Published:Updated:

`செல்லப்பிராணி வளர்க்கும் குழந்தைகளுக்கு இந்த நற்குணங்கள் இருக்கும்!' - `இன்ஃபோசிஸ்' சுதா மூர்த்தி

Sudha murty
Sudha murty ( www.instagram.com/sudha_murty )

கோபியைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், எக்கச்சக்க ஹேப்பியாகிவிடுகிறார், சுதா.

சுதா மூர்த்தி , `இன்ஃபோசிஸ்' நிறுவனத்தின் தலைவர் என்பதைத் தாண்டி, எழுத்தாளர், குழந்தைகளின் கல்விக்கான பல முன்னெடுப்புகளைச் செய்தவர், தன் எளிமையான வாழ்வில் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் தனக்கென புதிதாகப் புடவை எடுக்காமல் இருப்பவர் எனப் பல்வேறு பாசிட்டிவ் காரணங்களுக்காக, மீடியாவிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி பேசப்படுபவர். கடந்த சில தினங்களாக அவருடைய செல்லப்பிராணி வளர்ப்பு கருத்து தொடர்பாக, அப்படி பேசப்பட்டுவருகிறார்.

சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி
www.instagram.com/sudha_murty

சமீபத்தில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு தன் செல்லப்பிராணி கோபியுடன் வந்திருந்தார் சுதா மூர்த்தி. கோபி, லேப்ரடார் வகை நாய். கோபியைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், எக்கச்சக்க ஹேப்பியாகிவிடுகிறார், சுதா.

மனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்!

``நான் கோபியிடம் கவிதைகள் சொல்வேன். சில நேரங்களில் கதைகள் சொல்லியிருக்கிறேன். ஏன், அவனுக்காக நான் தாலாட்டுகூட பாடியிருக்கிறேன். அவன், என் பாடல்களைக் கேட்கிறானா, ரசிக்கிறானா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவனிடம் பாடுவதற்கும் பேசுவதற்கும் எனக்குப் பிடித்திருக்கிறது'' என்றவர், தான் செல்லப்பிராணி முட்டையை பந்து என நினைத்து விளையாடியதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுப் பேசினார். ``இதுபோன்ற நகைச்சுவைகளை செல்லப்பிராணிகளை வளர்ப்பதன்மூலம் ரசிக்கலாம்'' என்ற சுதா மூர்த்தி, இதற்கு முன்னால், நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் நடத்திவரும் 'வீக் எண்ட் வித் ரமேஷ்' என்கிற நிகழ்ச்சியிலும் கோபி பற்றி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sudha Murty
Sudha Murty
www.instagram.com/sudha_murty
`காதலை பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும்!'- தன் நாயின் காதல் பற்றி ஓர் அம்மாவின் பகிர்தல்

``உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, செல்லப்பிராணிகளை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களாக்கிவிடுங்கள். செல்லப்பிராணிகளைப் பராமரிக்கிற குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சியும் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற எம்பதியும் அதிகமாக இருக்கும்'' என்கிறார் சுதா மூர்த்தி.

பின் செல்ல