Published:Updated:

``எங்கே இருக்கிற ஹரித்ரா..!?'' - `நாட் ரீச்சபிள்’ கவலையில் நளினி சகோதரர்

Nalini
Nalini

``பரோல் நீட்டிப்பாங்க. இல்லன்னா அண்ணா பிறந்த நாள்ல விடுதலை கிடைச்சுடும்னு உறுதியா நம்பினாங்க அக்கா.''

மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக பரோலில் வந்த நளினி, அது கைகூடாமலேயே கடந்த 15-ம் தேதி மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதன் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள் என நளினியின் அம்மா பத்மா மற்றும் சகோதரர் பாக்கியநாதனிடம் கேட்டோம். முதலில் பேசியவர் பாக்கியநாதன்.

தன்னோட கல்யாண விஷயமா, அம்மா பரோல்ல வந்திருக்கிறது ஹரித்ராவுக்குத் தெரியுமாங்கிறதே சந்தேகம்தான்.''
பாக்கியநாதன்

``அக்கா மறுபடியும் சிறைக்குப் போனதுக்கப்புறம் இப்போதான் நாங்க நார்மல் மனநிலைக்கே வந்திருக்கோம். அக்கா, பிப்ரவரியில் பரோலுக்கு அப்ளை பண்ணாங்க. அது ஜூலையிலதான் கிடைச்சுது. அது ஆடி மாசமாயிடுச்சு. ஆடி மாசத்துல நம்பிக்கையிருக்கிற அக்காவால, ஹரித்ரா கல்யாண விஷயமா பேச முடியல. அப்புறம், லண்டன்ல ஹரித்ராவை வளர்த்த அத்தையோட மாமனார் சிலோன்ல இறந்துட்டாரு. அதனால, அத்தை குடும்பத்துல எல்லாரும் சிலோனுக்குப் போயிட்டாங்க. தவிர, அந்தக் குடும்பத்துல 30 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டிய சூழ்நிலை. இந்த நேரத்துல கல்யாண விஷயம் பேச முடியாது.

ஹரித்ரா பி.ஜி எக்ஸாமுக்கு படிச்சிட்டிருக்கா. அவளை வளர்த்தவங்க இலங்கைக்குப் போயிட்டதால, அவள் படிக்கிறதுக்காக ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டா. அவ நம்பரும் நாட் ரீச்சபிளாயிடுச்சு. ஹரித்ராகூட அக்கா ஒரு நாள்கூட போன்ல பேசல. இதுதான் உண்மை. அதனால, தன்னோட கல்யாண விஷயமா அம்மா பரோல்ல வந்திருக்கிறது ஹரித்ராவுக்குத் தெரியுமாங்கிறதே சந்தேகம்தான். ஹரித்ரா நியூஸ் மீடியா எதையாவது பார்த்தாளான்னும் தெரியல.

Nalini
Nalini

இத்தனை விஷயங்களும் சேர்ந்து, எந்தக் காரணத்துக்காக அக்கா பரோல்ல வந்தாங்களோ அதையே நடக்கவிடாம பண்ணிடுச்சு. கடைசியா, இங்கே அக்கா பரோல் முடிஞ்சு கிளம்பறப்போதான், அங்கே ஹரித்ராவை வளர்த்த அத்தை இலங்கையிலிருந்து லண்டனுக்குக் கிளம்பினாங்க.

பரோல் நீட்டிப்பாங்க; இல்லன்னா அண்ணா பிறந்த நாள்ல விடுதலை கிடைச்சுடும்னு உறுதியா நம்பினாங்க அக்கா.

ஆனா, அதுவும் நடக்கலை. இத்தனை பிரச்னைகளையும் பார்த்துட்டு, எதையுமே செய்ய முடியாம கண்ணீரோடத்தான் அக்கா பரோல் முடிஞ்சு மறுபடியும் சிறைக்குப் போனாங்க. எங்களோட சின்ன வயதுத் தருணங்களைப் பேசினதுதான் இந்த பரோல்ல எங்கக் குடும்பத்துக்குக் கிடைச்ச சந்தோஷம்'' என்றார்.

யாராவது முதல்வரை பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கிக்கொடுத்தா நேர்ல போய் பார்க்கலாம்னு இருக்கேன்.''
பத்மா – நளினியின் அம்மா

`ஒருவேளை ஹரித்ராவுக்கு யாரையாவது பிடிச்சிருந்தால் அவருக்கே திருமணம் செய்து வைப்பீர்களா?’ என்றதற்கு, `நிச்சயம், சம்மதம்தான் சொல்வோம்’ என்கிறார் பாக்கியநாதன்.

`லண்டனிலிருக்கும் மகள் வரவில்லை!’ - மன உளைச்சலில் சிறைக்குத் திரும்பும் நளினி?

அடுத்து நளினியின் அம்மா பத்மாவிடம் பேசினோம்.

``நளினி விடுதலை விஷயத்துல, அறிவு அம்மா மாதிரி நான் யாரையும் பார்க்காம, பேசாம இருந்ததுதான் கஷ்டமாப் போச்சு. எனக்கு ஆளுங்க பலமும் இல்ல; பண பலமும் இல்ல. என்னம்மா செய்றது? இப்போ, என் மகளுக்கு விடுதலை தர வேண்டி முதல்வருக்கும் கவர்னருக்கும் மனு அனுப்பியிருக்கேன். யாராவது முதல்வரை பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கிக்கொடுத்தா நேர்ல போய்பார்க்கலாம்னு இருக்கேன்.

Nalini with her mother
Nalini with her mother

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நளினி விடுதலைக்காகக் கடிதம் அனுப்பலாம்னு இருக்கேன். வயது 80 ஆயிடுச்சு. அதனால ஒவ்வொருத்தரையும் நேர்லபோயி பார்க்க முடியல'' என்று வருத்தப்பட்டவர், ''நளினியின் மாமனார் கேன்சர்ல நாலாவது ஸ்டேஜ்ல இருக்கார். வீடியோ கால்ல மருமகளுக்கு கையசைச்சார், ஆனா ஒரு வார்த்தைகூட அவரால பேச முடியலை. இயற்கை உபாதைகள் எல்லாமே படுக்கையிலதான்னு இருக்கிறவரை விட்டுட்டு, நளினி மாமியாராலேயும் வர முடியல. ஶ்ரீகரனோட ஒரு சகோதரர் மட்டும் வந்து பார்த்துட்டுப் போனார். அதனால, பேத்தி கல்யாண விஷயத்துலே எந்த முன்னேற்றமும் இல்ல'' என்று வருத்தமுடன் பெருமூச்சு விடுகிறார் பத்மா.

``இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துகிட்டுதான் இருக்கிறா'' - மகள் நளினி பற்றி அம்மா!
அடுத்த கட்டுரைக்கு