கட்டுரைகள்
Published:Updated:

‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’ - காதலனைக் கடத்தி, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த காதலி!

‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’
பிரீமியம் ஸ்டோரி
News
‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’

‘‘டேட்டிங் போகலாம்... என் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறேன் என்று போனில் அழைத்தார் லட்சுமி பிரியா. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, என்னை பிரேக்-அப் செய்யச் சொல்லித் தாக்கினார்.

பிரேக்-அப் செய்ய மறுத்த காதலனை, அடியாட்களை வைத்துக் கடத்தியதோடு, அவரை நிர்வாண வீடியோ எடுத்து சித்ரவதை செய்த கல்லூரி மாணவி கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர் சிவராம். இவரும், திருவனந்தபுரம், வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லட்சுமி பிரியாவும் ஒருவரையொருவர் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. மேற்படிப்புக்காக எர்ணாகுளத்திலுள்ள கல்லூரிக்குப் படிக்கச் சென்றிருக்கிறார் லட்சுமி பிரியா. அங்கு மற்றோர் இளைஞருடன் அவருக்குக் காதல் மலர்ந்திருக்கிறது. இதனால், சிவராமுக்கு பிரேக்-அப் சொல்ல முடிவுவெடுத்திருக்கிறார் லட்சுமி பிரியா. ஆனால், ‘ஒரு செடி, ஒரு ஃபிளவர். வாழ்ந்தால் அது உன்னோடுதான்’ என்று சிவராம் சினிமா டயலாக்போல உருகியிருக்கிறார். சிவராமைத் தொந்தரவாக நினைத்த லட்சுமி பிரியா, அவரைக் கழற்றிவிட தன் புதிய காதலனிடமே ஐடியா கேட்டிருக்கிறார்.

‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’
‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’

அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சிவராமுக்கு போன் செய்த லட்சுமி பிரியா, ‘டேட்டிங் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார். சிவராமும் தன்னுடைய லொகேஷனை ஷேர் செய்ய, அங்கு புதிய காதலனுடனும், அடியாட்கள் நான்கு பேருடனும் காரில் வந்திருக்கிறார் லட்சுமி பிரியா. சிவராமை பிக்கப் செய்துகொண்டு கார் எர்ணாகுளத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கிறது. அப்போது, ‘‘நாம் பிரேக்-அப் பண்ணிக்கலாம்னு சொன்னா கேட்க மாட்டியா?” என்று கேட்டு சிவராமை காரில் வைத்தே துவைத்தெடுத்திருக்கிறார் லட்சுமி பிரியா. பிறகு, சிவராமின் முகத்தைத் துணியால் கட்டிய அவரின் புதிய காதலனும், அடியாட்களும் ஆளில்லாத வீடு ஒன்றுக்குக் கடத்திச் சென்று சித்ரவதை செய்திருக்கிறார்கள். பிறகு ``இதை வெளியில் சொன்னால் உன் நிர்வாண வீடியோ, ஃபேஸ்புக்கில் ரிலீஸ் ஆகிவிடும்'' என்று மிரட்டி, அவரை சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’
‘பிரேக்-அப்’னு சொன்னா கேட்க மாட்டியா?’

`என்ன நடந்தாலும் சரி... காதலி என்கிற பெயரில் நடமாடும் கொடூர லட்சுமி பிரியாவை விட்டுவைக்கக் கூடாது' என்று முடிவெடுத்த சிவராம், மொத்தத்தையும் போலீஸிடம் புட்டுப்புட்டு வைத்தார். ‘‘டேட்டிங் போகலாம்... என் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறேன் என்று போனில் அழைத்தார் லட்சுமி பிரியா. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, என்னை பிரேக்-அப் செய்யச் சொல்லித் தாக்கினார். என் கழுத்தில் கத்தியைவைத்து, என்னிடமிருந்த 5,500 ரூபாய் பணம், ஸ்மார்ட் வாட்ச், கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றை லட்சுமி பிரியாவும், அவருடன் வந்தவர்களும் பறித்துக்கொண்டனர். பிறகு, என் முகத்தைத் துணியால் மூடி ஆளில்லாத ஒரு வீட்டுக்குக் கொண்டு சென்று கட்டிப்போட்டார்கள். அங்குவைத்து என்னை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்தார் லட்சுமி பிரியா. நான் மயங்கும்வரை அடிவயிற்றில் மிதித்து, என் முதுகில் காயங்களை ஏற்படுத்தினார். அவருடன் வந்தவர்கள் கிரிக்கெட் மட்டையால் என் கால்களில் அடித்தார்கள். பிறகு, கஞ்சாவைப் புகைக்கவைத்து, என் உடலில் சிகரெட் கங்கால் சூடு வைத்தார்கள். பிறகு, காரில் ஏற்றி ஆளில்லாத சாலை ஓரத்தில் கீழே தள்ளிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்” என்று சிவராம் சொன்னதைக் கேட்டு, போலீஸே அதிர்ந்திருக்கிறது.

உடனடியாகக் களத்தில் இறங்கிய போலீஸார், தலைமறைவாக இருந்த லட்சுமி பிரியா, அடியாட்களில் ஒருவரான அமர் மோகன் இருவரையும் கைதுசெய்திருக்கின்றனர். புதிய காதலன் உட்பட மேலும் ஆறு பேரைத் தேடிவருகின்றனர்.

காதலிகள் ஜாக்கிரதை!