Published:Updated:

அலுவலக ஆண் - பெண் நட்பு... எல்லை எதுவரை?

ஆண் - பெண் நட்பு
பிரீமியம் ஸ்டோரி
ஆண் - பெண் நட்பு

அலுவலக ஆண்களுடனான உங்கள் நட்பு, மற்றவர்களை முகம்கோணச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அலுவலக ஆண் - பெண் நட்பு... எல்லை எதுவரை?

அலுவலக ஆண்களுடனான உங்கள் நட்பு, மற்றவர்களை முகம்கோணச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Published:Updated:
ஆண் - பெண் நட்பு
பிரீமியம் ஸ்டோரி
ஆண் - பெண் நட்பு

அலுவலகத்தில் ஆண் பணியாளரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... ஆண் - பெண் நட்பை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் இன்றும் பல பெண்களுக்கு கேள்விகள் உண்டு.

‘’அலுவலக நட்பை சரியாகக் கையாளா விட்டால் அது, குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும். ஆண், பெண் நட்பு குறித்த தெளிவு வந்துவிட்டால் பாலியல் சீண்டல் தொடங்கி பல பிரச்னைகளில் இருந்தும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஜெகஜனனி. அதற் கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

ஜெகஜனனி
ஜெகஜனனி

செய்ய வேண்டியவை:

உங்களிடம் பேசும் ஆண், கண்களைப் பார்த்துப் பேசுகிறாரா என்பதை கவனி யுங்கள். பார்வை அங்கும், இங்கும் அலை பாய்ந்தால் முகத்துக்கு நேரே சொல்லுங்கள்.

உங்களிடம் பேசவரும் ஆண், குறிப்பிட்ட இடைவெளியில் இருந்துதான் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.

அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்குகள், உரையாடல்களின்போது, உங்களை பாடி ஷேமிங் செய்தாலோ, நாகரிகம் இல்லாமல் பேசினாலோ அல்லது வேலை தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசினாலோ உடனே எழுந்து உறுதியான குரலில் கண்டிக்கத் தயங்காதீர்கள்.

அலுவலக ரிலேஷன்ஷிப்பில் உங்களுக்கென சில வரையறைகள் வைத்துக்கொள்ளுங்கள். அந்த வரையறையை யார் தாண்டினாலும் அவரிடமிருந்து ஒதுங்கி விடுவது, உங்கள் பணிச் சூழலை மேம்படுத்தும்.

உடல்ரீதியாக மட்டுமன்றி, வார்த்தைகள் மூலமாக வரும் பாலியல் சீண்டல்களையும் ஆரம்பத்திலேயே கண்டித்து நிறுத்துங்கள்.

பாலியல் சீண்டல்கள் குறித்து அலுவலகத்தில் உள்ள விசாகா கமிட்டிக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

அலுவலக ஆண்களுடனான உங்கள் நட்பு, மற்றவர்களை முகம்கோணச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நெருங்கிய நண்பர் என்பதற்காக, அலுவலகத்தில் எந்நேரமும் அவரின் அருகிலேயே அமர்ந்து பேசிக்கொண்டே இருக்காதீர்கள். அது உங்களின் வேலையை பாதிப்பதோடு, மற்றவர்களுக்கும் இடை யூறாக இருக்கும்.

நீங்கள் உயர் பதவியிலும் உங்கள் ஆண் நண்பர் நீங்கள் வேலை வாங்கும் இடத் திலும் இருக்கும்பட்சத்தில், பணி சார்ந்த எந்தச் சலுகையையும் அவருக்கு வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். அலுவலக வளாகத்தில் எல்லோருக்கும் உரிய மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

உங்களுக்கும் உங்கள் அலுவலக நண்பருக்கும் பல மொழிகள் தெரிந்திருந்தாலும், நீங்கள் பணி யாற்றும் அலுவலகத்தில் பரவலாகப் பேசப்படும் மொழியைத் தவிர்த்து வேறு மொழியில் பேசுவதைத் தவிருங்கள். அதாவது, அருகிலிருப் பவர்களுக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே நீங்கள் வேறு மொழியில் பேசிக் கொள்வதாகத்தான் எடுத்துக்கொள்வார்கள். இத்தகைய செயல்பாடு, மற்றவர்களிடம் இருந்து உங்களை அந்நியப்படுத்தவும் கூடும்.

அலுவலக நட்பு என்பது அலுவலகச் சூழலால் உண்டானது. ஒருவேளை அந்த நட்பில் நீங்கள் பர்சனலாகவும் கனெக்ட் ஆகும் பட்சத்தில் உங் களுக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் குடும்பத்தாரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அலுவலக ஆண் - பெண் நட்பு... எல்லை எதுவரை?

செய்யக் கூடாதவை:

அலுவலக பணி தவிர்த்து, அவசியமின்றி ஆண் நண்பர்கள் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வதையோ, வீட்டுக்கு வருவதையோ அனுமதிக்காதீர்கள்.

உங்களின் பர்சனல் விஷயங்களை அளவு கடந்து பகிராதீர்கள்.

உங்களைத் தொட்டுப் பேசவோ, நாகரிகம் என்ற பெயரில் கட்டி அணைக்கவோ அனுமதிக்காதீர்கள்.

பட்டப்பெயர்கள், செல்லப் பெயர்கள் வைத்து உங்களை அழைப்பதை அனுமதிக்காதீர்கள்.

அலுவலகத்தில் அமர்ந்து ஒன்றாக ரீல்ஸ் செய்வது, சமூக வலைதளங்களில் நீங்கள் அலுவலக ஆண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்வது போன்றவற்றை அவசியம் தவிர்க்கவும்.

பலரின் முன்னிலையில் உங்கள் ஆடை நன்றாக இருப்பதாகச் சொல்வதில் தவறில்லை. ஆனால், தனியே அழைத்து ‘டிரஸ் சூப்பர், ஃப்ரெஷ்ஷா தெரியுற’ என்றெல்லாம் பேசினால், அதைக் கண் டிப்பதும், நட்பைத் துண்டிப்பதும்தான் நல்லது.

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism