Published:Updated:

`என் சாதனையின் நினைவுச் சின்னம்!' - பிரியங்கா சோப்ராவின் சர்ப்ரைஸ் கிஃப்டால் உருகும் நிக்

கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றது. இன்றளவும் அந்த இளம் தம்பதியை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

'கல்யாணமாகி இத்தனை வருடங்களில் எத்தனை கிஃப்ட்ஸ் எனக்கு வாங்கித் தந்திருப்பாய்?' என்று கணக்குக் கேட்டு, 'உன்னையெல்லாம் என்னதான் செய்ய.. உனக்கெல்லாம் எதற்கு லவ்' ...இப்படி ஏகத்துக்கும் அடித்துத் துவைக்கும் ஃபைட்டிங் ஜோடிகள் இங்கே ஏராளம். இவர்களின் சண்டைக்குத் தூபம் போடும் விதமாகத்தான் அமைந்திருக்கிறது இந்தச் செய்தி, என்றாலும் `ஆஹா, இதுவல்லவோ காதல், இவர்களல்லவோ ஆதர்ச தம்பதி' என்று எல்லோரையும் குஷியாக்கியும் இருக்கிறது அந்த ஜோடி!

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
``சிகரெட் பழக்கத்தை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்!"- பிரியங்கா சோப்ராவை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றது. இன்றளவும் அந்த இளம் தம்பதியை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு கடந்ததை முன்னிட்டு மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது, இந்தக் குடும்பம். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரியங்கா தனக்குக் காதல் பரிசு அளித்ததைப் பற்றி நிக் ஜோனஸ் உருகி உருகிப் பேசியிருக்கிறார்.

நிக் ஜோனஸுக்கு பிரியங்கா விலையுயர்ந்த மோதிரம் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இதைப்பற்றி நிக் கூறும்போது, ``என்னை அன்புசெய்கிற ஓர் உயிரை நான் தேடிக் கண்டடைந்தது மாபெரும் சாதனை.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

அதை இந்தப் பரிசு என்றென்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்" என்று நெகிழ்ந்திருக்கிறார். கடந்தாண்டு பிரமாண்டமான பொருள்செலவில் படு ஆடம்பரமாக நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்வு கவனம் ஈர்த்தது.