Published:Updated:

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

லவ் டிராவல்!
பிரீமியம் ஸ்டோரி
லவ் டிராவல்!

காதலர் தின ஸ்பெஷல்

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
லவ் டிராவல்!
பிரீமியம் ஸ்டோரி
லவ் டிராவல்!
70களில் தொடங்கி 2கே கிட்ஸ் வரை காதலின் தகவல் தொடர்பு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?! அந்நாள் காதலர்களான இந்நாள் தம்பதிகள் பகிர்ந்துகொள்கின்றனர் இங்கு...
பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

“பெண் போனால் இவள் பின்னாலேஎன் கண் போகும்...” -
பானுமதி - ஹரிராம்

‘`1978-வது வருஷம் ஒருநாள் ரோட்ல நடந்துபோகும்போது பானுவை எதார்த்தமா பார்த்தேன். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை’ன்ற மாதிரி உடனே காதலிக்கத் தொடங்கிட் டேன். ஆனா, பானு என்னைப் பாத்தாலே பயந்து ஓடிருவா. எனக்கும் பேச பயமா இருக்கும். எங்கயாச்சும் பானு தனியா போறதைப் பாத்தா பின்னாடியே போயி, ‘பெண் போனால் இந்தப் பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும்... வாராயோ கூட வருவாயோ’னு பாடிட்டே போவேன். அப்ப எங்க உணர்வுகளை இந்த மாதிரி பாடல்கள் மூலமாதான் வெளிப்படுத்துவோம். பானு என்னைவிட ரெண்டு வயசு மூத்தது. அதனால என்னோட ஜாதகத்துல ரெண்டு வயசைக்கூடப் போட்டு அவங்க வீட்ல கொடுத்துட்டேன். ஒரு ரகசியம் சொல்லட்டா... அப்போ இருந்து இப்போ வரை ‘டா’ சொல்லித்தான் கூப்பிடுவா. வெளிய போனா மட்டும்தான் மரியாதையா கூப்பிடுவா!”

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

‘`கிப்ஃட், எஸ்.எம்.எஸ், பைக் ட்ராவல்..!’’ - ஷகிலா - கார்த்திக்

“நாங்க 2008-ல தான் மீட் பண்ணினோம். 2010-ல இவங்க ப்ரப்போஸ் பண்ணினாங்க. அப்போ ஹார்ட்டின் ஷேப்ல வடகம் விப்பாங்களே... அத வாங்கி எண்ணெய்ல பொரிச்சு அத ரெட் கலர்ல பெயின்ட் அடிச்சு காலண்டர் அட்டைல டிசைன் பண்ணி வேலன்டைன்ஸ் டேவுக்கு கிஃப்ட் கொடுத்தாரு. அதுலயே பெருசா இம்ப்ரஸ் ஆயிட்டேன். பதிலுக்கு நானும் காலண்டர் மாதிரி ரெடி பண்ணி ஒரு நாளைக்கு ஒரு லவ் மெசேஜ் எழுதிக் கொடுத்து இம்ப்ரஸ் பண்ணிருக்கேன். நிறைய இடங்களுக்கு பைக்ல போயிருக்கோம். மழைல நனைவோம். ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். திருப்பரங்குன்றம் பக்கத்துல உள்ள ஹோட்டல்தான் எங்க பேவரைட் ஸ்பாட். அப்போ ஆண்டிராய்டு மொபைல் எல்லாம் இல்ல. சாதாரண மொபைல்ல மெசேஜ், கால்ஸ்னு காசைக் கரைச்சு லவ் பண்ணுனோம். வீட்ல பிடிவாதம் பண்ணி இவரைக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன். ரெண்டு குழந்தைங்களோட இப்போ லைஃப் செட்டில்டு!”

