Published:Updated:

`உங்க லவ்வருக்கு எத்தனை ரோஸ் கொடுக்கணும் தெரியுமா?!' - `ரோஸ் டே' காதல் கணக்குகள் #RoseDay

Rose Day
Rose Day ( Representational Image )

பத்து சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தைப் பரிசளித்து, ``நீ தான், நீ மட்டும்தான் என் வாழ்வில்'' என்று அழுத்தம் திருத்தமாக புரொபோஸ் செய்யலாம்!

மண்டியிட்டு காதலைச் சொல்ல காதலனுக்கு ஒரு சிவப்பு ரோஜாவின் உதவி தேவைப்படுகிறது. காதலை ஏற்க மறுக்கிற காதலியின் கோபத்துக்குக்கூட அந்த ரோஜாவில் இருக்கிற முள்ளையே உவமையாகச் சொல்வார்கள் கவிஞர்கள். மனதுக்குப் பிடித்த பெண்களின் முகப்பருவும் சில கவிஞர்களுக்கு ரோஜாக்களாகத் தெரிந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் தன்னுடைய ரோமியோ - ஜூலியட் நாடகத்தில் சிவப்பு ரோஜாக்களை காதலுடன் இணைத்துப் பேசுகிறார். மொத்தத்தில் காதலும் சிவப்பு ரோஜாவும் பிரிக்க முடியாத அன்பின் அடையாளமாகி விட்டன.

Love
Love
Representational Image

மேற்கத்திய நாடுகளில், காதல் தேவதை ஆபிரோடைட் தன் காதலன் அடோனிஸ்க்காக வடித்த கண்ணீர்த்துளிகளில் இருந்துதான் ரோஜா மலர்கள் உருவானதாக நம்புகிறார்கள். ரோம நாட்டுப் புராணங்களில், காதலுக்கு மட்டுமல்லாமல் அழகுக்கான அடையாளமாகவும் ரோஜா மலர்கள் சொல்லப்படுகின்றன. அவர்களின் காதல் கடவுள் ரோஜா இதழ் குளியல் மூலமாகத்தான் தன் சருமத்தை மென்மையாக வைத்துக்கொண்டதாக நம்புகிறார்கள்.

Celopatra
Celopatra
பேரழகி கிளியோபாட்ராவை வரவேற்க, அவள் நடந்துவரும் பாதையெங்கும் ரோஜா இதழ்களைத் தூவி வைத்தானாம் ரோமின் ஆண்டனி!

தன் இணைப்பறவையின் குரலில் மயங்கிய நைட்டிங்கேல் பறவையொன்று, தன் காதலைச் சொல்வதற்காக சிவப்பு நிற ரோஜா கிடைக்காமல் வெள்ளை ரோஜாவின் முள்ளில் தன் உடலைக் குத்தி அதை சிவப்பு ரோஜாவாக மாற்றியதாம். பழங்கால ரோமானியக் கதையொன்றில் இந்த நைட்டிங்கேல் காதல் கதை வருகிறது.

கிரேக்கப் புராணங்களில் காதல் கடவுளாகக் கொண்டாடப்படுகிற ஈரோஸின், காதல் துணையான வீனஸ்க்குப் பிடித்த மலரும் சிவப்பு ரோஜாதானாம். பேரழகி கிளியோபாட்ராவை வரவேற்க, ஆண்டனி, அவள் நடந்துவரும் பாதையெங்கும் ரோஜா இதழ்களால் கார்ப்பெட் விரித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

Rose Day
Rose Day
Representational Image

ரோஜாக்களின் என்ணிக்கைக்குத் தகுந்தாற்போல, காதலின் அர்த்தமும் மாறும் தெரியுமா? ஒற்றை சிவப்பு ரோஜாவை `முதல் பார்வையில் காதல் வந்த' இணைகள் பரிமாறிக்கொள்ளலாம். பல வருடங்களாக ஒரே துணையுடன் காதலில் இருப்பவர்களும், திருமணப் பந்தத்தில் இருப்பவர்களும் 'என்றும் நீ மட்டுமே என் இதயத்தில் இருப்பாய்' என்கிற அர்த்தத்தில் ஒற்றை சிவப்பு ரோஜாவை அன்புப் பரிசாகக் கொடுக்கலாம். இரட்டை சிவப்பு ரோஜாக்கள் கொடுத்தால் `நம் அன்பும் பாசமும் மாறாதது' என்று அர்த்தம்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்ததும் மூன்று சிவப்பு ரோஜாக்கள் கொண்ட ஒரு பூங்கொத்தை உங்கள் துணைக்குப் பரிசளிக்கலாம். மூன்று ரோஜாக்கள் கொடுத்தால் `ஐ லவ் யூ' என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆறு ரோஜாக்கள் ஒன்று சேர்ந்த பூங்கொத்துக்கு, `நம் காதல் அதன் அடுத்த நிலையான இல்லற வாழ்வில் இணைய வேண்டும் என்று அர்த்தம். பத்து சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தை பரிசளித்து, ``நீ தான், நீ மட்டும்தான் என் வாழ்வில்' என்று அழுத்தம் திருத்தமாக புரொபோஸ் செய்யலாம்.

Rose Day
Rose Day
Representational Image

உங்கள் காதல் உண்மையானது, ஆழமானது என்பதை உங்கள் காதலருக்கு / காதலிக்குத் தெரியபடுத்த விரும்பினால், பதினோரு ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை காதல் தூதாக அனுப்பலாம். பன்னிரு ரோஜாக்களைப் பரிசளித்தால், அர்ஜூன் ரெட்டி ஸ்டைலில் `நீ என்னுடையவன்/ நீ என்னுடையவள்' என்று அர்த்தம். ரோஜாக்களைப் பரிசளித்து ஒரு காதல் அத்தியாயத்தை ஆரம்பிப்பது மட்டுமல்ல; திருமணம் முடித்த தம்பதியரும் ரோஜா மலர்களால் தங்கள் தாம்பத்யத்தைக் கொஞ்சம் ஃபிரெஷ் அப் செய்துகொள்ளலாம்.

Vikatan

காதல் உணர்வுக்கும் சிவப்பு ரோஜாக்களுக்குமான உளவியல் தொடர்புப் பற்றி மனநல மருத்துவர் அசோகன், ``காதலை அழகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாமே ஈர்க்கும். ரோஜா மலரும் அதன் சிவந்த நிறமும் அழகியல் சார்ந்த விஷயங்கள். அதனால்தான், மனிதர்கள் தங்களையுமறியாமல் அதைக் காதலோடு இணைத்துப் பார்க்கிறார்கள்'' என்கிறார்.

Love
Love
Representational Image
`காதல் நிகழ்த்தப்படுவதல்ல, அது தானாக நிகழ்வது!' -  ஒரு 90'ஸ் கிட்டின் காதல் கடிதம்

இன்று `ரோஸ் டே' என்பதால் காதலர்கள் மட்டுமல்ல, தம்பதிகளும் தங்கள் காதலை சில ரோஜாக்களுடனும் கொஞ்சம் வெட்கத்துடனும் பரிமாறிக்கொள்ளுங்கள். `ரோஸ் டே'வை மறந்தவர்கள் நாளையும் பரிமாறிக்கொள்ளலாம். நேர்மையான அன்புக்கு தினம் தினம் 'ரோஜா தினம்' தானே...

என்றென்றும் காதல்!

அடுத்த கட்டுரைக்கு