Published:Updated:

ஆண், பெண் நட்பில் தொடுதல், அணைத்தல்... சரியா... எல்லை இருக்கிறதா?!

ஆண், பெண் நட்பில் தொடுதல், அணைத்தல்... எல்லை என்ன?

''நாங்க எல்லா ஃப்ரெண்ட்ஸையும் தொட்டுப் பேசிட மாட்டோம். மனசுக்கு நெருக்கமான, பர்சனல் பிரச்னைகளைக்கூட ஷேர் பண்ணிக்க முடிஞ்ச ஃப்ரெண்ட்ஸை மட்டும்தான் தொட்டுப் பேசுவோம்.''

ஆண், பெண் நட்பில் தொடுதல், அணைத்தல்... சரியா... எல்லை இருக்கிறதா?!

''நாங்க எல்லா ஃப்ரெண்ட்ஸையும் தொட்டுப் பேசிட மாட்டோம். மனசுக்கு நெருக்கமான, பர்சனல் பிரச்னைகளைக்கூட ஷேர் பண்ணிக்க முடிஞ்ச ஃப்ரெண்ட்ஸை மட்டும்தான் தொட்டுப் பேசுவோம்.''

Published:Updated:
ஆண், பெண் நட்பில் தொடுதல், அணைத்தல்... எல்லை என்ன?

'ஹக்ஸ் (Hugs)'. இன்றைய இளைஞர்களின் டிக்‌ஷ்னரியில் இருக்கிற அன்பு வார்த்தைகளில் முக்கியமானது. இந்த அணைப்பு காதலில் இயல்புதான். ஆனால், நட்பில், குறிப்பாக எதிர்பாலின நட்பில் தொட்டுப் பேசுவதும் அணைத்துக்கொள்வதும் எந்த எல்லைவரை சரி? இளைஞர்களும் நிபுணரும் என்ன சொல்கிறார்கள்? தெரிந்துகொள்ளலாமா?

Opposite Sex Friendship
Opposite Sex Friendship

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்க எல்லா ஃப்ரெண்ட்ஸையும் தொட்டுப் பேசிட மாட்டோம். மனசுக்கு நெருக்கமான, பர்சனல் பிரச்னைகளைக்கூட ஷேர் பண்ணிக்க முடிஞ்ச ஃப்ரெண்ட்ஸை மட்டும்தான் தொட்டுப் பேசுவோம். மத்தவங்க மேல இருக்கிறதைவிட இவங்க மேலே எங்களுக்கு அன்பு அதிகம்னு நாங்க காட்டுற வித்தியாசம்தான் இப்படித் தொட்டுப் பேசறதும் அணைச்சுப் பேசுறதும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்களுக்குன்னு சில சந்தோஷங்கள், வெற்றிகள் கிடைக்கிறப்போ ஒண்ணு லவ்வர் பக்கத்துல இருந்தா, அவங்களை அணைச்சு எங்க சந்தோஷத்தை வெளிப்படுத்துவோம். இல்லன்னா, எங்களோட ஆல் டைம் ஃபேவரைட்டான நண்பர்களை அணைப்போம். அந்த அணைப்பு சினிமாவுல காட்டுற மாதிரி நெஞ்சோட நெஞ்சு சேர்த்து இறுக அணைச்சுக்கிற மாதிரி செய்ய மாட்டோம். பக்கவாட்டுல நின்னு தோள்மேலே கைபோட்டு அணைச்சுப்போம். இல்லன்னா, தோள்கள் மட்டும் உரசுற மாதிரி லேசா அணைப்போம். எங்களோட லிமிட் எங்களுக்குத் தெரியும்'' - இது இளைஞர்களின் கருத்து.

Opposite Sex Friendship
Opposite Sex Friendship

நிபுணரின் கருத்துக்கு மனநல மருத்துவர் ஜெயந்தினியை அணுகினோம். "நட்பில் தொடுதல் மற்றும் அணைத்தல் விஷயத்தில் அதை நூறு சதவிகிதம் தவறு என்று சொல்ல மாட்டேன். அது சம்பந்தப்பட்டவர்களின் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது. தவிர, இந்தக் கால இளைஞர்கள், தாங்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்குப் பெரியளவில் அறிவுரை தேவைப்படாது. ஆனால், எதிர்பாலின நட்பில் தொடுதலும் அணைத்தலும் இருக்கிறபட்சத்தில், அது பின்னாளில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆணும் பெண்ணுமாக ஏழெட்டுப் பேர் நண்பர்களாக இருக்கிறார்கள். பொதுவெளியில் அவர்கள் ஒருவரையொருவர் தொட்டுப் பேசியபடியும் ஒரு சந்தோஷத்தில் தோளுடன் அணைத்தபடியும் இருந்தாலோ, பார்ப்பவர்களின் மனதில் 'அவர்கள் நண்பர்கள்' என்கிற எண்ணம் மட்டுமே எழும். இதுவே, ஓர் ஆண், ஒரு பெண் மட்டும் நட்பின் அடிப்படையில் தொட்டுப் பேசியபடியும் தோளுடன் அணைத்தபடியும் இருந்தால், அவர்களைக் கடந்துபோகிற இந்தச் சமூகம் எப்படி எடுத்துக்கொள்ளும்?

மன நல மருத்துவர் ஜெயந்தினி
மன நல மருத்துவர் ஜெயந்தினி

'எங்கள் நட்பைப் பற்றி எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஏன் அடுத்தவர்களின் கற்பிதங்களுக்குக் கவலைப்பட வேண்டும்' என்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். உங்கள் எதிர்பாலின நட்பை, தொட்டோ அல்லது அணைத்தோ எடுத்துக்கொள்கிற செல்ஃபியை அல்லது புகைப்படத்தை உங்கள் வருங்காலத் துணை தவறாகப் புரிந்துகொண்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன?

சினிமாவுல காட்டுற மாதிரி நெஞ்சோட நெஞ்சு சேர்த்து இறுக அணைச்சுக்கிற மாதிரி செய்ய மாட்டோம். பக்கவாட்டுல நின்னு தோள்மேலே கைபோட்டு அணைச்சுப்போம். இல்லன்னா, தோள்கள் மட்டும் உரசுற மாதிரி லேசா அணைப்போம். எங்களோட லிமிட் எங்களுக்குத் தெரியும்.
பெண்
பெண்

ஏனென்றால், உங்கள் நட்பைப் போலவே நீங்களும் உங்கள் எதிர்பாலின நண்பரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் உண்மை. காலமும் நாமும் எவ்வளவு மார்டனாக மாறினாலும் இன்னமும் 'என் துணை' என்கிற அழுத்தமான பொசஸிவ் குணம் எல்லோர் மனதிலும் இருக்கவே செய்கிறது. இந்தக் குணம் அறவே இல்லாத ஒரு நபரை உங்களால் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றால் நட்பில் தொடுதலும் அணைத்தலும் தவறே இல்லை."

ஆகமொத்தத்தில், இது ஒரு தனிப்பட்ட நபர், அவரைச் சுற்றியுள்ளவர்களின் விருப்பு வெறுப்பு மற்றும் மனமுதிர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயமாகிவிடுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism