Published:Updated:

`இளகிய மனம், இனிய பிடிவாதம்..!' - கல்பனா சாவ்லாவின் இயல்புகளைப் பகிரும் தந்தை

Kalpana Chawla
Kalpana Chawla

கல்பனா சாவ்லாவின் சிறுவயது நிகழ்வுகளை ஜாலியாகவும் உருக்கமாகவும் தெரிவித்திருந்தார் 86 வயதை எட்டிய தந்தை சாவ்லா.

விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையைக் கொண்டவர் கல்பனா சாவ்லா. கொலம்பியாவின் 28-வது விண்கலமான எஸ்டிஎஸ் 107-ல் அவர் பயணித்தார். இவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுப்புப் படமாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சியில் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது.

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா
Vikatan

இவரைப் பற்றிய வரலாறு பலவும் பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனாலும், விண்வெளி வரையிலும் சாதனை புரிய கல்பனாவின் உந்துசக்தியாக இருந்தவற்றைப் பற்றி யாரும் அறியாத தகவல்களை மகளிர் தினத்தையொட்டி ஆங்கில இதழொன்றில் பகிர்ந்துகொண்டார், கல்பனா சாவ்லாவின் தந்தை பனரசி லால் சாவ்லா. அதில், கல்பனா சாவ்லாவின் சிறு வயது நிகழ்வுகளை ஜாலியாகவும் உருக்கமாகவும் தெரிவித்திருந்தார் 86 வயதை எட்டிய தந்தை சாவ்லா.

"அவளுடைய 3 வயதில் கர்னல் மாவட்டத்தில் ஃபிளையிங் கிளப்புக்கு அருகேதான் நாங்கள் குடியிருந்தோம். தலைக்கு மேலே விமானம் பறப்பதை ரசித்துக்கொண்டேயிருப்பாள். ஒருமுறை, கிளப்புக்குக் கூட்டிச் செல்ல சொல்லித் தொந்தரவு செய்தாள். அப்போது முதல், அவளோடு சேர்த்து அவளின் சகோதரனையும் ஃபிளையிங் கிளப்புக்கு அழைத்துச் செல்வேன். விமானத்தைப் பார்த்து வியப்பாள்.

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா
Vikatan

எப்படிப் பறக்கிறது, தரையில் எப்படி ஓடுகிறது எனக் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டேயிருப்பாள். பின்பு அங்கே ஒருமுறை விமானத்தில் பயணித்தோம். அதற்குப் பிறகு விமானம் மீதான காதல் அவளிடம் இன்னும் அதிகரித்தது. காகித விமானங்கள் செய்து பறக்க வைக்க முயன்றுகொண்டிருப்பாள். பள்ளியிலும் விமானக் காதல் இவளை விடவில்லை. அந்தக் காதல்தான் அவளை விண்வெளி வீராங்கனை ஆக்கியது" என்கிறார் தந்தை சாவ்லா.

கல்பனாவின் பண்பைப் பற்றிக் கூறும்போது, ``என் மகள் எதையும் விட்டுக்கொடுக்காதவள். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தாள். ஆனால், அவளின் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து அவநம்பிக்கையை விதைத்துக்கொண்டு இருந்தார். அதையெல்லாம் மீறி அவள் படித்தாள், தொடர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தாள்" என்று பெருமிதம் கொள்கிறார் தந்தை.

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா

மேலும், ``மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையின்போது நான் சில நாள்கள் பிஸியாக இருந்தேன். அதனால் அவள் எனக்காகக் காத்துக்கொண்டே இருந்தாள். அவளைக் காக்க வைத்த குற்றவுணர்ச்சி இன்னும் என் மனதில் இருக்கிறது" என்று உணர்ச்சிவசப்பட்டவர், "மகள்கள் எதையுமே பெற்றோரின் ஆலோசனையோடும் அவர்களின் கவனத்துக்குள்ளும்தான் நடந்துகொள்ள விரும்புவார்கள்.

எனவே, மகள்களுக்குப் பக்கபலமாய் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அவர்களின் கனவுகள் நனவாவதற்குத் துணை நின்றால், அவர்களுக்கு அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறெதுவும் இருக்கப்போவதில்லை. பெற்றோர்கள் வேலைகளோடு சமரசம் செய்துகொண்டு குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும்" என்றார்.

விண்வெளி வீரர்
விண்வெளி வீரர்

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் ஜியோகிராபி சேனல் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கைத் தொகுப்பை ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது. ``அந்தத் தொகுப்பை எல்லா பெற்றோர்களும் அவர்களின் மகள்களும் பார்க்க வேண்டும்" எனக் கோரிக்கையும் விடுத்திருந்தார் தந்தை சாவ்லா.

``குழந்தைகளைக் காக்கிறோம் என்ற பெயரில் அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது அவர்களை சுயமாகச் சிந்தித்துச் செயல்பட விட வேண்டும். தீயவற்றில் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்வது மட்டுமே பெற்றோர்களின் பணி" என்றார். "அவளுடைய அலுவலகத்துக்கோ அறைக்கோ சென்றால் அங்கு முழுவதுமே புத்தகங்கள், குடும்பப் புகைப்படம் மற்றும் ஏரோபிளேன் பொம்மைகள் நிறைந்திருக்கும்" என்றார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட அமெரிக்க ராக்கெட் வெடித்து சிதறியது!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட அமெரிக்க ராக்கெட் வெடித்து சிதறியது!

கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்பை திரைப்பட விழாவில் பேசியிருந்த தந்தை சாவ்லா, ``அவளது கடைசி ஆசை, மலைகளில் வாழ வேண்டும் என்பதே. அவள் மறைவுக்குப் பின் ஒருமுறை, இமயமலைப் பகுதிக்குச் சென்றிருந்தோம். நான், மனைவி, குடும்பம், அவளின் நண்பர்கள் இருவரின் குடும்பங்கள் சேர்ந்து சென்றோம். அங்கே அவளின் தோழி அழத் தொடங்கினாள்.

அவள் ஹவாயின் மேயராக இருக்கிறாள். படித்து வந்த காலத்தில் அறிவியல் தொழில்நுட்பம் படிக்க அவளுக்கு ஆசை. நடுத்தரக் குடும்பம் என்பதால் படிக்கப் பணமில்லை. அப்போதிருந்து அவளது படிப்பு முடியும் வரையிலும் கல்பனாதான் அவளுக்குப் பணம் கட்டிவந்திருக்கிறாள். அவளது இழப்பை அவளால் தாங்கவே முடியவில்லை.

சாவ்லா
சாவ்லா
இந்தியாடிவி நியூஸ்

இப்படி அறிவும் அன்பும் நிறைந்த கல்பனாவின் வாழ்வை பயோபிக்காக உணர்ந்திருக்கிறேன். தற்போது நிறைய பயோபிக்குகள் வரத் தொடங்கியுள்ளன. என் மகளின் வாழ்க்கையையும் அப்படி பயோபிக்காகப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார்!

அடுத்த கட்டுரைக்கு