லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ... கேரள தம்பதியின் பிரேம கதா!

ஷஹானா பாத்திமா - ஷிஹாபுதீன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷஹானா பாத்திமா - ஷிஹாபுதீன்

நல்ல மண வாழ்க்கை அமையுமான்னு மட்டும் எனக்குத் தயக்கம் இருந்துச்சு. அதையும் சாத்தியமாக்கி, காதலால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாங்க அன்பு மனைவி.

“நல்ல உடல்நலத்துடன் படைக்கப் பெற்றவங்களே வாழ்க்கையில பல விஷயங்களுக்கும் புலம்பிகிட்டு இருக்கிற நிலையில, மருத்துவச் சான்றுபடி 75 சதவிகித அளவுக்கு இவர் ஊனமுடன் இருக்கார். ‘அப்போ இவரோட வாழ்க்கையில எத்தனை தடைகள், புலம்பல்கள் இருந்திருக் கும்?’னு யாருமே இவரைப் பரிதாபமா நினைச்சு டாதீங்க. திறமையை மட்டுமே நம்பி ஜெயிச்ச வித்தியாசமான மனிதர் இவர்” - காதல் கணவரின் தன்னம்பிக்கைக்குச் சான்று அளிக்கிறார் ஷஹானா பாத்திமா.

“நல்ல மண வாழ்க்கை அமையுமான்னு மட்டும் எனக்குத் தயக்கம் இருந்துச்சு. அதையும் சாத்தியமாக்கி, காதலால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாங்க அன்பு மனைவி. இப்போ எல்லா வகையிலும் நான் ஆசீர்வதிக்கப் பட்டவன்” - நெகிழ்ந்து கூறுகிறார் ஷிஹாபுதீன்.

மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ...
கேரள தம்பதியின் பிரேம கதா!

தன்னம்பிக்கைக்கும் நேர்மறை எண்ணங் களுக்கும் ஆகச்சிறந்த உதாரணமாகத் திகழும் ஷிஹாபுதீன், இரண்டு கைகளும் கால்களும் முழுமையாக இல்லாமல் பிறந்தவர். தடை களைக் கடந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறியவர். தன்னம்பிக்கைப் பேச்சாளர், ஓவியர், இசை மற்றும் நடனக் கலைஞர், யூடியூபர் எனப் பல முகங்கள் கொண்டவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் காதல் மனைவி. கேரளாவைச் சேர்ந்த இந்தத் தம்பதியரின் இல்லறம், சினிமா இயக்குநர் களின் பார்வைக்கு அகப்பட்டாத சுவாரஸ்ய மான பிரேம கதா.

“பூர்வீகம் மலப்புரம். கூடப்பிறந்த ஆறு பேர்ல எனக்கு மட்டும்தான் இந்தக் குறைபாடு இருந்துச்சு. மருத்துவ சிகிச்சைகள் எதுவுமே உதவலை. இப்படியேதான் வாழ்ந்தாகணும்னு புரிஞ்சுகிட்டோம். ‘இவனோட எதிர்காலம் எப்படி இருக்குமோ?’ன்னு குடும்பத்தினர் உட்பட பலரும் என்னைப் பார்த்துப் பரிதாபப் பட்டாங்க. நமக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும் வாழ்ற காலம் மட்டுமே நிஜம். மீண்டும் கிடைக்காத இந்த வாழ்க்கையிலயே, எல்லோர் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும்ங்கிற எண்ணத்தை மனசுல பதிய வெச்சேன். ஒருகட்டத்துல என்னோட குறைகளையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு, சந்தோஷங்களுக்கு மட்டுமே மனசுல இடம் கொடுத்தேன்.

ஏழாவது வரை வீட்டுல இருந்தே படிச்ச நிலையில, எட்டாவதுல இருந்துதான் நார்மல் ஸ்கூல் போனேன். ரெண்டு கை மூட்டுக்கும் இடையில பேனா பிடிச்சு எழுதவும், ஓவியம் வரையவும், பியானோ, டிரம்ஸ், வயலின் கருவிகளை வாசிக்கவும், கிரிக்கெட் விளையாடவும் பழகினேன். தொடைப் பகுதி கூட முழுமையா இல்லாட்டி யும் வீட்டுக்குள்ளயே நடக்கப் பழகினேன். இதையெல்லாம் சாத்தியப்படுத்தறதுல நிறைய சிரமங்கள் இருந்துச்சு. ஆனாலும், என்னால செய்ய முடியாதுனு பலரும் நினைச்ச விஷயங்களையெல்லாம் செய்து காட்டினேன். எம்.ஏ படிச்சேன். மலையாள சேனல் ரியாலிட்டி நிகழ்ச்சி கள் மூலமா எனக்கான அடுத் தடுத்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்திகிட்டேன்” என்று பெருமிதத்துடன் கூறும் ஷிஹாபுதீனின் வாழ்க்கையில் ரசிகையாக நுழைந்திருக்கிறார் ஷஹானா.

