Published:Updated:

`500 கோடி பட்ஜெட்; வாழ்த்த வரும் மோடி, அமித் ஷா..!' - களைகட்டும் கர்நாடக அமைச்சர் இல்லத் திருமணம்

கர்நாடக அமைச்சர் இல்லத் திருமணம்
கர்நாடக அமைச்சர் இல்லத் திருமணம் ( sandesh.com )

வருகிற 5-ம் தேதி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமண விழாக்கள் என்றாலே ஆடம்பரம் என்றாகிவிட்டது. ஆனால், இந்தத் திருமண விழா பெங்களூருவை மட்டும் அல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. வருகிற 5-ம் தேதி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

`மதம் வேற, மனுஷன் வேற இல்லையா?' -இந்து வளர்ப்புப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த இஸ்லாமியத் தம்பதி

இந்நிலையில், இவர்களின் திருமண விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கொண்டாட்டங்களுக்காக ஏறத்தாழ 500 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்‌ஷிதா - ரவிக்குமார்
ரக்‌ஷிதா - ரவிக்குமார்

திருமண விழாக் கொண்டாட்டங்கள் கடந்த பிப்ரவரி 27-ம் தேதியே தொடங்கிவிட்டன. ஒன்பது நாள் கொண்டாட்டமாக இவர்களின் திருமண விழா பெங்களூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறுகிறது. கொண்டாட்டங்களின் நிறைவு நாளான மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள மணவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் திருமண அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கர் விழா அரங்குக்காகவும் 15 ஏக்கர் பார்க்கிங்க்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கு ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணப்பந்தலில் ஹம்பியில் அமைந்துள்ள வீரபக்‌ஷர் ஆலய வடிவம் உட்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கர்நாடக அமைச்சர் இல்லத் திருமணம்
கர்நாடக அமைச்சர் இல்லத் திருமணம்
sandesh.com

அரங்க அமைப்புக்காக சுமார் 300 பேர் மூன்று மாதங்களாகப் பணிபுரிந்துள்ளனர். மாண்டியாவில் உள்ள மெலுகோட்டை ஆலயத்தில் அமைந்துள்ளதைப்போல் மணமேடை உருவாக்கப்பட்டுள்ளது. 200 மேடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு மேடையில் மலர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும், வரவேற்புக்காக பல்லாரி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கம், பல பாலிவுட் ஆர்ட் டைரக்டர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

`இந்தப் பெண்ணை ஏற்கிறேன்; இந்தச் சட்டத்தை அல்ல’ - வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் நடந்த திருமணம்

சினிமா பிரபலம் தீபிகா படுகோனின் திருமண நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த சானியா சர்தாரியா இந்தத் திருமண விழாவின் ஆடை வடிவமைப்பாளராகவும், முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஜெயராமன் பிள்ளை மற்றும் திலிப் ஆகியோர் இந்தத் திருமண நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்யவும் உள்ளனர். மேலும், சுமார் 1,000 சமையல் கலைஞர்கள் இந்தத் திருமண நிகழ்ச்சிக்காக உணவு தயாரிக்க உள்ளனர். சுமார் 7,000 பேர் ஒரே வேளையில் அமர்ந்து உண்ணும் பந்தியும் தயாராக உள்ளது. பா.ஜ.க அமைச்சரின் மகள் திருமண விழா கர்நாடகாவையே திகைப்பூட்டச் செய்திருக்கிறது.

இந்தத் திருமண நிகழ்ச்சியைப்போலவே 2015-ம் ஆண்டு கர்நாடகாவில் புருவம் உயர்த்தும் அளவுக்கு நடைபெற்ற ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண விழாவுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு