Election bannerElection banner
Published:Updated:

``நந்தினியோட இயல்பை பார்த்துதான் விரும்பினேன்!’’ - காதல் குறித்து மதன் கார்க்கி

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆண்களை முதலில் ஈர்ப்பது பெண்களின் புற அழகா, இயல்பா என்பது குறித்த தன்னுடைய கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்தச் சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்கும், ஆண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

காதல்
காதல்

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லேட் பாய் இயல்புகளையும், குடும்ப வன்முறைகள் பற்றியும், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன், ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை ஆகியவை குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?' என்பது பற்றி பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆண்களை முதலில் ஈர்ப்பது பெண்களின் புற அழகா, இயல்பா என்பது குறித்த தன்னுடைய கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

``காதல் ஒரே உணர்வுன்னாலும், புற அழகுதாண்டி இயல்பு, அறிவு, பழகும் விதம்னு ஒவ்வொருத்தருக்கும் அது வெவ்வேறு காரணங்களால வரும்கிறது என்னோட கருத்து. இதுவே திருமணம்னு வர்றப்போ, நம்ம வேலைக்கு ஒத்து வருவாங்களா, ரெண்டு பேருக்குள்ள என்னென்ன பொருத்தங்கள் இருக்கு, என்னென்ன பொருத்தமின்மைகள் இருக்குன்னு யோசிக்கணும். இதையெல்லாம் தாண்டி, கல்யாணம் முடிஞ்சு ஓர் அறையை ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிறப்போ இன்னும் பல ப்ளஸ், மைனஸ் தெரிய வரும்.

love
love
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 8 - ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?

என் காதலையே இதுக்கு உதாரணமா சொல்லலாம். நான் படிச்சது எப்பவும் கணிதமும் இயற்பியலும் பேசுற பொறியியல் கல்லூரியில. அங்க, நந்தினி கலீல் ஜிப்ரான் கவிதைகள் பத்தியும் சைக்காலஜி பத்தியும் ஒரு டாக் கொடுத்திட்டிருந்தாங்க. அதுக்கு முன்னாடியே பல தடவை நான் நந்தினியைப் பார்த்திருக்கிறேன்னாலும், அந்த நிமிஷம்தான் அவங்க மேல ஈர்ப்பு வந்துச்சு. இந்த விஷயத்தை அஞ்சு வருஷம் கழிச்சுதான் நான் அவங்ககிட்ட சொன்னேன். அப்போ நான் ஆஸ்திரேலியாவிலும் அவங்க அமெரிக்காவிலும் படிச்சிட்டிருந்தோம். ஒரு மாசம் ரெண்டு பேரும் நிறைய பேசினோம். ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுகிட்டோம். ஆனா, அந்த தொலைதூர ரிலேஷன்ஷிப்பை எங்களால சரியா கொண்டு போக முடியலை. அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் எந்தத் தொடர்பும் இல்லாம இருந்தோம். நான் படிச்சு முடிச்சு இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறம் அவங்களோட நம்பரை கண்டுபிடிச்சு பேசினேன். அவங்களும் என்னை மாதிரியே எங்களோட ரிலேஷன்ஷிப்பை பத்தி இன்னமும் நினைச்சிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் கல்யாணம் செஞ்சுகிட்டோம்.

திரைப்படங்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஓர் ஆண் இப்படித்தான் இருக்கணும், பெண் இப்படித்தான் இருக்கணும். இதுதான் அழகு, இந்த மாதிரி இருக்கிறவங்க நம்மகூட இருந்தா நல்லா இருக்கும்னு முடிவெடுத்திடுறாங்க. நம்ம துணையை திரைப்படங்களையும் விளம்பரங்களையும் அளவீடா வெச்சு தீர்மானிக்காம இருக்கலாம்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 9 - பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

தவிர, எல்லா மிருகங்கள்லேயும் குரல், தோற்றம்னு ஆண் மிருகங்களுக்கான வர்ணனை இருக்கு. ஆனா, மனித இனத்துல மட்டும்தான் எல்லா இலக்கியங்களும் பெண்களைத்தான் அழகுக்கான பாடுபொருளா எடுத்துகிட்டு, ஆண்களை வீரத்துக்குன்னு பிரிச்சு வெச்சிருக்கு. வெறும் ஈர்ப்புக்கு வேணும்னா அழகும் வீரமும் போதுமானதா இருக்கலாம். ஆனால், வாழ்க்கைக்கு அதையும்தாண்டி நிறைய தகுதிகள் தேவைப்படுது.’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு