Published:Updated:

திரையில் அன்னையர்கள் - சினிமா காதலர் பகிர்வு | My Vikatan

mother

வீரத்தாயை கண்முன்னே கொண்டு வந்தவர் கண்ணாம்பா. 'நீதிக்குப் பின் பாசம்' படத்தில் டாக்டராக வரும் கண்ணாம்பா அவர்கள் தான் செய்யாத கொலைக்கு போலீஸ் அதிகாரியான (எஸ்.வி.ரங்காராவ்) கணவரால் கைது செய்யப்படுவார்.

Published:Updated:

திரையில் அன்னையர்கள் - சினிமா காதலர் பகிர்வு | My Vikatan

வீரத்தாயை கண்முன்னே கொண்டு வந்தவர் கண்ணாம்பா. 'நீதிக்குப் பின் பாசம்' படத்தில் டாக்டராக வரும் கண்ணாம்பா அவர்கள் தான் செய்யாத கொலைக்கு போலீஸ் அதிகாரியான (எஸ்.வி.ரங்காராவ்) கணவரால் கைது செய்யப்படுவார்.

mother

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்னையர் தினத்தில் அன்னை என்று சொன்னதும் நாம் திரையில் பார்த்த, இன்றைய தலைமுறை தொலைக்காட்சியில் பார்த்த சில சக்திவாய்ந்த அன்னைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

1950களில் வெளிவந்த 'மனோகரா' திரைப்படம் யாரும் மறக்க முடியாது. சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணாம்பா மற்றும் பலர் நடித்தது. அதில் மனோகரனாக நடித்த சிவாஜிக்கு கண்ணாம்பா அம்மாவாக நடித்திருப்பார்.

'மகனே மனோகரா...பொறுத்தது போதும் பொங்கி எழு..' தன் மகனின் வீரத்தை பாசத்தால் கட்டி போட்டிருந்த ஒரு அன்னைஅதை உடைத்தெரியும் காட்சி... படத்தை பார்த்தவர் பார்க்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவர் மனதிலும் நிலைத்து நின்ற வசனம் இது. வீரத்தாயை கண்முன்னே கொண்டு வந்தவர் கண்ணாம்பா. 'நீதிக்குப் பின் பாசம்' படத்தில் டாக்டராக வரும் கண்ணாம்பா அவர்கள் தான் செய்யாத கொலைக்கு போலீஸ் அதிகாரியான (எஸ்.வி.ரங்காராவ்) கணவரால் கைது செய்யப்படுவார்.

மனோகரா
மனோகரா

ஒரு பிள்ளை (அசோகன்)அரசாங்க வக்கீல். இன்னொரு பிள்ளை (எம்.ஜி.ஆர்.) தாயை காப்பாற்ற போராடும் வக்கீல். கடைசியில் அந்த தாய் எப்படி விடுதலையாகிறார் என்பதுதான் கதை. தாயாக அருமையாக நடித்திருப்பார்.

தாய்க்குப் பின் தாரம், தாயைக் காத்த தனயன் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

"தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.." மிகவும் பிரபலமான இந்த பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றது. அதில் மக்கள் திலகம் அவர்களுக்கு தாயாக நடித்திருப்பார். தெய்வத்தாய் படத்தில் அமைதியான நர்ஸாக நடித்திருப்பார். கொள்ளைக்கார கணவன் பிரிந்து சென்றதும் அவன் உயிரோடு இல்லை என்று தவறுதலாக தெரிய வர விதவைக் கோலம் பூண்டு மகனை வளர்த்து போலீஸ் அதிகாரியாக ஆக்குகிறார். குற்றவாளியான கணவனை தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியிலே நோயாளியாக சந்திக்கும் போது தான் சுமங்கலி தான் என்று நினைத்து சந்தோஷப்படும் காட்சியில் நம்மை கலங்க வைத்துவிடுவார்.

தாயில்லாமல் நானில்லை பாடல்
தாயில்லாமல் நானில்லை பாடல்

கடைசியில் குற்றவாளியான அவர்தான் தந்தை என்று மகனுக்கு தெரிய வரும் போது அந்த தாய் 'தெய்வத்தாய்' ஆகி மறைந்து விடுகிறார். மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களான 'குடியிருந்த கோயில்' இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தாயாக நடித்திருக்கிறார்.

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே..." இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் 'பண்டரிபாய்' நம் அம்மாவாக கண்ணில் தெரிவார். "கண்ணா நீ எங்கடா போவ...?" -என்று பிரபலமான வசனம் பேசி சிவாஜி அவர்களுக்கு பெரியம்மாவாக. பாரிஸ்டர் ரஜினிகாந்தின் மனைவியாக 'கௌரவம்" படத்தில் நடித்திருப்பார். வளர்ப்பு பிள்ளைக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் நடுவில் சிக்கிக் கொண்டு , "அவன் தான் ஜெயிச்சிட்டு போகட்டுமே, யானைக்கும் அடி சறுக்குமே" ன்னு கணவனிடம் பிள்ளைக்காக பரிந்து பேசும் அம்மாவாக மனதை தொடும் நடிப்பை வழங்கி இருப்பார். மன்னன் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து "அம்மா என்றழைக்காத பாடலுக்கு பெருமை சேர்த்திருப்பார்.

அம்மா
அம்மா

"லட்சுமி' என்று அம்மா பெயர் இருந்தால் நிச்சயம் அது கே.ஆர்.விஜயா அவர்கள்தான்...அந்தளவுக்கு லட்சுமியாக.. அம்மாவாக வாழ்ந்திருப்பார். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே நடக்கும் சண்டையில் சிக்கித் தவிக்கும் அம்மாவாக 'தங்கப்பதக்கம்' படத்தில் நடித்திருப்பார். "டே நான் உன் அம்மா சொல்றேன்...உள்ளப் போடா.." என்று ஜெகனாக நடிக்கும் ஸ்ரீகாந்திடம் கதறி அழுது சொல்வார்...அந்த ஒரு காட்சி போதும்.

"இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்..." தன்னை விட மூத்தவரான எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அம்மாவாக 'நீதிக்குத் தலைவணங்கு' படத்தில் எஸ்.வரலட்சுமி நடித்திருப்பார்.

இளைஞனான தன் மகனை தாலாட்டி தூங்க வைப்பாள் அந்த அன்னை. எத்தனை வயதானாலும் அம்மாவுக்கு பிள்ளை தானே. தன் மகனின் பெருமைகளை போற்றிப் பாடும் அந்த பணக்காரத் தாய் 'என்றும் இல்லை எனும் சொல்லை நீ நான் அதை கேட்பதை மாற்றிவிடு..." என்று பாடும் போது இப்படி ஒரு தாய் நமக்கு வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகும்.

நீதிக்குத் தலைவணங்கு
நீதிக்குத் தலைவணங்கு

1990 களில் வெளிவந்த பல கிராமத்து வெற்றிப் படங்களில் அம்மாவாக ஆச்சிதான் நடித்திருப்பார். அதில் குறிப்பிடத்தக்கது 'சின்ன கவுண்டர்,

"அடியே நான் மட்டும் உனக்கும் மாமியாரா வாச்சா..."ன்னு சுகன்யாவிடம் சண்டை போடும் இடம், பின்னர் மகன் திருமணம் முடிந்து வந்த பிறகு அதை நினைத்து சிரிக்கும் இடம்...இன்றளவும் நம் மனதில் நிலைத்து நிற்கிறது. கிழக்கு வாசல், முறை மாமன், இது நம்ம ஆளு, ராசுக்குட்டி ஆகிய படங்களில் அம்மாவாக நடித்தது பாராட்டக்கூடிய வகையில் அமைந்தன.

அன்புள்ள அம்மா...
அன்புள்ள அம்மா...
Teahub

இந்த கால அம்மா சரண்யா பொன்வண்ணன். "ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்ல வந்துடுவான்" என்று ஊர் சுற்றித் திரியும் பிள்ளைக்கு சப்பைக்கட்டு கட்டும் அம்மாவாக அசத்தி இருப்பார். எம்டன் மகன் படத்தில் சற்று காமெடி கலந்த அம்மாவாக நடித்திருப்பார். அதில் வடிவேலுவுடன் சேர்ந்து குன்னக்குடி கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் காட்சியில் அதகளப்படுத்தி இருப்பார். முன்னணி நடிகர்களான தனுஷ், அஜீத், சிவ கார்த்திகேயன் மற்றும் பலருடன் நடித்துள்ளார். அன்னையாக திரையில் வாழ்ந்தவர்களையும் நாம் போற்ற வேண்டும். அது அவர்கள் நடிப்புக்கு நாம் கொடுக்கும் ஒரு சிறு அங்கீகாரம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.