Published:Updated:

மகன் செய்த பாஸ்தா மாலை... க்வாரன்டீன் தினக் குறும்பை ரசிக்கும் கரீனா கபூர்

கரீனா
கரீனா

சமீபத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன் மகன் செய்த குறும்புகளைப் பற்றிப் பதிவிட்ட ஒரு புகைப்படம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

லகையே முடக்கியிருக்கிறது கொரோனா தொற்றின் தாக்கம். பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று தெரிந்துகொள்வதைவிடவும், ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புதான் சாமானியர்களிடம் அதிகமிருக்கிறது. அதற்கேற்றாற்போல பிரபலங்களும் சமூக ஊடகங்களில் தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவேற்றி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

இன்ஸ்டா
இன்ஸ்டா

அந்த வரிசையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன் மகன் செய்த குறும்புகளைப் பற்றிப் பதிவிட்ட ஒரு புகைப்படம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாக அமிர் கானுடன் தான் நடிக்கும் லால்சிங் சாத்தா படப்பிடிப்பில் இருந்தார் கரீனா.

`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..?'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ்

ஊரடங்கு காரணமாக அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரீனா, தன் கணவர் சாயிஃப் அலி கான் மற்றும் மகன் தைமூருடனும் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது வொர்க்அவுட் புகைப்படத்தையும் கபூர் குடும்பத்தின் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கரீனா கபூர்
கரீனா கபூர்

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் தைமூரால் செய்யப்பட்ட பாஸ்தா மாலையுடன் தனது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். மகன் தைமூர் தன் கைப்பட செய்த பாஸ்டா மாலை இது எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு முன் கரீனா, தைமூரின் ஓவியங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மகனை தன் வீட்டின் பிகாசோ(#inhousePicasso) எனச் செல்லமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு