Published:Updated:

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 6

பிரீமியம் ஸ்டோரி

‘கல்யாணத்துக்கு முன்னாடி மொத ரிங்ல போனை எடுத்தவர்/ன் கல்யாணத் துக்குப் பிறகு, பத்து தடவை கால் பண்ணாலும் பிஸின்னு மெசேஜ் மட்டும் அனுப்புறார்/ன். அவரு/னுக்கு என் மேல லவ்வு குறைஞ்சு போச்சு’ என்று புலம்புகிற பெண் களைக் கிட்டத்தட்ட எல்லா வீடு களிலும் பார்க்கலாம்.

இந்த இயல்புபற்றி மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா பேசுகையில், ``காதலிக்கிற ஆணின் மனதுக்குள் ‘இவள் நமக்குக் கிடைப்பாளா’ என்ற தவிப்பும், `இவளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்துவிடுவார் களோ’ என்ற பயமும் இருக்கும். காதல் வயப்பட்ட ஆணுடைய மனம் இப்படித்தான் யோசிக்கும். அதனால்தான், அரேன்ஜ்டு மேரேஜில்கூட, நிச்சயத்துக்குப் பிறகு மணிக்கணக்காகப் பேசுகிற ஆண்கள், திருமணத்துக்குப் பிறகு ஒன் வேர்டு ஆன்ஸருக்கு மாறி விடு கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, இனி இவள் என்னுடன் தான் காலம் முழுக்க இருக்கப் போகி றாள், அவ்வளவு தான்.

காதலிக்கும்போது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்வார்கள். அழகுபடுத்திக்கொள்வது, இனிமையாகப் பேசுவது, நல்லவர் களாகக் காட்டிக்கொள்வது எல்லாமே இவன்/இவள் தன்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள்தான். நோக்கம் நிறைவேறிய பிறகு, ஈர்ப்புக்கான முயற்சிக்கு இருவருமே முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறார்கள்.

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?

தினமும் சில மணி நேரம் சந்தித்துப் பேசிக்கொண்ட போது இருந்த காதல், என் குடும்பம், உன் குடும்பம், நம் குடும்பம், குழந்தைகள், பொருளாதாரச் சிக்கல்கள் என்று இத்தனைக்கும் நடுவில் குறைவது இயல்புதான். இவற்றையெல்லாம் தாண்டி, காதல் தொடர வேண்டுமென்றால், தம்பதியர் தங்களுக்கான தனிமைத் தருணங் களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காதலிக்கும் போது அல்லது திருமணமான புதிதில் சென்ற இடங்களுக்கு மறுபடியும் செல்வது, அப்போது நடந்து கொண்டதுபோல ரொமான் ஸுடன் இருப்பது என்று முயற்சி செய்தால், மனைவிகளின் இந்த மனக்குறை மாற வாய்ப்பிருக்கிறது. ஆணின் ஓர் இயல்பைப் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். மனைவி வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தைப் பாதிக்குப் பாதி சுமந்தாலும், ஆணுடைய மனதில் ‘இது என் குடும்பம். இதற்கு நான்தான் தலைவன். இந்தக் குடும்பத்தை நான்தான் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த அழுத்தம் காரணமாகவும் அவன் காதல் குறையலாம். இந்த வகை ஆண்கள், குடும்பப் பொறுப்புகள் குறைந்த பிறகு, ‘மனைவியை இன்னும் கொஞ்சம் நேசித்திருக்கலாமோ’ என்று வருத்தப் படுவார்கள்.

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?

தவிர, நம் சமூகம் தன் மனைவியிடம் காதலாக நடந்துகொள்கிற ஆணை ‘பொண்டாட்டி தாசன்’ என்று கேலி செய்து அவன் ஈகோவைத் தூண்டி விட்டுவிடுகிறது. ஒரு சில ஆண்கள் மட்டுமே முதிர்ச்சியுடன் இதைக் கடக்கிறார்கள். வெளிநாடுகளைப் போல மனைவியைப் பொதுவெளியில் கொண்டாடுவதும் காதலிப்பதும் சகஜம்தான் என்ற நிலை வர வேண்டு மென்றால் இந்தச் சமூகமும் சற்று மாற வேண்டும்’’ என்றவர், கணவனின் பாரா முகத்துக்கான நெகட்டிவ் பக்கத்தையும் சொல்கிறார்...

``திருமணம் மூலமாக விரும்பிய பெண்ணுடன் செக்ஸ் கிடைத்தவுடன் அவளிடம் பாராமுகம் காட்டுகிறான் என்றால், அவனுக்கு பெண்ணின் காதலைவிட உடலே பிரதானம். மனைவியை அடிப்பது, குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவது, சிகரெட்டால் சுடுவது என்று சாடிஸ்ட்டாக நடந்துகொள்வது இந்த வகை ஆண்கள்தாம். சிலர் குடித்தால் மனைவியிடம் அன்பாக இருப்பார்கள். மற்ற நேரங்களில் கொடுமைப் படுத்துவார்கள். மேலே சொன்னவை யெல்லாமே மனப்பிறழ்வு. இவர்களைத் தவிர்த்துவிடுவதே நல்லது. ஒருவேளை இவர்களுடன் திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டீர்களென்றால், வாழ்க்கையே கடினமாகிவிடும். இந்த வகை ஆண்களை மைண்டு டெவலப் மென்ட் கவுன்சலிங் கொடுத்துச் சரி செய்யலாம்’’ என்கிறார்.

அம்மா மீது அன்பாக இருக்கிற ஆண், மனைவி மீதும் அன்பாக இருப்பான் என்பது உண்மையா... அடுத்த இதழில்

அன்பு குறைவதும் காரணம்தான்! - வழக்கறிஞர் சாந்தகுமாரி

‘`தனக்குக் கிடைக்காத ஒன்று கிடைப்பதற்காக ஆண் காட்டுகிற அபரிமித மான அன்புதான் காதலிக்கும் போது நிகழ்வது. படித்த, சம்பாதிக்கிற, வீட்டு வேலைகள் செய்கிற, லோன் கட்ட உதவி செய்கிற, டூ வீலரில் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற, அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிற சூப்பர் வுமன் மனைவியாகக் கிடைத்த பிறகு, பெரும்பாலும் இது அப்படியே மாறிவிடுகிறது.

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?

மனைவியின் சுமைகளைப் பகிராமலும் அவளுடைய உணர்வுகளைப் பற்றி கவலைப் படாமலும் அவளுக்குரிய மரியாதையைக் கொடுக்காமலும் அலட்சியப்படுத்த ஆரம் பிக்கிறான் கணவன். உடன் வேலை பார்ப்பவர்களிடம் காட்டுகிற நட்பையும் சிரித்த முகத்தையும் எத்தனை கணவர்கள் தங்களுடைய மனைவியிடம் காட்டு கிறார்கள்... இந்த பாராமுகத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சில பெண்கள் ஒரு கட்டத்தில் மணமுறிவை நாடுகிறார்கள். அதனால்தான், தற்போது காதல் திருமணங் களுக்குச் சமமாகப் பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களும் விவாகரத்து கேட்டு நிற்கின்றன. இதற்கும்,‘பெண்கள் சம்பாதிப்பதால்தான் திருமண வாழ்க்கை யைச் சுலபமாக உதற நினைக்கிறார்கள்’ என்ற போலியான பிம்பத்தைப் பெண் களுக்கு எதிராக சமூகத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.’’

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?

காதலிக்கும்போது தாய்ப்பூனை; திருமணத்துக்குப் பிறகு தாய்க்குரங்கு! - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

‘`காதலிக்கும்போது காட்டுகிற அதே அன்பை, ஆண் திருமணத்துக்குப் பிறகும் காட்டுகிறானா என்றால், இல்லை என்பது தான் நூறு சதவிகித உண்மை. ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கும்போது, அவளை எந்தளவுக்குக் காதலிக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஆணுக்கு. அதனால்தான் உருகி உருகிக் காதலிக்கிறான். ஓர் உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், காதலி ஆறு மணிக்குக் கடற்கரைக்கு வரச் சொன்னால், ஐந்தரைக்கெல்லாம் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவான். அதே பெண் மனைவியாகி, ஆறு மணிக்கு ஆபிஸுக்கு வந்து என்னை பிக்கப் செய்து கொள்ளுங்கள் என்றால், ஆறே காலுக்குத்தான் போவான். தாமதமாகப் போனால் காதலி கோபித்துக்கொண்டு கிளம்பிவிடுவாளோ என்ற பயம். காதலி மனைவியான பிறகு, நேரமானாலும் அவள் காத்திருப்பாள் என்ற நம்பிக்கை. மற்றபடி, ஆண் தான் நேசிக்கிற பெண்ணை எந்தக் காலத்திலும் அலட்சியப் படுத்த மாட்டான். பரஸ்பரம் புரிந்துணர்வு வந்த பிறகு மனைவிக்கே இது புரிந்துவிடும்.

ஓர் ஆண், காதலிக்கும்போது பூனைக்குட்டியைக் கவ்விக்கொண்டு அலைகிற தாய்ப்பூனையைப் போல இருப்பான். அதனால்தான் நேரங்காலம் பார்க்காமல் உருகுவான். திருமணத்துக்குப் பிறகு, குரங்குபோல மாறி விடுவான். அதாவது, குரங்குக்குட்டிதான் தன் தாயை இறுக்கிக்கொண்டிருக்கும். அதுபோல மனைவிதான் கணவனை இறுகப் பிடித்துக்கொண்டிருப்பாள். அம்மா குரங்கைப்போல ஆண் ரிலாக்ஸாக மாறிவிடுவான். ஆனால், தன் மனைவிக்கு வீட்டுக்குள்ளோ, பொது வெளியிலோ ஒரு பிரச்னையென்றால் தாய்க்குரங்கைப் போல சட்டென்று தாங்கிப் பிடித்துவிடுவான்.

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்கிறார்கள். வெளியில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் நுழைபவர்கள், அந்தக் கோபத்தையெல்லாம் கணவர் மீதோ, சமையலறை சாமான்கள் மீதோ, ஏன் சில நேரங்களில் குழந்தைகள்மீது கூட காட்டுவார்கள். இந்த நேரத்தில் மனைவியை தன் குழந்தையை சமாதானப்படுத்துவதுபோல கணவன் ஆற்றுப்படுத்த வேண்டும். ‘நானோர் ஆண், என் சுயமரியாதை என்னவாவது’ என்பதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு யாரெல்லாம் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்கிறார்களோ அவர்களுடைய திருமண வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு