Published:Updated:

சுய இன்பத்தின்போதும் உறவின்போதும் ரத்தம் வந்தால்? காமத்துக்கு மரியாதை S2 E22

காமத்துக்கு மரியாதை

``சில ஆண்களுக்கு இந்த இழை முதலிரவின்போது கட் ஆகி ரத்தம் வரலாம். அப்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரும்.''

சுய இன்பத்தின்போதும் உறவின்போதும் ரத்தம் வந்தால்? காமத்துக்கு மரியாதை S2 E22

``சில ஆண்களுக்கு இந்த இழை முதலிரவின்போது கட் ஆகி ரத்தம் வரலாம். அப்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரும்.''

Published:Updated:
காமத்துக்கு மரியாதை

`சுய இன்பம் செய்யும்போது என்னுடைய ஆணுறுப்பிலிருந்து ரத்தம் கசிகிறது; எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது' - நம் வாசகர் ஒருவரிடமிருந்து இப்படியொரு பதற்றமான மெயில் வந்திருக்கிறது. இப்படி ரத்தம் வருவதற்கு என்ன காரணம்; இது இயல்பானதா; ஏதாவது பிரச்னையின் அறிகுறியா என்பது குறித்து பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

டாக்டர்  காமராஜ்
டாக்டர் காமராஜ்

``சுய இன்பம் செய்யும்போது மட்டுமல்ல, தாம்பத்திய உறவின்போதும் சில ஆண்களுக்கு ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம். இது இயல்பான ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணம், ஆணுறுப்பின் அடிப்பகுதியில் மெல்லிய இழை ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இது மிகவும் மென்மையான பகுதி. வேகமாக சுய இன்பம் செய்யும்போதோ, வேகமாக உறவுகொள்ளும்போதோ இந்த இழை கட் ஆகலாம்.

சில ஆண்களுக்கு இந்த இழை முதலிரவின்போது கட் ஆகி ரத்தம் வரலாம். அப்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரும். இந்த ரத்தம் ஃபிரெஷ்ஷாக இருக்கும். அதாவது, சிவப்பு நிறத்தில் புது ரத்தமாக இருக்கும். விந்து தனியாகவும், ரத்தம் தனியாகவும், கொஞ்சம் இரண்டும் கலந்தும் வரும். இது ஜஸ்ட் காயம் மட்டுமே. இந்தக் காயம் ஆறுகிற வரைக்கும் சுய இன்பமோ, தாம்பத்திய உறவோ மேற்கொள்ளக் கூடாது. மற்றபடி, இதில் எந்தப் பிரச்னையும் வராது. பயப்படவே தேவையில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில், இரண்டாவது வகையொன்று இருக்கிறது. சுய இன்பம் செய்யும்போது அல்லது தாம்பத்திய உறவின்போது ரத்தமும் விந்தும் கலந்து வரும். இந்த ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். புராஸ்ட்டேட் சுரப்பியில் அல்லது செமனைல் வெசிக்கிள் ஆகிய இடங்களில் ரத்தக்கட்டிகள் இருந்தால், அவற்றிலிருக்கிற ரத்தமும் இப்படி வெளியேறலாம்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

விந்து என்பது ஏற்கெனவே உருவாகியிருக்கிற திரவம் கிடையாது. 5 சதவிகிதம் விந்துப்பையிலிருந்தும், 45 புராஸ்ட்டேட் சுரப்பியிலிருந்தும், மீதம் செமனைல் வெசிக்கிள் சுரப்பியிலிருந்தும்தான் வெளிவரும். விந்தாக வெளியே வரும்போது புராஸ்ட்டேட் சுரப்பியிலோ, செமனைல் வெசிக்கிளிலோ பிரச்னை இருந்தால் விந்துடன் ரத்தம் கலந்து வரும். இந்த ரத்தம் புது ரத்தமாக இருக்காது. கருஞ்சிவப்பாக இருக்கும்.

இந்த நிறத்தில் ரத்தம் வந்தால், கண்டிப்பாகப் பரிசோதனை செய்ய வேண்டும். 95 சதவிகிதம் இது ஆபத்தில்லாத பிரச்னைதான். அரிதாக புராஸ்ட்டேட் கேன்சராக இருக்கலாம். இருந்தாலும் சுய இன்பம் செய்யும்போதும், உறவு வைத்துக்கொள்ளும்போதும் ரத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவருமே பயந்துவிடுவார்கள். அதனால், ஆணுறுப்பில் ரத்தம் வருகிறது என்றால், உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது'' என்றார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism