Published:Updated:

``No CAA... No NRC" - கவனம் ஈர்த்த கேரள காதல் ஜோடியின் போட்டோ ஷூட் போராட்டம்

தீவிரமான பதற்றங்களுக்கு மத்தியிலும் மக்கள் போராட்டங்களில் பங்கு பெறுவதிலும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் முனைப்புடன் உள்ளனர்.

அருண் கோபி, ஆஷா சேகர்
அருண் கோபி, ஆஷா சேகர் ( facebook.com )

தேசியக் குடியுரிமைச் சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகிய சட்டங்களுக்கு எதிராகத் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அருண் கோபி, ஆஷா சேகர் போட்டோ ஷூட்
அருண் கோபி, ஆஷா சேகர் போட்டோ ஷூட்
facebook.com

சமீபத்தில் அஸ்ஸாமில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்கள் பலரும் பலத்த காயமடைந்தனர். மாணவர்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் உள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன. தீவிரமான பதற்றங்களுக்கு மத்தியிலும் மக்கள் போராட்டங்களில் பங்கு பெறுவதிலும், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் முனைப்புடன் உள்ளனர். இன்னொரு பக்கம், போராட்டத்தில் எதிர்ப்பாளர்களிடமும் அமைதியை வலியுறுத்தும் வகையில் பல செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்றாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்கி அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதுபோல் தற்போது கேரளாவில் ஒரு காதல் ஜோடி அமைதியான முறையில், தங்களின் போட்டோக்கள் மூலம் போராட்டம் செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த அருண் கோபி மற்றும் ஆஷா சேகர் இருவரும் காதலர்கள்.

`நான் வரலாறு படைக்கிறேன் என அவர்களுக்குத் தெரியாது!’ - போராட்டத்தில் கவனம் ஈர்த்த மாணவி

இன்னும் சில நாள்களில் திருமணம் செய்து கொள்ளப்போகும் இவர்கள் அதற்கு முன்பாக கேரளாவில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் அருண் கோபி, ஆஷா சேகர் இருவரும் கைகளில் 'No CAA', 'No NRC' என்ற வாசகங்களைத் தங்கிய பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

அருண் கோபி, ஆஷா சேகர்
அருண் கோபி, ஆஷா சேகர்
facebook.com

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தங்களின் தனிப்பட்ட வாழ்வில்கூட நாட்டு மக்களின் நலனைச் சேர்த்து யோசித்த இந்தக் காதல் ஜோடியின் புதுமையான போராட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.