Published:Updated:

அண்ணன் கண்ணனைத் தங்கை சுபத்ரா கொண்டாடிய பண்டிகை.. `லவ் யூ ராகுல்காந்தி..' பிரியங்கா வாழ்த்து ட்வீட்!

சகோதரர்களின் ஆயுளுக்காகச் சகோதரிகள் வாழ்த்துத் திலகமிடுவதும் அவர்களுக்குச் சகோதரர்கள் நினைவுப் பரிசளிப்பதுமே இந்தக் கொண்டாட்டம்.

பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி

வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் தீபாவளிப் பண்டிகையை அடுத்த இரண்டாம் நாள், சகோதர அன்பை வெளிப்படுத்தும் விதமாக 'பாய் தூஜ்' என்ற விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி

கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளித் திருநாள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் இந்த 'பாய் தூஜ்' விழா வடஇந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி வடநாட்டினர் தங்கள் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பரிமாறி வருவதோடு, இணையவெளியில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அவரின் தங்கை பிரியங்கா காந்தி, வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டார். அண்ணன் ராகுலுடன் தான் எடுத்துக்கொண்ட ஜாலி மொமென்ட்டுகள், நீங்கா நினைவுகள் அடங்கிய பொக்கிஷமான படங்களை தொகுத்துப் பதிவேற்றிய பிரியங்கா, அதில், "லவ் யூ ராகுல்காந்தி" என ட்வீட் செய்திருக்கிறார். இந்தச் சகோதர அன்பை வாழ்த்தி நெட்டிசன்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

பிரியங்கா காந்தியின் ட்வீட்
பிரியங்கா காந்தியின் ட்வீட்

நரகாசுரனை அழித்த கிருஷ்ண பரமாத்மா தன் தங்கை சுபத்ராதேவியைக் காண வந்தபோது, அவள் சகல விருதுகளுடன் கண்ணனை வெற்றித் திலகமிட்டு வரவேற்றாள் என்ற புராணக் கதையை மையமாகக் கொண்டு இந்த விழா ஆண்டுதோறும் வடஇந்தியப் பகுதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.