Published:Updated:

ரயிலில் தொடங்கிய காதல் பயணம்!

அறிவுநிலா - வினோத்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறிவுநிலா - வினோத்ராஜ்

அங்கே ஒரு குடும்பமாக வந்து உட்கார்ந்திருந்தவர்களில்தான் என் நிலாவைப் பார்த்தேன்.

ரயிலில் தொடங்கிய காதல் பயணம்!

அங்கே ஒரு குடும்பமாக வந்து உட்கார்ந்திருந்தவர்களில்தான் என் நிலாவைப் பார்த்தேன்.

Published:Updated:
அறிவுநிலா - வினோத்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறிவுநிலா - வினோத்ராஜ்

‘கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜின் காதல் கதை அவர் படம்போலவே கவித்துவ வித்தியாசமானது.

“முருகபூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவில் இருந்தேன். கோணங்கி அண்ணன் நாவல் எழுதினால், பூபதி அண்ணன் நாடகம் எழுதினால் அதை எடுத்துக்கிட்டு தனுஷ்கோடி போயிடுவாங்க. அங்கே கடலுக்கு முன்னாடி உட்கார்ந்து மொத்த நாவலையும் நாடகத்தையும் வாசித்துக் காண்பிப்பாங்க. நானும் அங்கே கூழாங்கல்லை வாசித்து விட்டு ரயில் ஏறினேன்.

ரயிலில் தொடங்கிய காதல் பயணம்!

அங்கே ஒரு குடும்பமாக வந்து உட்கார்ந்திருந்தவர்களில்தான் என் நிலாவைப் பார்த்தேன். பிடிச்சுப் போச்சு. ஏதாவது பேசலாம்னு முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாப் பேச ஆரம்பிச்சாங்க. அறிவுநிலா என்கிற அந்தப் பெண் பெயரே ஆச்சரியமாக இருக்கு.

என்னோட அலைபேசி எண்ணை அவள்கிட்டே கொடுத்திட்டேன். கிழிச்சுப் போடாமல் பத்திரப்படுத்தியது தெரிந்தது. அவங்க காரைக்குடியில் இறங்கிட்டாங்க. அதற்குப் பின்னால் ரொம்பநாள் கழிச்சு ஒருநாள் நிலாவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘எனக்குத் தெரிஞ்சவங்க ஒரு நேர்காணலுக்கு வர்றாங்க. உதவ முடியுமா’ன்னு கேட்டாங்க. நானும் செய்து கொடுத்தேன்.

ரயிலில் தொடங்கிய காதல் பயணம்!

காதல் வளர்ந்தால் கல்யாணம்தானே? அவங்க வீட்டில் பேசினேன். ஆனால் அவங்க சம்மதிக்கலை. வீட்டைத்தாண்டி என்னோடு வர நிலா தயாரா இருந்தாங்க. என் அக்கா தங்கையை அவங்க வீட்டுக்கு அனுப்பினேன். அவங்க நிலா அப்பா அம்மாவோட பேசிப் பார்த்தும் திருமணத்திற்கு அவங்க சம்மதிக்கலை. அப்படியே நிலாவைக் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. நிலாவின் பெற்றோர்கள் இல்லாமல் எங்கள் திருமணம் நடந்தது.

ரயிலில் தொடங்கிய காதல் பயணம்!

இப்போ நிலா கர்ப்பமா இருக்காங்க. என்னதான் நான் நிலாவை நல்லபடியாக வச்சிருந்தாலும் அவங்க மனசில் வீட்டு நினைப்பு இருக்கலாம். அடுத்த மாதம் நடக்கப்போகிற வளைகாப்புக்கு அப்பா அம்மா வந்தால் எப்படியிருக்கும்னு அவங்க நினைச்சிக்கிட்டு இருக்கலாம். இந்த வளைகாப்பு முடியறதுக்குள் அது நிறைவேறும்னு நினைக்கிறேன்.”

வினோத்தின் குரலில் அவ்வளவு நம்பிக்கை! அது காதலால் வந்த நம்பிக்கை.