Published:Updated:

சர்வதேச குடும்ப தினம்... ஃபேமிலி செல்ஃபி எடுத்து விகடனோடு கொண்டாடுங்கள்!

குடும்பம்
குடும்பம்

நமது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கிற மகிழ்ச்சியை பொக்கிஷமாகப் பதிவுசெய்து வைக்கலாமே!

ஐக்கிய நாடுகளின் சபை, 1993-ம் ஆண்டு குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்கப்படுத்துவதற்கான தீர்மானத்தை பொது மாநாட்டில் நிறைவேற்றியது. அதன்படி, 1994-ல் மே 15-ம் தேதியை சர்வதேச குடும்ப தினமாக அறிவித்தது.

ஐநா
ஐநா

அதன்படி, ஆண்டுதோறும் மே 15-ம் தேதி சர்வதேச குடும்ப தினமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு தீம். அந்த வகையில், 'வளர்ச்சியில் குடும்பம்' என்பதுதான் இந்த வருட தீம்.

லாக் டவுணில் நடந்துமுடிந்தவற்றைப் பேசாமல் நடக்கப் போவதைப் பேசுங்கள்... குடும்ப வன்முறை தவிர்க்க நிபுணர் ஆலோசனை!

உலகிற்கே இந்த வருடம் போராட்டமான காலகட்டம். ஊரடங்கு ஏறத்தாழ உலகடங்கு போல ஆகியிருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே தங்களின் குடும்பத்தோடு பத்திரமாக நாள்களைக் கழித்துவருகின்றனர். வீட்டில், தம் உறவுகளுக்கு மத்தியில்தான் பாதுகாப்போடும் அரவணைப்போடும் இருப்பதாக உணர்ந்துகொண்டிருக்கின்றனர் உலக மக்கள்.

லாக்டௌன்
லாக்டௌன்

குடும்பம்தான் எல்லாமே, குடும்பத்துக்காகத்தான் எல்லாமே என்பதைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன, வைரஸும் ஊரடங்கும். இனி, எதிர்கால வளர்ச்சி அனைத்தும் குடும்பத்தைச் சார்ந்துதான் அமையப்போகிறது. அதற்குக் கட்டியம் கூறும் விதமாகத்தான், இந்த வருடத்தின் குடும்ப தினத்துக்கு ‘வளர்ச்சியில் குடும்பம்’ என்ற தீமை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் முதல் ஃப்ளிங் வரை... காதலில்லா உறவுகள் என்னென்ன?

உள்ளூர் ஆர்.ஜே, வி.ஜே,க்களில் இருந்து உலக செலிபிரிட்டிகள்வரை பல பிரபலங்கள் குடும்ப தினத்தை, தங்கள் குடும்பத்தினரோடு செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துகள் கூறிவருகின்றனர். நாமும் நமது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கிற மகிழ்ச்சியைப் பொக்கிஷமாகப் பதிவுசெய்துவைக்கலாமே!

குடும்பம் - லாக்டௌன்
குடும்பம் - லாக்டௌன்

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் குடும்பத்துடன் கூடிநின்று செல்ஃபி எடுத்து, உங்கள் விகடனுக்கு அனுப்புங்கள். அவற்றை விகடன் பொக்கிஷமாக நாங்கள் தருகிறோம்! உங்களுடைய குடும்பப் புகைப்படத்தையும் குதூகலிப்பையும் அலங்கரிக்கக் காத்திருக்கிறது விகடன்.

அனைவருக்கும் குடும்ப தின வாழ்த்துகள்

உங்கள் புகைப்படங்களை lifestyle@vikatan.com என்ற மெயில் ஐடி-க்கு அனுப்புங்கள்.

அடுத்த கட்டுரைக்கு