Published:Updated:

`சென்னை வீடு... மல்லிகைச் செடி; அம்மாவின் வாசம்!'- ஜான்வியின் ஶ்ரீதேவி நினைவலைகள்

ஜான்வியின் ஶ்ரீதேவி நினைவலைகள் ( Instagram )

``ஒருமுறை பள்ளி விழா ஒன்றில் பரதநாட்டியம் ஆடுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒப்பனை செய்தது அம்மாதான். அதற்காகப் பல்வேறு விதமான லிப்ஸ்டிக் சோதனைகளில் ஈடுபட்டோம்."

`சென்னை வீடு... மல்லிகைச் செடி; அம்மாவின் வாசம்!'- ஜான்வியின் ஶ்ரீதேவி நினைவலைகள்

``ஒருமுறை பள்ளி விழா ஒன்றில் பரதநாட்டியம் ஆடுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒப்பனை செய்தது அம்மாதான். அதற்காகப் பல்வேறு விதமான லிப்ஸ்டிக் சோதனைகளில் ஈடுபட்டோம்."

Published:Updated:
ஜான்வியின் ஶ்ரீதேவி நினைவலைகள் ( Instagram )

தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று பாலிவுட்டின் முதல் `லேடி சூப்பர்ஸ்டார்' எனும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி. இவரின் எதிர்பாரா மறைவுக்குப் பிறகு, ஸ்ரீதேவியின் இடத்தை நிரப்ப பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார் அவரின் முதல் மகளான ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டு, `தடக்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமான ஜான்வி, அவ்வப்போது ஏராளமான அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறிப்புகளை சமூக வலைதளத்தில் பகிர்வதுண்டு.

Janhvi
Janhvi
Instagram

அவற்றில் பல டிப்ஸ், தன் தாய் ஸ்ரீதேவியிடமிருந்து கற்றுக்கொண்டவை என்பதைப் பதிவு செய்தும் இருக்கிறார் ஜான்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற `பெனிட்டான்' வாசனைத் திரவியம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜான்வி, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கியமான தருணங்களை நினைவுபடுத்தும் நறுமணங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது, ``என் குழந்தைப் பருவத்தை நினைத்தாலே, என் அம்மாவின் வாசம்தான் நினைவுக்கு வருகிறது. சிறுவயதில், சென்னையிலுள்ள வீட்டில்தான் அதிக நாள்கள் இருந்தோம்.

Sridevi with her daughters
Sridevi with her daughters
Instagram

அப்போது அம்மா, வீட்டைச் சுற்றி மல்லிகைப்பூ செடி வைத்திருந்தார். அவரின் தலையிலும் எப்போதும் மல்லிகைப்பூ சரம் இருக்கும். அதனால் அதுதான் அவருடைய வாசம் என என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது" என்று கூறி தன் தாய்க்கு மிகவும் பிடித்த வாசனை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``ஒருமுறை பள்ளி விழா ஒன்றில் பரதநாட்டியம் ஆடுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒப்பனை செய்தது அம்மாதான். அதற்காகப் பல்வேறு விதமான லிப்ஸ்டிக் சோதனைகளில் ஈடுபட்டோம்" என்று ஸ்ரீதேவியுடனான தன்னுடைய முதல் மேக்-அப் அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டார் ஜான்வி.

Janhvi withe her sister Kushi
Janhvi withe her sister Kushi
Instagram

``நீங்கள் வொர்க்-அவுட் செய்த பிறகு, திறந்த சருமத் துளைகளை மூடுவதற்கு முகத்தை ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவுங்கள். என் அம்மா எனக்குச் சொன்ன இந்த டிப்ஸ், நிச்சயம் உங்களுக்கும் வொர்க்-அவுட் ஆகும். எங்களுக்கான ஹேர் ஆயிலை உலர்ந்த பூக்கள் மற்றும் நெல்லிக்காயைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பார் அம்மா. வாரத்துக்கு மூன்று நாள்கள் எனக்கும் என் தங்கை குஷிக்கும் நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவார். எஞ்சியிருக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை முகத்துக்கு மாஸ்க்காக அப்ளை செய்வோம்" என்று தன் தாயின் நினைவலைகளை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார் ஜான்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism