Published:Updated:

``அக்கா வருவார் என்று இரவு முழுவதும் கண்விழித்திருந்தேன்!" - பாடகி லதா மங்கேஷ்கர் பற்றி ஆஷா போஸ்லே

90 வயதான லதா மங்கேஷ்கர், கடந்த மாதம் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வீடு திரும்பிய லதா, ட்விட்டரில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே

28 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்தபோது லதாவின் உடல்நிலை குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தான் நலமோடு இருப்பதாகக் கூறி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Lata Mangeshkar
Lata Mangeshkar
Instagram

மேலும், அவருடைய சகோதரியும் பிரபல பாடகியுமான ஆஷா போஸ்லே, தன் அக்காவைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.

``ஆராரோ! ஆராரோ! நீ வேறோ! நான் வேறோ!" என்ற `ஆனந்த்' திரைப்படப் பாடல் நிச்சயம் 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பட்டியலில் இருக்கும். இந்தப் பாடலைப் பாடியவர் லதா மங்கேஷ்கர். 1950 முதல் 90 வரை பாலிவுட் இசையுலகில் மகுடம்சூடா ராணியாக வலம்வந்தவர் பாடகி லதா மங்கேஷ்கர். இவர் இதுவரை இந்தி, தமிழ் உட்பட 36 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

Lata Mangeshkar's Tweet
Lata Mangeshkar's Tweet
Twitter

ஐந்து வடஇந்திய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். 90 வயதான லதா, கடந்த மாதம் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சமீபத்தில் வீடு திரும்பிய லதா, ட்விட்டரில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``வணக்கம். எனக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 28 நாள்களாக மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். முழுமையாக குணமடைந்த பிறகே என்னை வீட்டுக்குப் போகும்படி மருத்துவர்கள் சொன்னார்கள். இன்று, துர்கை மற்றும் பாபாவின் ஆசீர்வாதங்களுடன் நான் வீடு திரும்பியுள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.

Lata Mangeshkar and Asha Bosle
Lata Mangeshkar and Asha Bosle
Twitter

மேலும், ``என்னுடைய எல்லா நலம் விரும்பிகளுக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் பலனளித்துவிட்டன. என்னை அன்போடு கவனித்துக்கொண்ட ப்ரீச் கேண்டி மருத்துவர்கள், என்னைப் பாதுகாக்கும் தேவதைகளாக இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அங்கிருந்த செவிலியர்கள் ஒவ்வொருவரும் எனக்களித்த எல்லையற்ற அன்பும் ஆசீர்வாதங்களும் விலைமதிப்பற்றவை. அனைவருக்கும் மீண்டும் நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், லதாவின் சகோதரியான ஆஷா போஸ்லே, ``அக்கா லதாவின் வருகைக்காக நாங்கள் அனைவரும் வீட்டில் வெகுநாள்களாகக் காத்திருந்தோம். இன்று அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போது அக்கா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். நேற்றிரவு முழுவதும் அக்கா வருவார் என்று கண் விழித்திருந்தேன். அந்த நேரத்தில், அவரின் குரல் வழியே அழியாத பல பாடல்கள் என்னுள் விரைந்தோடின" என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

Asha Bosle
Asha Bosle
Twitter
`என்னால் அவரது பயணம் திசைமாறிவிடக் கூடாது!' - கண்ணீர்வடிக்கும் தெருவோரப் பாடகி ராணுவின் மகள்

`நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' (ஹே ராம்), செப்டம்பர் மாதம் (அலைபாயுதே), எங்கெங்கே எங்கெங்கே (நேருக்கு நேர்), கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம் (சந்திரமுகி) உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார்.