Published:Updated:

ஓரினச்சேர்க்கை... அந்த 4 காரணங்களில் எது உண்மை? - காமத்துக்கு மரியாதை | S 3 E 25

Sex Education

``நான்காவது தியரியோ, ஒரு நபரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருந்தால், அந்த நபரும் அப்படி ஆகி விடலாம் என்பது. ஆனால்...''

ஓரினச்சேர்க்கை... அந்த 4 காரணங்களில் எது உண்மை? - காமத்துக்கு மரியாதை | S 3 E 25

``நான்காவது தியரியோ, ஒரு நபரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருந்தால், அந்த நபரும் அப்படி ஆகி விடலாம் என்பது. ஆனால்...''

Published:Updated:
Sex Education

`ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ அல்லது உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா?' - இந்தக் கேள்வி பலராலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருவதால், இதற்கான விடையை மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``ஆண், பெண்ணை விரும்புவதும் பெண், ஆணை விரும்புவதும் எவ்வளவு இயல்பானதோ, அதே அளவுக்கு இயல்பானதுதான் ஓரினச்சேர்க்கையும். இதற்கான காரணமாக நான்கு தியரிகள் சொல்லப்பட்டு வந்தன. 

Dr. Narayana Reddy
Dr. Narayana Reddy

`மரபணுக்களில் கோளாறு இருந்தால் இப்படி ஏற்படலாம்' என்றது முதல் தியரி. ஆனால், ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது காரணமல்ல என்பது உறுதியானது. இரண்டாவது தியரி, `தாயின் கருவில் இருக்கும்போது செக்ஸ் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்பட்டிருந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு வரலாம்' என்றது. அது தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட்டதில், இதுவரை எந்தத் தெளிவான முடிவும் கிடைக்கவில்லை. 

மூன்றாவது, சைக்கோ அனலிட்டிக் தியரி (Psychoanalytic theory). அதாவது, அம்மாவைத் துன்புறுத்திய அப்பாவின் மேல் இருக்கிற கோபத்தில் ஆண்களைப் பிடிக்காமல் போனதால், பெண் பெண்ணையே விரும்பலாம். அப்பாவை மரியாதை குறைவாக நடத்திய அம்மாவின் மேல் இருக்கிற வெறுப்பில் பெண்களைப் பிடிக்காமல், ஆண் ஆணையே விரும்பலாம். இந்த தியரியும் நிரூபிக்கப்படவில்லை. 

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

நான்காவது தியரியோ,  ஒரு நபரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருந்தால், அந்த நபரும் அப்படி ஆகி விடலாம் என்றது. ஆனால், உடன் இருப்பவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மாற மாட்டார்கள் என்கின்றன ஆராய்ச்சிகள். 

ஆக, இதுநாள் வரைக்கும் ஓரினச் சேர்க்கைக்கு இதுதான் காரணம் என்று மருத்துவத்துறையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதை, மாற்றுப் பாலியல் நாட்டம் (Alternative sexual orientation) என்போம். எதிர்பாலின ஈர்ப்பு எப்படி இயற்கையானதோ, அதேபோல இதுவும் இயற்கையானதுதான்.  இது நோய் கிடையாது. அவர்களும் மற்றவர்களைப் போல நார்மல்தான். அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். குறைவாகவும் நடத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களை சமமாக நடத்த வேண்டும்'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.