காதல் அத்தியாயத்தைக் கூறும் ஷஹானா, “எனக்குப் பூர்வீகம் கோட்டயம். சில வருஷங்களுக்கு முன்பு மலை யாள டிவி சேனல் நிகழ்ச்சியில இவர் போட்டியாளரா கலந்து கிட்டார். டான்ஸ், நடிப்புத் திறமையைப் பார்த்து இவர் மேல எனக்கு மதிப்பு கலந்த அன்பு ஏற்பட்டுச்சு. ஃபேஸ் புக்ல வாழ்த்து மெசேஜ் அனுப்புவேன். எப்ப யாச்சும்தான் ரிப்ளை கொடுப் பார். ஒருகட்டத்துல நம்பர் பரிமாறி, போன்ல அடிக்கடி பேசுவோம். நட்பு பலமாகவே ஒரு வருஷத்துக்குப் பிறகு சந்திச்சோம். நாளடைவில் எங்க நட்பு காதலா மலர்ந்தது. ரெண்டு குடும்பத்துலயும் சில எதிர்ப்புகள் எழுந்துச்சு. ஆனா, நான் உறுதியா இருந்தேன். எனக்குப் பக்கபலமா இருந்த இவர், ‘கல்யாணத்துக்குப் பிறகு நம்ம வாழ்க்கையும் நானும் உன்னோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லைனு தோணுச்சுன்னா தயங்கமா என்கிட்ட சொல்லணும். தேவைப்பட்டா நீ இன்னொரு புது வாழ்க்கையைத் தேடிக்கணும்’னு என்கிட்ட வாக்குறுதி கேட்டார். அதுக்கான வாய்ப்பே இருக்காதுனு உறுதியா சொன்னேன். ரெண்டு வீட்டார் சம்மதத்தோடு 2018-ல் கல்யாணம் நடந்துச்சு.

முதன்முறையா பழகின நாள்ல இருந்து இப்ப வரைக்கும் இவர் மேல எனக்குப் பரிதாபமே வந்ததில்ல. சமூகத்தின் பார்வையைக் கண்டுக் காம, ரெண்டு பேரும் மகிழ்ச்சியா வாழறோம். கரஸ்ல என்னை டிகிரி படிக்கவைக்கிறார். ஒரு வயசாகும் மகள், எங்க மண வாழ்க்கையை மேலும் அழகாக்கிட்டா. மணிக் கட்டைப் பயன்படுத்தி மகளுக்குப் புட்டிப்பால் புகட்டுறது, கை மூட்டால மகளைத் தூக்கிக் கொஞ்சுறது, சிரமப்பட்டு மகளுக்குத் தானே விளையாட்டுப் பொருள்கள் செஞ்சு கொடுக்கிறதுனு தந்தையா இவர் வெளிப்படுத்தும் அன்பு ரொம்பவே நெகிழ வைக்குது” என்பவரின் கண்கள் பனிக்கின்றன.

மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ...
கேரள தம்பதியின் பிரேம கதா!
naaz photography

“ஒருமுறை ஸ்கூல் பசங்ககிட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக்கப் போயிருந்தேன். என்னோட கதையும் பேச்சும் அந்தக் குழந்தைகளுக்குப் பிடிச்சுப்போனதுடன், அதுபோல நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. கடந்த சில வருஷங்கள்ல ஸ்கூல், காலேஜ், சென்னை ஐ.ஐ.டி உட்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுள்ள பிரபல கல்வி நிறுவனங்கள்ல தன்னம் பிக்கைப் பேச்சாளரா பேசியிருக்கேன். இதன் மூலமும், யூடியூப், மேடை நிகழ்ச்சிகள் மூலமாகவும் குடும்பத்தை நடத்துற அளவுக்கு வருமானம் கிடைக்குது. எனக்கே மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியம்னா, மத்தவங்க என்னைவிடவும் கொடுப்பினை உடையவங்கதானே? பிரச்னைகளைக் கண்டு பயந்து ஓடாம, போராடி ஜெயிக்கிறதுல கிடைக்கிற மகிழ்ச்சிதான் மிக உயர்வானது. இதைத்தான் என்னோட தன்னம் பிக்கைப் பேச்சிலும் தவறாம சொல் வேன்”

- மனைவியின் ஊக்கத்தால் முன்னேறிவரும் ஷிஹாபுதீன், பினராயி விஜயன், மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல்வேறு பிரபலங்களின் அன்பைப் பெற்றிருப்ப துடன், மேஜிக்கும் கற்றுவருகிறார்.

“வீல்சேர்ல வெளியிடங்களுக்கு இவரே தனியா போயிட்டு வந்திடுவார். சில இடங்களுக்கு இவரை இடுப்புல வெச்சுத் தூக்கிட்டும் போவேன். முழுமையா புரிஞ்சுகிட்டு குடும்பம் நடத்துறதால, ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதுப்புது அனுபவங் களைக் கத்துக்கொடுக்குது”

- கணவரின் தோள்மீது சாய்கிறார் ஷஹானா. இருவரின் முகங்களிலும் மகிழ்ச்சிப் புன்னகை!