Published:Updated:

கூடவே இருக்கிறது காதல் இல்ல... என்ன நடந்தாலும் கூடவே இருக்கிறதுதான் காதல்!

மணிமேகலை - தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
மணிமேகலை - தங்கம் தென்னரசு

- மணிமேகலை தங்கம் தென்னரசு

கூடவே இருக்கிறது காதல் இல்ல... என்ன நடந்தாலும் கூடவே இருக்கிறதுதான் காதல்!

- மணிமேகலை தங்கம் தென்னரசு

Published:Updated:
மணிமேகலை - தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
மணிமேகலை - தங்கம் தென்னரசு

தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, நினைவுப் பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே, திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ தங்கம் தென்னரசின் சென்னை பெசன்ட் நகர் வீடு முழுவதும் சிரிப்புச்சத்தம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

“இந்த வீடு எப்போதும் கலகலனுதான் இருக்கும். நான் சென்னை வருவது எல்லாருக்கும் கூடுதல் ஜாலி. கிடைக்கும் நேரத்தைப் பரபரப்பு இல்லாமல், கொண்டாடித் தீர்க்கும் குடும்பஸ்தன் தென்னரசை இங்க நீங்க பார்க்கலாம். தொகுதி பணிகளுக்காக நான் சொந்த ஊரான மல்லாங்கிணற்றில் தங்கியிருக்கேன். குடும்பம் சென்னையில் இருக்கு. குழந்தைகள் படிப்பு, ஆரோக்கியம், நல்லது கெட்டதுனு எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டு, உறவையும் குடும்பத்தையும் பத்திரமா பார்த்துக்கிறது என் மனைவி மணிமேகலை தான்” - மனைவியை அறிமுகம் செய்தார் தென்னரசு.

கூடவே இருக்கிறது காதல் இல்ல...
என்ன நடந்தாலும் கூடவே இருக்கிறதுதான் காதல்!

சிரிப்புடன் பழைய நினைவுகளுக்கு உயிர் கொடுத்தார் மணி மேகலை, “திருமணம் ஆகி 27 வருஷங்களாகுது. ஆனா, எங்களுடைய காதலுக்கு வயசு 31 வரு ஷங்கள். காதலின் அடை யாளமாக இமயா, இதயானு ரெண்டு பொண்ணுங்க'' என்றார்.

“என் அக்கா தமிழச்சி, திருமணம் ஆகி சென்னையில் இருந்தாங்க. நானும் இன்ஜினீயரா ஸ்பிக்கில் வேலை பார்த்துட்டு ஃபிரெண்ட்ஸோடு சென்னையில் தங்கியிருந்தேன். என் அக்காவின் கணவரும், என் மனைவி யின் சகோதரரும் நண்பர்கள். ரெண்டு குடும்பத்தாரும் அடிக்கடி சந்திச்சுப் போம். அப்போ மணிமேகலையைப் பார்த்திருக்கேன். பிடிச்சுருந்துச்சு. ஒருநாள் காதலைச் சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் கடந்து போயிட்டாங்க” என்ற கணவரைத் தொடர்கிறார் மணிமேகலை...

“இவர் காதலைச் சொன்னதும் எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல. என்னுடைய பதிலுக்காக அவர் காத்திருப்பது, அவருடைய முகத்தில் அப்பட்டமா தெரியும். எப்போ பதில் சொல்லுவீங்கனு கேட்டு வற்புறுத்தினது கிடையாது. கொஞ்ச நாள்லயே நானும் காதலைச் சொல்லிட்டேன். நான் பி.ஜி படிச்சுட்டு இருந்தேன். போன் இல்லாத நேரம். தினமும் காலேஜ் முடிஞ்சதும் பைக்கில் பிக்அப் பண்ணிப்பாரு. கிண்டி பூங்காவில் மணிக்கணக்கில் பேசிட்டு இருப்போம். திருமணத்தைப் பத்தி வீட்டில் பேச ஆரம்பத்தில் பயமா இருந்துச்சு'' - மணிமேகலையைத் தொடர்கிறார் தங்கம் தென்னரசு...

“அக்காகிட்ட சொல்லிட்டு, அப்புறம் அப்பாகிட்ட சொன்னேன். அப்பா சாதி மறுப்புத் திருமணம் பண்ணிக்கிட்டவர் என்பதால் எதிர்ப்பு இல்ல. மணிமேகலை வீட்டில் பேசினோம். சாதி, பழக்க வழக்கம்னு வேறுபாடுகள் இருந்தாலும், கலைஞர் முன்னிலையில் திருமணம் நடந்துச்சு. குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வாழ்க்கையைக் கொண்டாடிட்டு இருந்த நேரம், அப்பா வுடைய எதிர்பாராத மரணம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு. கலைஞர்கிட்ட இருந்து அரசியலுக்கான அழைப்பு வந்துச்சு. அரசியலுக்கு வரத் தயங்கினேன். முழு சப்போர்ட் கொடுத்து பொது வாழ்க்கைக்கு வழியனுப்பி வெச்சது மணிமேகலைதான்'' - மனைவி யைப் பெருமையாகப் பார்க்கிறார் தென்னரசு.

“பொதுவாழ்க்கையால் எங்களுடைய பெர்சனல் நேரம் குறைஞ்சுது. ஆனா, காதல் குறையல. எப்போதும் என்னோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கணும்னு நினைப்பாரு. அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுப்பாரு. எனக்கு விருப்பமான சில பொருள்களை கிஃப்ட் பண்ணுவாரு. எங்க பொண்ணுங்ககூட கலாய்ப்பாங்க. ‘எனக்குதான் வயசாகுது. காதலுக்கு இல்லை’னு டயலாக் பேசுவாரு. கூடவே இருக்கிறது காதல் இல்ல... என்ன நடந்தாலும் கூட இருக்கிறதுதான் காதல்” - குறையாத காதலுடன் பேசுகிறார் மணிமேகலை. தொடர்கிறார் தென்னரசு...

“மணிமேகலையின் விட்டுக்கொடுத்தலும் புரிந் துணர்வும்தான் என்னை அடுத்தடுத்த கட்டத்துக்குப் பயணிக்க வைக்குது. குடும்பத்துக்காக இயங்க ஆரம்பிச்சவங்களை அப்படியே குடும்பத்துக்குனு நேர்ந்துவிட்டுடக் கூடாதுங்கிறதில் ரொம்ப உறுதியா இருப்பேன். ‘நீ உன் கனவுகளுக்காக இயங்க ஆரம்பி'னு சொல்லிட்டே இருப்பேன். நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் திரைப்படம் இயக்குறதுக்கான கோர்ஸ் படிச்சுருக்காங்க. சில டாகுமென்ட்டரி படங்களும் பண்ணிட்டு இருக்காங்க. தங்கம் தென்னரசின் மனைவியாக இல்லாமல், மணிமேகலையாக சாதிப்பாங்க. மணிமேகலையின் கணவர் தங்கம் தென்னரசுனு மக்கள் பேசும் நாள் நிச்சயம் வரும்” - கைகோத்து விடைபெறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism