Published:Updated:

2K Kids: அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!

அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!
பிரீமியம் ஸ்டோரி
அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!

மு.நிஹாசினி

2K Kids: அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!

மு.நிஹாசினி

Published:Updated:
அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!
பிரீமியம் ஸ்டோரி
அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!

உலகில் எவ்வளவு தேடி அலைந்தாலும் நாம் மீண்டும் அமர முடியாத சிம்மா சனம் தாயின் கருவறை. அதுபோலத்தான், ஒரு நல்ல நண்பன் கிடைப்பதும் கொடுப்பினை.

சிறு வயது முதலே, ஒரு நல்ல நண்பன் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கியதுண்டு. பள்ளி வாழ்க்கையில் அது நடக்கவே இல்லை. கல்லூரியில், நிச்சயம் இங்கு நமக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்தேன். முதலாம் ஆண்டு முடிந்துவிட்டது, நான் எதிர்பார்த்த நட்பு எதுவும் அமையவில்லை.

இரண்டாம் ஆண்டு ஆரம்பமாகி ஒரு மாதம் கடந்த நிலையில், வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தார் ஒரு மாணவர். ‘என் பேரு அருண் குமார்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நடுவில் வந்து சேர்ந்ததால் அவருக்கு ஃபிரெண்ட்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்க, ‘பாடம் சம்பந்தமா என்ன உதவினாலும் கேளுங்க’ என்று நான் அவருக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுத்தேன். அப்போதுவரை எனக்குத் தெரியாது... நான் பல காலமாகக் காத்திருந்த நட்பாக எங்கள் உறவு மாறப்போகிறது என்று.

2K Kids: அன்னைக்கு நிகராக ஓர் ஆண் தோழன்!
VSanandhakrishna

‘யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்ட்’ என்று விரைவிலேயே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எங்கள் நட்பு வளர்ந்தது. ஒரு நண்பன் கிடைத்த பின் கல்லூரி வாழ்க்கை இன்னும் கொண்டாட்ட மானது. பேசி சிரிப்பது மட்டுமல்லாமல், அறிவுரை, வழிகாட்டல் என்று ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட்டிவ்வாக இருந்தோம்.

நான் காவலர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு என்னை ஊக்குவித்தது என் நண்பன்தான். சமூகச்சூழல் பற்றி பெரிதாக அறியாத எனக்கு, என் தோழன்தான் அதைப் புரிய வைத்தான். என் அம்மாவிடம் அவனை அறிமுகப்படுத்தியபோது, ‘உங்ககிட்ட நான் உணர்ற ஒரு பாதுகாப்பு உணர்வை....' என்று சொல்லி அறிமுகப்படுத்தியது சிறப்பான தருணம்.

என்னை நேசிப்பதாகச் சொல்லி ஒருவர் தொந்தரவு செய்தபோது, அந்தப் பிரச்னையை வீட்டில் சொல்ல ஒருவித தயக்கம் ஏற்பட, நண்பனிடம் சொன்னேன். சம்பந்தப்பட்டவரிடம் பேசி, அறிவுரை கூறி, எனக்கு அதற்குப் பின் எந்தத் தொந்தரவும் ஏற்படாத வகையில் அதைக் கையாண்டான். தன் கடந்த கால வாழ்க்கை, காதலையெல்லாம் அவன் என்னிடம் பகிர்ந்துகொண்டபோது, எங்கள் நட்பு இன்னும் பலமானது. வகுப்பில் ஆசிரியரிடம், ‘என் பெஸ்ட் ஃபிரெண்ட்’ என்று நண்பன் என்னை அறிமுகப்படுத்திய தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

இதைச் சொல்ல மறந்துவிட்டேனே... என் நண்பனை நான் ‘அம்மா’ என்றுதான் அழைப்பேன்!