Published:Updated:

“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்

சினேகன் - கன்னிகா
பிரீமியம் ஸ்டோரி
சினேகன் - கன்னிகா

காதலர் தின ஸ்பெஷல்

“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
சினேகன் - கன்னிகா
பிரீமியம் ஸ்டோரி
சினேகன் - கன்னிகா

நீண்டநாள் காதல் கைகூடியிருக்கிறது சினேகன் - கன்னிகா தம்பதிக்கு. கன்னிகாவின் கையில் ‘சினேகன்’, சினேகன் கையில் ‘கன்னிகா’ என்ற டாட்டூக்களே அவர்களது காதலுக்கு சாட்சி.

‘`நான் சின்ன வயசுலேயே இவருடைய பாடல்களைக் கேட்டு ரசிச்சிருக்கேன். அத னால அவர்மேல நிறைய மரியாதை உண்டு. ஒரு பட வாய்ப்புக்காக இவரை சந்திச்சேன். வீட்டுக்கு வந்ததும், ‘நல்ல சந்திப்பு கனி’னு மெசேஜ் அனுப்பியிருந்தார். நண்பர்களா நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்க ஆரம்பிச் சோம். கொஞ்ச நாள்லேயே, அவர் காதலை என்கிட்ட சொல்லிட்டாரு. எனக்கும் பிடிச்சிருந் துச்சு. ஆனாலும், உடனே ஓகே சொல்லாம ஒரு ஸ்பெஷல் தினத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...’’ காதல்கதையின் இன்ட்ரோ சொல்லித் தொடர்கிறார் கன்னிகா.

‘`அந்த வருஷம் திருக்கார்த்திகை அன்னிக்கு நான் விளக்கு ஏத்தப்போறேன்னு சொல்லி வீட்டு சாவியை வாங்கிட்டு, மஞ்சள் கயிறோடு இவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துட்டேன். விளக்கெல்லாம் ஏத்திவெச்சு, என் மாமியார் போட்டோவுக்கு முன்னாடி தாலியை வெச் சுட்டு இவர் வர்றதுக்காக வெயிட் பண்ணிட் டிருந்தேன். அவர் வீட்டுக்குள்ள வந்ததும் காதலை சொல்ல, மனுஷன் திக்கு முக்காடிட் டார்...” வெட்கப்பட்டு நிறுத்துகிறார் கன்னிகா. அதை ரசித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் சினேகன்.

‘`ரெண்டு பேருக்கும் சாதிக்கணும்னு ஆசை யும், குடும்ப பொறுப்புகளும் இருந்துச்சு. அதனால திருமணத்தை தள்ளிப்போட்டோம். ரெண்டு பேரும் பொது இடங்கள்ல சந்திச்சுக் கிட்டது கிடையாது. தள்ளி இருந்தே சுக துக்கங் களில் அக்கறையா இருந்தோம். எங்களோடு சேர்ந்து எங்கக் காதலும் பக்குவமடைஞ்சது...” என்கிறார்.

“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்
“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்
“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்
“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்
“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!” - கன்னிகா-சினேகன்

“இவர் பிக்பாஸ் வீட்டுக்குப் போனபோது, என்னைப்பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு சொல்லியிருந்தேன். ஆனா, இவங் கப்பா பிக்பாஸ் வீட்டுக்குள்ள கல்யாணத்தை பத்தி, பேசி அழுததைப் பார்த்ததும் மனசு உடைஞ்சு போயிட்டேன். இனியும் கல்யாணத் தைத் தள்ளிப்போடக்கூடாதுனு முடிவு பண் ணிட்டேன்’’ என்ற கன்னிகாவை தொடர்கிறார் சினேகன்.

‘`கல்யாணத்தை பத்தி ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுல சொன்னோம். என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு உசுரை கையில் பிடிச்சுக்கிட்டு இருந்த என் அப்பா கிட்ட, ‘ ஐயா , இவங்க தான் உன் மருமக, இவங் கள கட்டிக்கத்தான், நீ பார்த்த பொண்ணுகளை யெல்லாம் வேணாம்னு இருந்தேன்’னு சொன்னேன். என் மொத்த குடும்பமும் ஆனந்த கண்ணீரோடு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வெச்சாங்க. கமல் சார்கிட்ட சொன்னதும் ‘பெரிய மண்டபம் பார்த்து நானே முன்னாடி நின்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’னு சொன்னாரு. எங்களோட திருமண செய்தியை வெளியே சொல்லும்போது, நிறைய விமர் சனங்கள் வரும்னு தெரியும். அதுக்கெல்லாம் நாங்க மனசளவுல தயாராகிட்டோம். காதலுக்கு வயசு முக்கியமில்லைங்கிறதுல ரெண்டு பேருமே தெளிவா இருந்தோம்” எனும் சினேக னின் கைகளை இறுகப் பற்றிக் கொண்ட கன்னி காவிடம் இருவரும் கையில் குத்தி இருக்கும் டாட்டூ பற்றி கேட்டோம்.

“மாமாவுக்கு சர்ப்ரைஸ் குடுக்குறதுக்காக அவர் கையெழுத்தை பச்சை குத்திக்கிட்டேன். அவரும் என் கையெழுத்தை பச்சை குத்திக்கிட் டார். இந்த டாட்டூ மாதிரியே, எங்க காதலும் நிலைச்சு இருக்கும்” என்று விடை பெறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism