Published:Updated:

` என் தாய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தும்!' -9 ஆண்டு தேடலுக்குப் பிறகு மனம்மாறிய கேரளப் பெண்

நவ்யா
நவ்யா

தன் தாயை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், கேரளாவில் தாய் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை நடத்திவருகிறார் என்பதை அறிந்ததும், நவ்யாவின் மனம் மாறியுள்ளது.

டேவிட் சாந்தகுமார் வளர்ந்தது டென்மார்க் நாட்டில்; பிறந்தது தமிழகத்தில். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை சின்னக் கடைத்தெருதான் இவரின் பூர்வீகம். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டானிஸ் தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு, டேவிட் கில்டென்டல் நெல்சன் என்கிற பெயரில் வளர்க்கப்பட்டார். படித்து ஆளான டேவிட் சாந்தகுமார், தற்போது டென்மார்க் நாட்டில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். 1½ வயதில் தனது தாயை விட்டுப் பிரிந்தவர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயைத் தேடி தஞ்சை வீதிகளில் சுற்றித்திரிந்தார். பின்னர், ஒருமாத கால போராட்டத்துக்குப்பின் கண்டுபிடித்தார், டேவிட் சாந்தகுமார்.

நவ்யா
நவ்யா

தற்போது, இதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண், நவ்யா சோபியா டோரிகட்டி. 35 வயதாகும் இவர், தனது தாயை 9 வருட போராட்டங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார். தற்போது கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தோடு இத்தாலியில் செட்டில் ஆகியிருக்கும் நவ்யாவின் சொந்த ஊர், கோழிக்கோடு. 1984-ல் பிறந்த நவ்யாவை, அவரது தாய் அங்குள்ள அநாதை இல்லத்தின் பராமரிப்பில் சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு, இதுநாள் வரை நவ்யா தனது தாயைக் கண்டதில்லை. பின்னர், இரண்டரை வயது வரை வயநாட்டில் உள்ள ஓர் இல்லத்தில் வளர்ந்திருக்கிறார்.

``அம்மாவுடன் முதன்முதலாக வீடியோ காலில் பேசிய அந்த கணம்...” - டென்மார்க் டேவிட்  #VikatanFollowUp

அப்போது வயநாட்டுக்கு சுற்றுலா வந்த இத்தாலியைச் சேர்ந்த சில்வானோ டோரிகட்டி மற்றும் திசியானா தம்பதியர், நவ்யாவை சட்டப்படி தத்தெடுத்து, தங்கள் நாட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், வயது ஆக ஆகத் ​​தன் பெற்றோரின் நியாயமான நிறத்தைப் பெறவில்லை என்பதை உணர்ந்த நவ்யா, சில்வானோ - திசியானா தம்பதியிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார். பிறகுதான், அவர் ஒரு தத்துக் குழந்தை எனத் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் காலச்சூழலால் அவரால் மீண்டும் கேரளா திரும்ப முடியவில்லை.

நவ்யா இத்தாலி பெற்றோருடன்
நவ்யா இத்தாலி பெற்றோருடன்

எனினும், தான் வளர்ந்த வயநாடு இல்லத்துடன் தொடர்பில் இருந்தவர், அவர்கள் உதவியுடன் 9 வருடங்களுக்கு முன்பு கேரளா வந்து தாயைத் தேடியுள்ளார். ஆனால், நவ்யாவால் தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தேடுவதை விட்டுவிடவும் தயாராக இல்லை. தன் சிறு வயது புகைப்படங்களைக்கொண்டு வீடியோவாகத் தயாரித்து, சமூக வலைதளங்களில் தனது நிலையை எடுத்துச்சொல்லி, தாயைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமானார். அவரின் கோரிக்கை, மலையாள சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவ, இப்போது 9 ஆண்டுகள் தேடல் முடிவுக்குவந்துள்ளது.

`அம்மா அப்பா... பொய் சொன்னது போதும்..!’ - இதயங்களை வென்ற 9 வயதுச் சிறுமியின் கடிதம்

வயநாட்டுக்கு அருகே தங்கியிருக்கும் தன் தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். தன் தாயை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், கேரளாவில் தாய் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை நடத்திவருகிறார் என்பதை அறிந்த பிறகு, நவ்யாவின் மனம் மாறியுள்ளது. ஆம், நவ்யாவின் தாய் தனது கணவர் மற்றும் அவரது குழந்தைகளுடன் வேறு ஒரு குடும்ப வாழ்க்கையில் இருப்பதால், `தனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது' என்ற உறுதிமொழி வாங்கிய பிறகே நவ்யாவுடன் போனில் பேசியுள்ளார்.

ஆசிரம நிர்வாகி உடன் நவ்யா
ஆசிரம நிர்வாகி உடன் நவ்யா

இருப்பினும், தாயுடன் பேசிய மகிழ்ச்சியில் இதுகுறித்துப் பேசியுள்ள நவ்யா, ``திருமணத்துக்குப் முன்பு என் அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பதை உலகம் அறிந்தால், அது அவளுக்கு கஷ்டங்களை மட்டுமே ஏற்படுத்தும். எனக்கு அது புரிகிறது. நான் விரைவில் கேரளாவுக்கு வருவேன். என் அம்மாவைப் பார்க்க இல்லை. ஆனால், என் அம்மாவைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியவர்களைச் சந்திப்பதற்காக வருவேன்" என்று கூறியுள்ளார்

``நடிகர் விஜய் அம்மா மெசேஜ் அனுப்பினாங்க!" - சாதனாவின் நவராத்திரி டான்ஸ்
அடுத்த கட்டுரைக்கு