Published:Updated:

`என்னால் ஒரு குடும்பம் சிதைந்துவிடுமோ'- வாசகி பிரச்னை, உளவியல் நிபுணர் தீர்வு!#LetsSpeakRelationship

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

``லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் நிறைய பிரச்னைகள் வரும். அவர் உங்களுடன் நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இதனால்...''

விகடன் வாசகர்கள், தங்கள் ரிலேஷன்ஷிப் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, uravugal@vikatan.com- என்ற மெயில் ஐ.டியில் தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கிறார்கள். அவற்றுக்கு, துறை சார்ந்த நிபுணர்கள் பதில் அல்லது தீர்வு சொல்கிறார்கள். இதோ சமீபத்தில் வாசகி ஒருவர் தீர்வு வேண்டி நமக்கு மெயில் செய்த கேள்வி இது.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

நான் 39 வயதுப் பெண். மூன்று வருடங்களுக்கு முன்னால் விவாகரத்தாகிவிட்டது. என் ஒரே மகன் அவனுடைய அப்பாவுடன் இருக்கிறான். என்னுடைய பிரச்னை என்னவென்றால், எனக்கு ஒரு ஆணை கடந்த 5 வருடங்களாகத் தெரியும். அவர் என்னைவிட 3 வயது இளையவர். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், இது தொடர்பாக என் பெற்றோரிடம் பேசுவதாகவும் சொல்கிறார். அவருடைய மனைவிக்கும் எங்களைப் பற்றித் தெரியும். என் வாழ்க்கையை இந்த நபருடன் பகிர்ந்துகொள்ள விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னால் ஒரு குடும்பம் சிதறிவிடுமே என்கிற குற்றவுணர்ச்சியும் இருக்கிறது. நான் இப்போது என்ன செய்வது? அந்த நபருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கட்டுமா அல்லது அதுவும் வேண்டாமா? தயவுசெய்து பதில் கூறுங்கள்.

பதில் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்:

``தனிமையில் இருக்கிற உங்களுடைய மனம் ஒருவரை நாடுகிறது என்பதைத் தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு ஆதரவாக இருக்கிற ஒருவர், இனிவரும் காலகட்டங்களிலும் அப்படியேதான் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் நிறைய பிரச்னைகள் வரும். அவர் உங்களுடன் நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இதனால், நீங்களே சொல்லியிருப்பதுபோல இரண்டு குழந்தைகளுடன் இருக்கிற ஒரு கூடு சிதைந்துவிடும். தவிர, உங்கள் மீதான விருப்பம் குறையும்போது அவர் மறுபடியும் தன்னுடைய கூட்டுக்குத் திரும்பிப் போய்விடுவார்.

``கணவரைவிட நான் மூத்தவள்; இதனால் பிரச்னை வருமா?'' இளம்பெண்ணுக்கு நிபுணரின் பதில் #LetsSpeakRelationship
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுபவரைக் காதலிக்கலாமா? #LetsSpeakRelationship

ஒருவேளை அவருக்கு தன் மனைவியுடன் ஏதோ சரிசெய்ய முடியாத பிரச்னை இருந்து, அதன் காரணமாக விவாகரத்து செய்துவிட்டு உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்றால், நீங்கள் காத்திருக்கலாம். ஆனால், உங்களுடன் இருக்கிற உறவின் காரணமாகத்தான் மனைவி, குழந்தைகளைப் பிரியப் போகிறார் என்றால், அது மோசமான தவறு. மனதை அந்த நபரிடமிருந்து மீட்டு எடுங்கள். யோகா, சமூக சேவை, பார்வையற்றவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வாசித்துக்காட்டுவது என்று மனதை மடை மாற்றுங்கள். தற்போது வாழ்க்கைத்துணையில்லாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இதே நிலைக்கு உங்களால் இன்னொரு பெண் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். பெற்றோரிடம் சொல்லியோ அல்லது மேட்ரிமோனியல் மூலமாகவோ உங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தேடிக்கொள்வதுதான் சரியான வழி.''

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
அடுத்த கட்டுரைக்கு