
சமூகதிறன்கள் இன்றி வளர்தல்
மூர்க்கத்தனம்
எது சிறந்த வளர்ப்புமுறை என்ற கேள்வியும் தேடலும் பல பெற்றோருக்கும் இருக்கும். குழந்தைகள் சுயமாக சிந்தித்து, சுதந்திரமாக இயங்குபவர்களாக வளர வேண்டும் என நினைப்போர், அதிகாரபூர்வ வளர்ப்புமுறையைப் பின்பற்றலாம். அதென்ன அதிகாரபூர்வ வளர்ப்புமுறை?

பிள்ளைகளின்மீது அக்கறை கொண்ட பேரன்ட்டிங் ஸ்டைல் இது. பிள்ளைகள் எளிதில் அணுகக்கூடிய பெற்றோர்களாக இவர்கள் இருப்பார்கள். இந்தப் பெற்றோர் வளர்க்கும் பிள்ளைகள் தற்சார்பும் சுயஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு செயலையும் சுயமாக யோசித்து அதற்கேற்ப முடிவெடுக்கும்படி வளர்க்கப்படுவார்கள். இந்த வகை பெற்றோருக்கும் பிள்ளைகளின் மீது எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனாலும், அவற்றை பிள்ளைகளுக்குத் தெளிவாக உணர்த்திவிடுவார்கள். அதே நேரம் அந்த எதிர்பார்ப்புகள் குறித்த தங்கள் கருத்துகளை பிள்ளைகளும் பெற்றோரிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள்.
இந்த வகை பேரன்ட்டிங் ஸ்டைலின் மூலம் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்கலாம் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஸ்டைல் பின்பற்றப்படும் வீடுகளில் அந்த வீட்டுக்கான விதிகள் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கும். அதற்கான காரணங்களும் விவாதிக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்டைலை பின்பற்றும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உரையாடலில் எப்போதும் சிக்கல் இருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க பெற்றோருக்கு சில ஆலோசனைகள்...
முயற்சிகளை ஊக்கப்படுத்துங்கள்
பிள்ளைகளை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே... ரிஸ்க் என எப்போதும் எச்சரித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து புதிய விஷயங்களை முயற்சி செய்ய அனுமதியுங்கள். தன் எல்லைகளைத் தாண்டி வெளியே வர பழக்குங்கள். அதாவது கம்ஃபர்ட் ஸோனிலிருந்து வெளியே வர கற்றுக்கொடுங்கள்.
பங்களிப்பை ஊக்கப்படுத்துங்கள்
குடும்பமோ, வெளியிடங்களோ... குழு நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்ளவும் அப்படிப் பங்கேற்கும் இடங்களில் அவர்களால் அவர்கள் வயதுக்கேற்ற பங்களிப்பைச் செய்யவும் ஊக்கப்படுத்துங்கள்.
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை ஊக்கப்படுத்துங்கள்
ஒரு பிரச்னை ஏற்படும்போது அவர்களுக்கு ரெடிமேடாக அதற்கான தீர்வைச் சொல்லாதீர்கள். அந்தச் சூழலை அலசி ஆராய்ந்து அவர்களாக அதற்கொரு தீர்வைக் கண்டுபிடிக்கப் பழக்குங்கள்.

நம்பிக்கை வளர உதவுங்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய டாஸ்க் கற்றுக்கொடுங்கள். அதன் மூலம் அவர்கள் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ளவும் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரவும் பழகுவார்கள். அவர்களது தன்னம்பிக்கை தானாக வளரும்.
தேர்வு செய்ய அனுமதியுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கான எல்லாவற்றையும் நீங்களே செய்துகொண்டிருக்காமல், அவர்களுடைய விஷயங்களில் அவர்களாக முடிவெடுப்பதை அனுமதியுங்கள். அந்த முடிவு தவறாக இருந்தால் மட்டும் சரியாக வழிநடத்துங்கள்.
ஆக, அதீத கட்டுப்பாடு, மேற்பார்வை, தலையீடு போன்றவற்றின் மூலம் உங்கள் பிள்ளைகளை அநியாயத்துக்குப் பாதுகாப்பதாக நீங்கள் செய்கிற விஷயங்கள் ஆரோக்கியமானவையே அல்ல. பிள்ளைகளுக்கு நல்லது என நினைத்து நீங்கள் செய்கிற அந்த விஷயங்கள் உண்மையில் அவர்களுக்கு பாதகங்களையே ஏற்படுத்தும்.
- ஹேப்பி பேரன்ட்டீனிங்