Published:Updated:

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடிய வில்லையா? காமத்துக்கு மரியாதை | S 3 E 12

sex education

பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடிய வில்லையா? காமத்துக்கு மரியாதை | S 3 E 12

பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

Published:Updated:
sex education

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். இதனால், அவருடைய மனைவிக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதே வேளையில், சில ஆண்களுக்கு, ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு என்ன தீர்வு என்று மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி அவர்களிடம் கேட்டோம்.

Dr. Narayana Reddy
Dr. Narayana Reddy

``பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். சம்பந்தப்பட்ட ஆண்கள் திருமணமாகி தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, கடினமாக உணர்வார்கள். சிலருக்கு, முதலிரவின்போது ஆணுறுப்பின் முன்தோல் வலிந்து பின் தள்ளப்படுவதால் கிழிந்துபோகவும், கிழியும்போது ரத்தம் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடியாத பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, தேவைப்பட்டால் அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும். இந்த பிரச்னைக்கு இதுதான் தீர்வு'' என்றார்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை