Published:Updated:

“காதலைச் சொல்ல ஒரு ஜென்மம் போதாது!” - வித்தியாச தம்பதி பிரியா- குமார்

பிரியா- குமார்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா- குமார்

காதலர் தின ஸ்பெஷல்

“காதலைச் சொல்ல ஒரு ஜென்மம் போதாது!” - வித்தியாச தம்பதி பிரியா- குமார்

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
பிரியா- குமார்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா- குமார்

சென்னை, மணலியைச் சேர்ந்தவர் குமார். விழித்திறன் சவால் கொண்ட இவர், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, கீ - போர்டு, தபேலா, டிரம்ஸ் உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளையும் கற்றுத்தேர்ந்தவர். குமாரை காதலித்த பிரியங்கா, பெற்றோரின் எதிர்ப்பைமீறி திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என்பதைச் சொல்கிறது இவர்களது வாழ்க்கை.

“ ‘பொம்பளப் புள்ளைக்கு படிப்பெல்லாம் தேவையில்லை, வீட்டு வேலை செய்யக் கத்துக்கிட்டா போதும்’னு சொல்ற பழைமைவாதக் குடும்பம் என்னுது. ஆனா, படிச்சு சொந்தக் கால்ல நிக்கணுங்கிறது என் கனவு. எதிர்பாராத சூழ்நிலையில குமார் எனக்கு அறிமுகம் ஆனார். அவரோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சது. அவர் மேல இருந்த மரியாதை காதலா மாறி, கல்யாணம்வரை போகும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல'' என்று பிரியா ஆரம்பம் சொல்ல, தொடர்கிறார் குமார்.

‘`மாற்றுத்திறனாளியான என்னை அவங்க ஏத்துப்பாங்களான்ற தயக்கம் இருந்துச்சு. ஆனாலும் துணிஞ்சு காதலைச் சொல்லிட் டேன். ரெண்டு நாள் எதுவும் பேசல. அவங் களுக்கு என்னைப் பிடிக்கலையோனு நினைச்சபோது, ஓகே சொன்னாங்க. பொரு ளாதார ரீதியா செட்டில் ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணம்னு ரெண்டு பேரும் முடி வெடுத்தோம். அதுக்குள்ள எங்க காதல் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு. சூழலை சமாளிக்க முடியாம உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்கிறார் குமார்.

“காதலைச் சொல்ல  ஒரு ஜென்மம் போதாது!” - வித்தியாச தம்பதி பிரியா- குமார்

“கல்யாணமானபோது அடுத்த மாசம் வீட்டுச்செலவுக்கு என்ன பண்ணப் போறோம்னு நான் கலங்கி நின்னபோது, ‘அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ படிம்மா’னு என்னை பி.எஸ்ஸி படிக்க வெச்சாரு...'' - மனைவியின் பேச்சை ரசித்த படி, கீ - போர்டு வாசிப்புடன் தொடர்கிறார் குமார்.

``எனக்கு வெஸ்டர்ன் மியூசிக் கத்துக் கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, கர்னாடிக் மியூசிக் மாதிரி வெஸ்டர்ன் மியூசிக்கை மனப்பாடம் பண்ணிக் கத்துக்க முடியாது. ஒவ்வொரு முறையும் கண்களால் பார்த்துதான் வாசிக்க முடியும். பலரும் சொல்லிக்கொடுக்க மறுத்தபோது, பிரியா எனக்காக வெஸ்ட்ரன் மியூசிக் கத்துக்கிட்டு வீட்ல வந்து எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க. எங்கக் காதலை அழகாக்க இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இருக்கு... அதை யெல்லாம் அசைபோட இந்த ஒரு ஜென்மம் பத்தாதுங்க...” அன்பில் திளைக்கிறார் குமார்.

காதல் அழகானது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism