Published:Updated:

`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..?'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ்

என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் என்னிடம் இரண்டு முறை கூறியிருக்கிறார். ஆனால், இரண்டு முறையும் அதை நான் மறுத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கரீனா கபூர்
கரீனா கபூர் ( instagram.com )

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். படப்பிடிப்பு, மாடலிங், திருமணம், குழந்தை வளர்ப்பு என பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார்.

கரீனா கபூர்
கரீனா கபூர்
instagram.com

அதில் குறிப்பாக ``என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் என்னிடம் இரண்டு முறை கூறியிருக்கிறார். ஆனால், இரண்டு முறையும் அதை நான் மறுத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கரீனாவைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் யார்? இப்போது அவர் யாரை திருமணம் செய்திருக்கிறார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

`ஒன்றாக நேரம் செலவிடும் வாய்ப்பு!' - தினமும் பாத்திரம் துலக்குவதில் மனைவிக்கு உதவும் பில்கேட்ஸ்

அட, அந்த நபர் வேற யாரும் இல்லைங்க. கரீனா கபூரை கைப்பிடித்துள்ள 'சைஃப் அலிகான்'தானாம்.

"சைஃப் ப்ரோபோசலைத்தான் கரீனா ஏத்துக்கலையே? அப்புறம் எப்படி கல்யாணமாச்சி?" என்று குழப்பமாக இருக்கிறதா?. அதற்கான விடையையும் கரீனாவே கூறியிருக்கிறார்.

கரீனா கபூர், சைஃப் அலிகான்
கரீனா கபூர், சைஃப் அலிகான்
instagram.com

"சைஃப் முதன்முதலில் கரீனாவிடம் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தியது இருவரும் இணைந்து நடித்த தாஷான் படப்பிடிப்பில் தானாம்.

"நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா ?" என்று சைஃப் கேட்டதற்கு கரீனா, "உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பிறகு எப்படி திருமணம்!" என்று கூறி மறுத்துவிட்டாராம். ஆனாலும் கரீனாவின் இந்தப் பதிலில் "நான் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்ற உள்ளர்த்தம் மறைந்தே இருந்ததாம்.

இதை சைஃப் புரிந்து கொண்டார் போல! சில நாள்கள் கழித்து மீண்டும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதும் கரீனா அவருக்கு சரியான பதிலை தரவில்லையாம்!

கரீனா கபூர், சைஃப் அலிகான்
கரீனா கபூர், சைஃப் அலிகான்
instagram.com

பிறகு இருவரும் நண்பர்களாகி, காதலித்து 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டதெல்லாம் பெரிய கதை. தற்போது இவர்களுக்கு 'தைமூர்' என்ற ஆழகான ஆண் குழந்தை இருக்கிறது. சைஃப் அலிகானை திருமணம் செய்ய தான் எடுத்த முடிவு தனது வாழ்வில் மிகவும் முக்கியமானது என்கிறார் கரீனா.