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

வாட்ஸ்அப், வீடியோகால், ஃபேஸ்புக் காதல் -
விக்னேஷ்வரி - கலைச்செல்வன்

“ரெண்டு பேரும் பாலி டெக்னிக்ல ஒரே கிளாஸ்ல படிச்சோம்; ஃப்ரெண்ட்ஸா னோம். ஒருநாள் உடம்பு சரி யில்லாம கையில ட்ரிப்ஸ் ஏத்துனத் தோட எக்ஸாம் எழுதப் போனேன். அப்போ அவருக்குக் கொஞ்சம் அதிகமா ஃபீல் ஆயிடுச்சு. போன் பண்ணி லவ் பண்றதா சொல்லிட்டாரு. யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். அடுத்த நாள் ஒரு சிரிப்புதான் அவருக்கு நான் தந்த பதில். பைக்ல வெளியில போறது, வேலன்டைன்ஸ் டேக்கு ஒரே மாதிரி டிரஸ் போடுறதுன்னு தெறிக்கவிடுவோம். ஹாஸ் டல்ல இருக்கும்போது வாட்ஸ்அப், போன் கால் மூலமா டெய்லி பேசிப்போம். ஊருக்குப் போயிட்டா அங்க யாருகிட்டயும் டச் போன் இருக்காது. அதனால லேப்டாப்ல மோடம் கனெக்ட் பண்ணி, சிம் யூஸ் பண்ணி ஃபேஸ்புக்ல சாட், வீடியோ கால்ல பேசிப் போம். படிச்சு முடிச்சு வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா நாடோடிகள் ஸ்டைல் மேரேஜ்தான். அப்புறம் வீட்ல ஒப்புக்கிட்டு 2021 கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க!”

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

“மொட்ட மாடி மொட்ட மாடி... ஒரு லவ் ஜோடி!” பஞ்சவர்ணம் - பால்பாண்டி

“1990-ம் வருசம், நான் பள்ளிக் கூடத்துல படிச்சிட்டு இருந்தேன். ‘உன்னை விரும்பு றேன்.. உன்னைத்தான் கல் யாணம் பண்ணணும்னு ஆசைப் படுறேன்’னு சொன்னாரு. ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் வீடுதான். எனக்கும் அவரைப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, அப்பாவுக்கு பயம். அப்படியே ரெண்டு, மூணு வருஷம் போச்சு. என்கூட படிச்ச பொண்ணு ஒருத்தி மூலமா லெட்டரைக் கொடுத்து வாங்கிப்போம். எங்கயாச்சும் பார்த்தாக்கூட பேசமாட்டோம். ஏதாச்சும் அவசரமா தகவல் சொல்லணும்னா ஒரு குட்டிப் பையன்கிட்ட சொல்லி, அவங் களை மொட்டை மாடிக்கு வரச் சொல்லி, நான் எங்க வீட்டு மாடில நின்னு பேசுவேன். லவ் பண்ண அஞ்சு வருஷத்துல ஒரு தடவகூட இவருகூட எங்கேயும் போனது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம்தான் அதெல்லாம்!”

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை... - லவ் டிராவல்!

”கண் ஜாடை, கை ஜாடைதான்!” - பாக்கியம் - பழனிச்சாமி

“ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் வீடு. இவரு ரிக்‌ஷா ஓட்டுவாரு. அப்போ ஆள் சூப்பரா இருப்பாரு. அப்ப அப்ப பார்த்துப்போம். கொஞ்ச நாள்ல இவரு வந்து, ‘உன்னைக் காதலிக்கிறேன்’னு சொன்னாரு. எனக்கும் இவரைப் புடிக்கும் கிறதால உடனே ஓ.கே சொல்லிட்டேன். நான் எழுதப் படிக்காததால லெட்டர்கூட எழுதத் தெரியாது. இவங்க வீட்டுக்கிட்ட இருக்கிற குழாய்ல தண்ணி புடிக்க தினமும் போயிடு வேன். இவரும் வேலைய முடிச்சிட்டு அங்க வந்து நிப்பாரு. நாங்க லவ் பண்ணின ஆறு மாசமும் கண் ஜாடையிலேயேதான் பேசிக்கிட் டோம், சிரிச்சுக்கிட்டோம். எங்கயாவது தனியா பார்த்தாக்கூட ரெண்டு நிமிஷம்தான் பேச முடியும். முதல்முதலா யாருக்கும் தெரியாம, ரொம்ப முயற்சி பண்ணி ரஜினி நடிச்ச ‘மனிதன்’ படத்துக்குப் போனோம். ரெண்டு பேரும் வேற வேற சமுதாயத்தைச் சேர்ந்தவங்க என்பதால எதிர்ப்பு.1988-ம் வருஷம் வீட்ல இருந்து வெளிய போய் கல்யாணம் பண்ணிகிட்டோம். ஒரு குழந்தை பொறந்ததும் ஏத்துக்கிட்டாங்க!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism