Published:Updated:

பெண்களின் கனிவான கவனத்துக்கு... காதல்... புதிரும் அல்ல, புனிதமும் அல்ல!

காதலர் தின ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
காதலர் தின ஸ்பெஷல்

காதலர் தின ஸ்பெஷல்

பெண்களின் கனிவான கவனத்துக்கு... காதல்... புதிரும் அல்ல, புனிதமும் அல்ல!

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
காதலர் தின ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
காதலர் தின ஸ்பெஷல்

திருவனந்தபுரத்தில் பேருந்து நடத்துநராக வேலைபார்க்கும் ஆண் அவன். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தனது பேருந்தில் தினமும் பயணிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் காதல் வளர்த்தவன், பயணிகள் இல்லாத பேருந்தில் வைத்து அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

இது, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதை. காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனே அவரை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தியிருக்கிறான். அவன் கொடுமை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, தற்போது பரிதவித்து நிற்கிறார் அந்தப் பெண்.

தர்மபுரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியைக் காதலித்து திருமணம் செய்திருக் கிறான் ஏற்கெனவே இரண்டு முறை திருமண மான 45 வயது ஆண். ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுத்த செல்போனில் இன்ஸ்டா கிராம் மூலமாகக் காதல் வளர்த்த மாணவி, அவனை நம்பி வீட்டைவிட்டு ஓடிப்போய் இருக்கிறார். மாணவியின் நகைகளை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதற்கிடையில் செல்போன் திருட்டு, பைக் திருட்டு என்று ஈடுபட்டுக் கொண்டிருந்தவனை போலீஸார் கைதுசெய்ய, அந்த மாணவி ஆறு மாதக் குழந்தையுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமான ஆசிரியரை, அது தெரியாமல் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் பண்ருட்டி மாணவி. குழந்தை பிறந்த பிறகு, அந்த நபரின் நடத்தையில் ஏதோ மாற்றம் தெரிந்து விசாரிக்கப்போக, அவன் மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது தெரியவந்திருக்கிறது.

பெண்களின் கனிவான கவனத்துக்கு... காதல்... புதிரும் அல்ல, புனிதமும் அல்ல!

‘பவித்ரமானது’, ‘புனிதமானது’, ‘மென்மை யானது’, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எனக் காலத்துக்கு ஏற்றமாதிரி காதலைக் கொண் டாடிக்கொண்டே இருந்தாலும், காதல் என்ற பெயரில் தவறான ஆண்களைத் தேர்ந்தெடுத்து பெண்கள் ஏமாறுவதும் காலத்துக்கு ஏற்றவாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

காதல் போர்வையில் கல்யாண ஆசைகாட்டி அழைத்துச் சென்று ஏமாற்றுவதும், நம்பிவந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளுவதும், காதலியை நிர்வாண போட்டோ, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டுவதும், தன் நண்பர் களுடன் சேர்ந்து சீரழிப்பதுமாக இந்த ஏமாற்று வித்தைகள் பலவிதம். இதுபோன்ற கொடூரங்கள் தான், பெரும்பாலும் பெற்றோர்களைக் காதலுக்கு எதிரான மனநிலைக்கே தள்ளுகிறது. சொல்லப்போனால், அந்த பெற்றோர் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளாக இருந்தாலும்கூட, காதலுக்கு எதிரான மன நிலைக்குச் செல்லும் அளவுக்கு, காதல் என்கிற பெயரில் நடக்கும் அநாகரிகங்கள், அட்டூழி யங்கள், அநியாயங்கள், அராஜகங்கள் நாளும் நாளும் அதிகரித்தபடியேதான் இருக்கின்றன.

தன்மீது வீசப்படுவது காதல் அம்பா அல்லது காம வலையா என்ற தெளிவற்ற பெண்கள்தான் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிறார்கள். அது அவர்களை மட்டு மல்லாமல், பெற்றோர், குழந்தைகள் என்று அனைவரையும் பாதித்து, சமூகத்தையும் பதற வைக்கிறது.

‘`காதல் என்பதில் விழுவதற்கு முன்பாக, ஒருசில நிமிடங்கள் யோசித்தால் போதும்... அம்பா, வலையா என்பதை எளிதாகக் கண்டறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுக்க முடியும். அந்தச் சில நிமிடங்கள் என்பது, மருத்துவத்துறையில் குறிப்பிடுவது போல ‘கோல்டன் ஹவர்’. அந்தச் சில நிமிடங்களை ஓரிளம்பெண் எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது, அது உண்மைக் காதலா... போலிக் காதலா என்று பிரித்தறியும் சூத்திரம். அதைப் பற்றி இங்கே நிபுணர்கள் சிலர் பேசுகிறார்கள்...

பெரும்பான்மை ஆண்களின் மனநிலை!

‘`கிராமப்புற இளம்பெண்களுக்கும் பொரு ளாதாரத்துல பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களுக்கும் காதலைப் பத்தின தெளிவை ஏற்படுத்தணும்'’ என்கிறார் சமூக ஆர்வலர் ஷாலின் மரிய லாரன்ஸ்.

‘`ரொம்ப அழகா இருக்கீங்க; அறிவா இருக் கீங்கனு ஆண்கள் பாராட்டினா, அதை ஜஸ்ட் கமென்ட்டா எடுத்துட்டுக் கடந்துடணும். `லவ் யூ'ன்னு கெஞ்சுறான்; ரொம்ப நாளா பின் தொடர்ந்து வர்றாங்கிறதுக்காக `லவ் யூ டூ'ன்னு சொல்லிடக் கூடாது. லவ் பண்ணிட்டு, நல்லா ஊர் சுத்திட்டு கல்யாணம்னு வர்றப்போ ‘நான் இந்த ஜாதி, நீ அந்த ஜாதி. என் வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்க மாட்டாங்க’ன்னு சொல்ற பசங்களும் இருக்காங்க. வெளிநாடு கள்ல டேட்டிங், லவ், செக்ஸ், அப்புறம் கல்யாணம்னு போகும். நம்ம ஊர்ல புரொப்போசல், வாய்ப்பு கிடைச்சா செக்ஸ், அது முடிஞ்சதும், கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்துக்கும் ஒப்புக்கிச்சு. இது நமக்கு வேணாம். நாம வீட்ல பார்க்குற பொண்ணைக் கட்டிக்கலாம்கிறதுதான் பெரும்பான்மை இந்திய ஆண்களோட மன நிலைமை. காதல் கன்ஃபார்ம் ஆனவுடனே மத்த ஆம்பளைங்ககிட்ட பேசாதே, செல் போனோட பேட்டர்னைச் சொல்லு, ஃபேஸ்புக் பாஸ்வேர்டு கொடுன்னு நச்சரிக்க ஆரம்பிப்பாங்க. இதுதான் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப். எந்தக் காலத்துலயும் இந்த டைப் ஆண்கள் காதல், கல்யாணம் ரெண்டுத்துக்குமே செட் ஆக மாட்டாங்க. கொஞ் சம் யோசிங்க கேர்ள்ஸ்’’ என்கிறார் ஷாலின்.

பெண்களின் கனிவான கவனத்துக்கு... காதல்... புதிரும் அல்ல, புனிதமும் அல்ல!

செல்போன், லவ் சாதனமல்ல!

உளவியல் மருத்துவர் ஜெயந்தினி, ``காதலர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பிச்ச பிறகு, இது கொண்டாட்டத்துக்குரியதுன்னு நினைச்சுட்டு ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க எல்லாம் காதல்ல விழ ஆரம்பிச்சுட்டாங்க. சமூக வலைதளங்கள் வந்த பிறகு, வாழ்க்கையோட அன்றாட பிரச்னை களில் ஒன்றாகிடுச்சு காதல்.

இளைஞர்கள் மட்டுமல்ல, கல்யாணமானவன், ரெண்டு குழந்தை களுக்கு தகப்பன், கிழவனெல்லாம் முகம் காட்டாமலோ, போட்டோ ஷாப் செஞ்ச முகத்தைக் காட்டியோ ஸ்கூல் படிக்கிற பெண் குழந்தைகளை லவ் பண்ண வெச்சிக்கிட்டிருக்கானுங்க. வீட்ல பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும், ‘ஆஹா, நீ எவ்ளோ அழகு; நீ எவ்ளோ டேலன்ட்’னு வெளி ஆண்கள் சொன்னா புல்லரிச்சுப் போயிடுறாங்க டீன் ஏஜ் குழந்தைகள். வீட்ல பாசம் கிடைக்காதவங் களோ, வலை விரிக்கிறவனை நம்பி வீட்டைவிட்டே ஓடிப்போயிடுறாங்க.

கொஞ்சநாள் அந்தக் குழந்தையை அனுபவிச்சிட்டு ஓடிப் போயிடுவானுங்க. வயித்துல கருவோட தனியா வாழவும் முடியாம, பிறந்த வீட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாம சில பெண் குழந்தைகள் தற்கொலைகூட செஞ்சிக்கிறாங்க. உங்களை லவ் பண்றதாலேயே ஓர் ஆம்பிளையை நல்லவன்னு நம்பிடாதீங்க. செல்போன் ஒரு பயன்பாட்டுப் பொருள். அது லவ் பண்றதுக்கான பொருள் கிடையாது. உங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கிறதும் தவறான காதலன்கிட்டயிருந்து காப்பாத்துறதும் மட்டுமே பெத்தவங்களோட, டீச்சர்ஸோட வேலை கிடையாது. உங்க கையிலிருக்கிற செல்போன்ல செய்திகளையும் பாருங்க, உஷாரா இருங்க” என்று எச்சரிக்கிறார்.

ஷாலின் மரிய லாரன்ஸ்
ஷாலின் மரிய லாரன்ஸ்
ஜெயந்தினி
ஜெயந்தினி
சந்தோஷ்
சந்தோஷ்

அறிவை வெற்றிபெறச் செய்யுங்கள்!

மருத்துவ உளவியலாளரான சந்தோஷ், பெண்களின் எந்த இயல்பு அவர்களைத் தவறான ஆண்களிடம் சிக்க வைக்கிறது என்று விவரித்தார்.... “ஒரு படத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மியூசிக், பூங்கொத்து என்று அசத்தலாக ஹன்சிகாவிடம் காதலைச் சொல்வார். ‘நீங்க காதலைச் சொன்ன விதம் என்னால நோ சொல்ல முடியாம செஞ்சிடிச்சு’ என்பார் ஹன்சிகா. இன்றைக்கு பல பெண்களின் நிலைமை இதுதான். ஆண்கள் காதலைச் சொல்லும் விதத்தில் உணர்ச்சி வசப்பட்டு இது சரிவருமா என்றெல்லாம் யோசிக்காமல் தலையாட்டி விடுகிறார்கள். எவ்வளவு கலர்ஃபுல்லா காதலைச் சொன்னாலும் உணர்வை ஜெயிக்கவிடாமல் ‘எனக்கு கொஞ்சம் டைம் வேணும்' என்று கேட்டு அறிவை ஜெயிக்க விடுங்கள். ஒரு காதல் போனால் இன்னொரு காதல் வரும். உங்களிடம் இருப்பது ஒரு வாழ்க்கைதான். அதைக் காதலுக்காகவும் இழக்காதீர்கள்.”

நாம் உஷாராக இருப்பதோடு மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்துப் பெண்களையும் உஷார்படுத்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism