Published:Updated:

`குழந்தை அழவும் கூடாது... வீட்டுல விட்டுட்டும் போகணும்..!’- இணையத்தை கலக்கும் ஜப்பான் தாயின் ஐடியா

குழந்தைக்காகத் தாய் வித்தியாசமான முயற்சி ஒன்றை யோசித்துக் கையாண்டுள்ளார். அது கைகூடியும் இருப்பதுதான் அழகிலும் அழகு!

ஜப்பான் தாய்
ஜப்பான் தாய்

'அம்மா, தூக்கு தூக்கு' என பிள்ளை கதறுவதும்... பதிலுக்கு, 'பிச்சிருவேன், ஒழுங்கா இரு, வந்திடுறேன் எனத் தாய் செல்லமாகக் கத்துவதும்... இருவருக்குமிடையே நடக்கும் பெரும் யுத்தம். இதற்கு ஸ்மார்ட்டாகத் தீர்வு கண்டிருக்கிறார் ஒரு தாய்.

ஜப்பான் குழந்தை
ஜப்பான் குழந்தை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் சாடோ நசியா. இவருக்கு 1 வயதே நிரம்பிய குழந்தை இருக்கிறது. சிறிய வேலைகளுக்காக இவர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருந்ததால், குழந்தை அழத் தொடங்கியிருக்கிறது. குழந்தை தன்னைத் தேடக் கூடாது, அம்மாவைக் காணவில்லையே என அழக் கூடாது என்பதற்காக வித்தியாசமான முயற்சி ஒன்றை யோசித்துக் கையாண்டுள்ளார். அது கைகூடியும் இருப்பதுதான் அழகிலும் அழகு! அப்படியென்ன வித்தியாசமாகச் செய்திருப்பார்?

தன்னைப் படமெடுத்து அதை அட்டையில் கச்சிதமாகப் பொருத்தி, தன்னைப்போலவே தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். அதைக் குழந்தையின் கண்களில் படும்படி வீட்டறை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். குழந்தையும் அவ்வப்போது 'தாயை'ப் பார்த்துப் பார்த்துச் சிரித்துவிட்டு தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கிறது. நின்றபடி, அமர்ந்தபடி என வெவ்வேறு பொசிஷன்களில் 'தன்னை உருவாக்கி' வைத்துள்ளார், அந்தத் தாய்.

அந்த வீடியோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

ஜப்பான் தாய்
ஜப்பான் தாய்

தாயைக் குழந்தை எட்டித் தொட்டுவிட்டால்தான், குட்டு வெளிப்பட்டுவிடுமே. அதனால், 'தாய் இருக்கிற' அறைக்கு குழந்தை சென்றுவிடாதபடி, குழந்தையின் உயரத்துக்குத் தடுப்பு வேலி அமைத்து உள்ளார் அந்தத் தாய். இந்த வீடியோ தற்போது மில்லியன் வீயூஸ்களை கடந்து ஹிட் அடித்து வருகிறது.