Published:Updated:

`இதைப் புரிந்துகொண்டால் பேரன்ட்டிங்கில் பிரச்னையே இல்லை!' - `எம்பதி'யும் ஓர் அனுபவமும்

ஆஷ்லி - ஷர்மிளா

பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய அவசிய விஷயங்களில் இந்த எம்பதியும் முக்கியமானது. பெற்றோர்கள் பிள்ளைகள் இடத்தில் இருந்தபடியும், பிள்ளைகள் பெற்றோர் இடத்திலிருந்தபடியும் அவர்களின் பிரச்னைகளை உணர இந்த குணாதிசயம் அவசியமானது.

`இதைப் புரிந்துகொண்டால் பேரன்ட்டிங்கில் பிரச்னையே இல்லை!' - `எம்பதி'யும் ஓர் அனுபவமும்

பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய அவசிய விஷயங்களில் இந்த எம்பதியும் முக்கியமானது. பெற்றோர்கள் பிள்ளைகள் இடத்தில் இருந்தபடியும், பிள்ளைகள் பெற்றோர் இடத்திலிருந்தபடியும் அவர்களின் பிரச்னைகளை உணர இந்த குணாதிசயம் அவசியமானது.

Published:Updated:
ஆஷ்லி - ஷர்மிளா

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச் சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் இனி வாரம்தோறும் விகடன்.காமில் தொடர்ந்து பேச இருக்கிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

அந்த வகையில் இந்த வாரம், அடுத்தவர் நிலையிலிருந்து பிரச்னையை உணரும் `எம்பதி' பழக வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகிறார்கள் அவர்கள்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

ஆங்கிலத்தில் `எம்பதி' (empathy) என்றோர் அழகிய வார்த்தை உண்டு. அதாவது, அடுத்தவர் நிலையிலிருந்து ஒரு பிரச்னையை உணர்வது. பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய அவசிய விஷயங்களில் இந்த எம்பதியும் முக்கியமானது. பெற்றோர்கள் பிள்ளைகள் இடத்தில் இருந்தபடியும் பிள்ளைகள் பெற்றோர் இடத்திலிருந்தபடியும்கூட அவர்களின் பிரச்னைகளை உணர இந்த குணாதிசயம் அவசியமானது. அதைப் பழகிக் கொள்ளும்போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான உறவு சுமுகமாகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடும்பத்துக்குள் ஒருவருக்கொருவர் பிரச்னை வரும்போது, தடித்த வார்த்தைகளைப் பேசிவிடுவது இயல்பு. நம்மை அறியாமல் பேசிய அந்த வார்த்தைகள் உறவையே அசிங்கப்படுத்திவிடக்கூடும். என்னையும் ஆஷ்லியையும் பொறுத்தவரை எங்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் வரும்போது ஓரடி பின்னோக்கி எடுத்து வைப்போம். வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் கவனமாக இருப்போம். எதிராளி எந்த மாதிரியான மனநிலையில் இருப்பார் என்று யோசிக்க அவகாசம் எடுத்துக்கொள்வோம்.

ஓர் உதாரணத்துடன் இதை விளக்குகிறேன்.

ஆஷ்லிக்கு போனில் அதிக நேரம் செலவிடும் வழக்கம் இருந்தது.

ஓர் அம்மாவாக எனக்கு அது பிடிக்கவில்லை, அவளது தூக்கமும், படிப்பும், பிற வேலைகளும் பாதிக்கப்படுவதாகக் கவலையளித்தது.

`ரொம்ப நேரம் போன்ல இருக்காதே...' என ஆரம்பத்தில் அதை அவளுக்குச் சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவள் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் தலைக்கேற, அவளைக் கடுமையாகத் திட்டினேன். சாதாரண உரையாடல், சண்டையில் முடிந்ததில் எங்கள் இருவருக்குமே மனது சரியில்லாமல் போனது.

இருவரும் சில நிமிடங்கள் மௌனம் காத்தோம். ஒரு பேப்பரை எடுத்து, இருவரும் எதிராளியின் மனநிலையை உணர்ந்து எழுதித் தீர்த்தோம். அதாவது, என்னிடத்தில் ஆஷ்லி இருந்தால், ஓர் அம்மாவாக எப்படி உணர்ந்திருப்பாள் என்று அவளும், அவளிடத்தில் என்னைப் பொருத்தி ஒரு மகளாக எப்படி உணர்ந்திருப்பேன் என நானும் எழுதினோம். கொஞ்ச நேரத்தில் ஆஷ்லி அந்த பேப்பருடன் என்னிடம் வந்தாள்.

Parenting
Parenting
Photo by Daiga Ellaby on Unsplash

``அம்மா, நீங்க சொல்றது சரிதான்... என்னுடைய தூக்கம், படிப்பு, ஒட்டுமொத்த மனநிலைனு எல்லாம் பாதிக்கப்பட இந்த போன்தான் காரணம்னு புரியுது. நீங்க ஏன் அப்படிக் கத்தினீங்கன்னும் புரிஞ்சுகிட்டேன்'' என்றாள். என் பங்குக்கு நான் எழுதியதையும் அவளுக்கு விளக்கினேன். `புதுசா போன் கிடைச்சிருக்கு... அந்த எக்சைட்மென்ட் நிச்சயம் இருக்கும்தான். அதுல என்னவெல்லாம் ஃபீச்சர்ஸ் இருக்கு, அதை எப்படியெல்லாம் யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்குற ஆர்வம் இருக்கும். போன் மட்டுமே வாழ்க்கையில்லை, யதார்த்த வாழ்க்கையில மத்த விஷயங்களை எப்படி பேலன்ஸ் பண்றதுனு கத்துக்க உனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்'னு எனக்கும் புரியுது'' என்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதும் எங்களுக்குள் சண்டைகள் வராமல் இல்லை. ஆனால், எந்தச் சண்டையிலும் வாக்குவாதத்திலும் வார்த்தைகள் தடிப்பதில்லை, கோபம் எல்லை மீறுவதில்லை. காரணம், அந்தச் சூழ்நிலையில் எதிராளியின் மனநிலை எப்படியிருக்கும் என உணர்வதை இருவருமே பழகிக்கொண்டோம். அதனால் எங்களுக்குள் ஒரு தெளிவு வந்திருக்கிறது. இருவரில் யாராவது கட்டுப்பாட்டை இழந்து ரியாக்ட் செய்தாலும் இன்னொருவர் அதற்கெதிராக ரியாக்ட் செய்ய மாட்டோம். எதிராளி ஏன் அப்படி நடந்துகொண்டார் என யோசிப்போம்.

மறுபடி ஆஷ்லியின் போன் விஷயத்துக்கே வருவோம்... எத்தனை மணி நேரம் போன் உபயோகிக்க வேண்டும், எத்தனை மணி நேரம் உபயோகித்தாலும் அது அவளின் பிற நடவடிக்கைகளை பாதிக்காமலிருக்க எப்படி பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதை அவள் புரிந்துகொண்டிருக்கிறாள். என் பேச்சைக் கேட்காமல் அவள் இஷ்டத்துக்கு நடந்துகொள்ளும்போது, கோபப்படுவதைத் தவிர்த்து அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என கண்டுபிடித்து அவளை அமைதியாக வழிநடத்த வேண்டும் என்பதை நானும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

உங்கள் குடும்பத்திலும் `எம்பதி'யை பழக்க....

1. உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். டீன் ஏஜில் பிள்ளைகளுக்கு கோபம், எரிச்சல், பயம், குற்ற உணர்வு, சந்தோஷம், திகில், ஆச்சர்யம் என உணர்வுகள் ரோலர்கோஸ்டர் ரைடு போல ஏறி, இறங்கி தடுமாறவைக்கும். அவற்றை பெற்றோராகிய நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்ந்தாலே உங்களை அவர்கள் மதிக்கத் தொடங்குவார்கள்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

2. எந்த ஒரு சூழலிலும் பிள்ளைகளிடம் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தவறாதீர்கள். அவர்கள் இப்படித்தான் நினைத்திருப்பாரக்ள் என நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

3. நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறீர்களோ, அப்படித்தான் உங்கள் பிள்ளைகளும் நடந்துகொள்வார்கள். எனவே, அந்த விஷயத்தில் பிள்ளைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக இருங்கள்.

4. பிள்ளைகளிடம் `உன் ஃபீலிங் எனக்குப் புரியுது' என சொல்வது மட்டுமன்றி, உண்மையில் அதைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

5. நெகட்டிவ் உணர்வுகளை எப்படிக் கையாள வேண்டும் எனக் கற்றுக்கொடுங்கள்.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism