Published:Updated:

12 வயதில் க்ரஷ்; 55 வருட திருமண வாழ்க்கை; திலீப்குமாரின் காதல் தேவதை சாய்ரா பானு!

திலீப்குமார் - சாய்ரா பானு
திலீப்குமார் - சாய்ரா பானு

`திலீப்பை மணமுடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். அது பலித்துவிட்டது".

பாலிவுட்டின் மூத்த நடிகரான திலீப்குமார் நேற்றைய தினம் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 98. இவருடைய மனைவி சாய்ரா பானுவும் பாலிவுட்டில் புகழ்பெற்ற நாயகி. கடந்த சனிக்கிழமையன்று மருத்துவமனையில் திலீப் அட்மிட் ஆனபோது, `அவர் நலமாகி வந்துவிடுவார்' என நம்பிக்கையாகப் பேசிய சாய்ரா பானு, பாலிவுட்டில் மட்டுமல்ல, திலீப்குமாரின் வாழ்க்கையிலும் காதல் தேவதையாகவே துணை நின்றவர். அதனால்தான், திலீப்பின் இறுதி ஊர்வல வீடியோக்களில் `கணவரின் இன்ப, துன்பங்கள் எல்லாவற்றிலும் கடைசி வரை நின்ற அருமையான வாழ்க்கைத்துணை' என சாய்ராவின் இயல்பை நெட்டிசன்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திலீப்குமார் - சாய்ராபானுவின் காதல் வாழ்க்கை குறித்த சில வரிகள் இங்கே...

திலீப்குமார் - சாய்ரா பானு
திலீப்குமார் - சாய்ரா பானு

1961-ல் பாலிவுட்டில் அறிமுகமான சாய்ராவுக்கு இரண்டு கனவுகள் இருந்தன. ஒன்று திரைத்துறையில் சாதிக்க வேண்டும். இரண்டு, நடிகர் திலீப்குமாரை திருமணம் முடிக்க வேண்டும்.

சாய்ரா 12 வயது சிறுமியாக இருந்தபோது, திலீப்குமாரின் `ஆன்' (Aan) என்கிற படத்தைப் பார்த்து அவர் மீது காதல் கொண்டார். பிறகு சாய்ராவும் 1960-ல் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். 1966-ல் ஆசைப்பட்டபடியே நடிகர் திலீப்பை காதல் மணம் புரிந்துவிட்டார். திலீப்பைவிட சாய்ரா 22 வயது இளையவர்.

நடிகை மதுபாலாவுடன் காதல் தோல்வி, சோகமான படங்களில் அதிகம் நடித்ததால் `சோக ராஜா' என்கிற பட்டப்பெயர் என்று இருந்த திலீப்பின் வாழ்க்கையில் சாய்ரா என்னும் இளம் தேவதை நுழைந்தது பாலிவுட்டே எதிர்பாராதது.

காலம் சாய்ரா - திலீப்குமார் காதல் திருமணத்திலும் சற்று விளையாடிப் பார்த்தது. 1981 முதல் 1983 வரை திலீப், அஸ்மா ரெஹ்மான் என்கிற பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

சாய்ரா பானுவைத் தேற்றும் ஷாருக்கான்
சாய்ரா பானுவைத் தேற்றும் ஷாருக்கான்
திலிப் குமாரின் சென்னை பாசமும், ஷூட்டிங் முடிந்தும் வெளியாகாமலிருக்கும் அவரின் பழைய திரைப்படமும்!

இதற்கு சாய்ராவின் எதிர்வினை என்ன தெரியுமா? ``அவரின் இரண்டு மனைவிகளில் ஒருவராக இருக்க நான் விரும்பவில்லை. அவரை நம்புகிறேன். இதற்காக நான் சட்ட உதவியை நாட விரும்பவில்லை.''

சாய்ராவின் காதல், திலீப்பை மறுபடியும் மனைவியிடம் கொண்டு வந்து சேர்த்தது. தன்னுடைய சுயசரிதையில் (2014), `என் வாழ்க்கையில் இன்னொரு பெண் வந்ததை நானும் சாய்ராவும் எங்கள் மறதிக்குள் தள்ளிவிட்டோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார் திலீப்.

அடுத்த கட்டுரைக்கு