Published:Updated:

சிலையாய் வந்த தாய்மாமன்!

சிலையாய் வந்த தாய்மாமன்!
பிரீமியம் ஸ்டோரி
சிலையாய் வந்த தாய்மாமன்!

கடந்த 2020 ஜூன் 28ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் நடந்த சாலை விபத்தில், செளந்திரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகனான பிரவீன் என்ற பாண்டிதுரை(21) உயிரிழந்தார்.

சிலையாய் வந்த தாய்மாமன்!

கடந்த 2020 ஜூன் 28ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் நடந்த சாலை விபத்தில், செளந்திரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகனான பிரவீன் என்ற பாண்டிதுரை(21) உயிரிழந்தார்.

Published:Updated:
சிலையாய் வந்த தாய்மாமன்!
பிரீமியம் ஸ்டோரி
சிலையாய் வந்த தாய்மாமன்!

தென் மாவட்டங்களில் இன்றும் காதணி விழாக்கள் தோறும் ‘தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி’ என கோரஸ் பாட ‘மானூத்து மந்தையில’ ஓங்கி ஒலிக்கும். மாமன்கள் இல்லா வாழ்க்கையை தென் தமிழகத்து மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. கை தொட்டுத் தூக்கும் வயதிலிருந்து கைபிடித்து இன்னோர் குடும்பத்திற்கு வழியனுப்பி வைக்கும் வரை ஒவ்வொரு அடியிலும் தாய்மாமன்கள் உடனிருப்பார்கள். இதற்கு சரியான எடுத்துக்காட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தேறியுள்ளது.

கடந்த 2020 ஜூன் 28ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் நடந்த சாலை விபத்தில், செளந்திரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகனான பிரவீன் என்ற பாண்டிதுரை(21) உயிரிழந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தம்பதியின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மகள் தாரிகா, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. பாண்டித்துரை இறந்துபோனதால் அவருடைய சிலிக்கான் முழு உருவச் சிலையை வைத்து, தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்துத் தன் குழந்தைகளுக்குக் காது குத்தியுள்ளார், பாசமலர் பிரியதர்ஷினி.

சிலையாய் வந்த தாய்மாமன்!
சிலையாய் வந்த தாய்மாமன்!

காதணி விழாவை முடித்துவிட்டு சேனல்களில் தங்கள் வீட்டு இல்ல நிகழ்ச்சி செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிரியதர்ஷினியிடம் பேசினேன்.

“பாண்டிதுரைக்கு சட்டைத்துணி செலக்ட் பண்ணிக் குடுக்கிறதுகூட நான்தான். அவனோட எப்.இசட் பைக்கை யாரையும் தொடவிடமாட்டான். அந்த வண்டி மேல அப்டி உயிரா இருந்தான். அதனால என்னவோ அந்த வண்டியிலயே அவன் உயிர் போயிருச்சு.

அவன் ரொம்ப சீக்கிரமாவே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான். அதனால எங்களுக்குள்ள சின்னப் பிரிவு ஏற்பட்டுச்சு. இருந்தும்கூட என்ட ஒரு நாள்கூட பேசாம இருக்கமாட்டான். என் பிள்ளைங்க மேல அவ்ளோ பாசமா இருப்பான். என் மகன் பிறந்தநாளையே பிளக்ஸ் அடிச்சு பெரிய அளவுல கொண்டாடினான். அவன் லவ் மேரேஜ் பண்ணுன கோவத்துல, அவன் இல்லாம நாங்க என் பிள்ளைங்களுக்கு மொட்டை போட்டுக் காது குத்த மதுரையில இருக்கிற எங்க குலதெய்வமான பாண்டி கோவிலுக்குப் போயிட்டோம். இந்தத் தகவல் அவனுக்குத் தெரிஞ்சதும் போன் போட்டு அழுதுட்டான். நான் இல்லாம காது குத்தக் கூடாதுன்னு சொல்லிட்டான். என் பிள்ளைங்க பொறந்ததுல இருந்து அவன் மடில வச்சுதான் காது குத்தணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அதனால மறுக்க முடியாம நாங்க திரும்பி வந்துட்டோம். ஒட்டன்சத்திரம் வந்ததும் அவன் செலவுல தோடு, செயின் எல்லாமே வாங்கிக் கொடுத்துட்டான். மூணு மாசம் ஆகட்டும், அப்பறம் காது குத்து வச்சுக்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.

சிலையாய் வந்த தாய்மாமன்!
சிலையாய் வந்த தாய்மாமன்!

அவன் இறந்த சமயத்துலதான் இறந்தவங்கள அப்படியே சிலையா செஞ்சு வீட்டு விசேஷத்துல இருக்குற மாதிரியான வீடியோவ யூடியூப்ல பாத்தோம். அதப்பாத்ததும் பாண்டிதுரையோட ஆசைய நிறைவேத்தணும்னு அம்மா, அப்பா எல்லாரும் பேசி முடிவெடுத்தோம். பெங்களுரூல சிலிக்கான் சிலை செய்றவங்கள நேர்ல பாத்துப் பேசினோம். 5 லட்ச ரூவா ஆகும்னு சொன்னாங்க. ஆனா சிலைய செஞ்சு முடிக்க ஒரு வருசம் ஆகும்னாங்க. சரின்னு சொல்லிட்டு, காத்திருந்தோம். அவங்க சொன்ன மாதிரியே ஒரு வருசம் கழிச்சு அச்சு அசலா பாண்டிதுரை மாதிரியே ரெடி பண்ணிக் கொடுத்தாங்க.

அந்தச் சிலையை வீட்டில இருந்து மண்டபத்துக்கு சாரட்டு வண்டில ஊர்வலமா கூட்டிட்டுப் போயி, சீர்வரிசையோட எம்பிள்ளைகளுக்கு அவன் மடில உக்கார வச்சு காது குத்தினோம். இப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு. அவனும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்’’ என்கிறார் கண்ணீர் துளிர்க்க.

பாண்டிதுரையின் அம்மா பசுங்கிளி, “என் மகன் எங்ககூட இல்லைன்னு ஒரு நாளும் நாங்க நினைச்சதே இல்ல. தெனமும் காலைல காப்பி போட்டாகூட அவன் போட்டோக்கு முன்னாடி ஒரு டம்ளர் வைக்காம இருக்க மாட்டேன். அவனுக்கு நடிகர் சூர்யானா ரொம்பப் புடிக்கும். சூர்யா படம் வந்தா தூங்காம கொள்ளாம இருப்பான். தியேட்டர் முன்னாடி பேனர் கட்டுவான். இப்போ அவன் இல்ல. இப்ப சூர்யா படம் வந்திருக்காம் அவன் போட்டோவ போட்டு அவன் ப்ரெண்ட்ஸ் பேனர் கட்டியிருக்காங்க. என் மகன் எங்ககூட மட்டுமில்ல, பழகுன எல்லாரு மனசுலேயும் இருக்கான்னு நினைக்கிறப்ப சந்தோசமா இருக்கு” என்று சொல்லும்போதே கலங்குகிறார்.