Election bannerElection banner
Published:Updated:

குழந்தைகள் முன்பு பெற்றோர் முத்தமிட்டுக் கொள்வதன் விளைவுகள்... தேவை கவனம்!

தம்பதியர் (மாதிரி படம்)
தம்பதியர் (மாதிரி படம்)

முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள். கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்.

``இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குழந்தைகள் மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்திருந்தால் இதுபோன்ற விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். மேலை நாடுகளிலேயே எந்த நடத்தை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும், எது ஏற்றுக்கொள்ளப்படாது என்ற நன்னடத்தை விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முன்பாக சில விஷயங்களைச் செய்யக் கூடாது என்று மேலை நாட்டினருக்கும் தெரியும்.

இந்தியாவில் தொட்டுப்பேசுவதுகூட தவறு என்கிற ரீதியில்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய சூழலில், வீட்டில் பெற்றோர் முத்தமிட்டுக்கொள்வதைப் பார்க்கும் குழந்தை, சக நண்பர்களிடம் அதைப் பற்றி யதேச்சையாகப் பேசுவார்கள். அப்போது சக நண்பர்களின் பெற்றோர் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று அறியும்போது மனத்தில் குழப்பங்கள் ஏற்படும். குழந்தையின் வயதைப் பொறுத்து அது ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

முத்தம்
முத்தம்

பதின்பருவக் குழந்தைகள் என்றால் அவர்களின் பாலுணர்வு தூண்டப்படலாம். சிறுவயதுக் குழந்தைகளுக்கு, `அப்பா, ஏதோ அம்மாவைக் கஷ்டப்படுத்துகிறாரோ?' என்றுகூடத் தோன்றும். குழந்தையை விட்டுவிட்டு மனைவியை முத்தமிடும் போது, `நம்மை விரும்பாமல் அம்மாவை மட்டும்தான் அப்பா விரும்புகிறார்' என்ற எண்ணம் தோன்றும்.

குறிப்பாக, ஒற்றைக் குழந்தை இருக்கும் வீட்டில், `நாம் ஒதுக்கப்பட்டுவிட்டோமோ' என்று கூட பெற்றோர்மீது கோபமோ, வெறுப்போ ஏற்படலாம்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறும்போது, ``உதட்டில் முத்தமிடுவது என்பது பாலியல் உணர்வின் வெளிப்பாடு. குழந்தையின் வாயில் முத்தமிட்டுப் பழக்கும்போது, குழந்தை வேறு யாரிடம் சென்றாலும் முத்தமிடுவதற்கு உதட்டைத்தான் கொடுக்கும். உதடு என்பது மிகவும் மென்மையான பகுதி. வாய், உதட்டுப் பகுதியில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய நரம்புகளின் நுனிகள் நிறைய இருக்கின்றன. தேவையில்லாமல் அதைத் தூண்டக் கூடாது" என்று எச்சரிக்கிறார்.

- முத்தம் என்ற செயலே தவறானதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதை வெளிப்படுத்தும்விதம்தான் விளைவுகளைத் தீர்மானிக்கிறது. இது தொடர்பான முழுமையான புரிதலுக்கு, அவள் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க > https://bit.ly/3h7tQiv

முத்தம் கொடுப்போர் கவனிக்கவும்! - தேவை கவனம் https://bit.ly/3h7tQiv

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு