Published:Updated:

`நான் உனக்கு, நீ எனக்கு...' பிரச்னையில் இருக்கிற தம்பதிக்கு மனநல மருத்துவர் அட்வைஸ்! #LetsSpeakRelationship

Love each other
Love each other ( Representational Image )

நீங்கள் இருவருமே உங்கள் பெற்றோர்கள் உங்கள் வீட்டுக்கு வருவதற்கு எந்தத் தடையும் சொல்ல வேண்டாம். அதற்கு பதில், நீங்கள் இருவரும், `நம் பெற்றோர்கள் என்ன சொன்னாலும், அதன் பொருட்டு நாம் சண்டை போடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள்.

நானும் என் கணவரும் காதலித்து, பெற்றோர்களின் சம்மதமில்லாமல் திருமணம் முடித்தவர்கள். நாங்கள் இருவருமே வீட்டுக்கு ஒரே குழந்தை என்பதால், அவர்களால் எங்களைப் பிரிந்திருக்க முடியாமல் எங்களுடன் சமாதானமாகிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, எங்கள் இருவருடைய பெற்றோர்களும் வரப்போக ஆரம்பித்ததும் எங்களுக்கும் மனதுக்கு ரொம்பவே இதமாக இருக்கிறது.

love couple
love couple

ஆனால், இப்போது நிலைமையே வேறு. எனக்கும் என் கணவருக்கும் இடையில் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும், உடனே என் அம்மா அதில் தலையிட ஆரம்பிக்கிறார். இது என் கணவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால், என் அம்மாவிடம் அவர் பேசுவதையே நிறுத்திவிட்டார். என் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. 'உன்னால்தான் புறாக்கூடு மாதிரி இருக்கிற இந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டில் என் மகன் இருக்கிறான்' என்கிறார்கள் அவருடைய பெற்றோர். காதலிக்கும்போதும் சரி, திருமணத்துக்குப் பிறகும் சரி, நாங்களிருவரும் பயங்கர ஃப்ரெண்ட்லியாக இருந்தோம். இருவரின் பெற்றோர்களின் தலையீடுகளால் அந்த நட்பே காணாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. என்ன செய்ய?

- பெயர் சொல்ல விரும்பாத சென்னை வாசகி

பதில் சொல்கிறார் மனநல மருத்துவர் ஜெயந்தினி.

''நீங்கள் பயப்படுகிறபடி எதுவும் நடக்காமல் இருப்பது உங்களுடைய கைகளிலும் உங்கள் கணவருடைய கைகளிலும்தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் படித்தவர்கள். திருமணம் செய்து கொள்ளத்தான் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்தீர்கள். அப்படி இருக்கையில் பெற்றோர்கள் மறுபடியும் உங்களுடன் இணையும்போது இதுபோன்ற பிரச்னைகள் வரும் என்று உங்களுக்குத் தெரியாதா?

மனநல மருத்துவர் ஜெயந்தினி
மனநல மருத்துவர் ஜெயந்தினி

உங்களைப் பெற்றவர்களோ, உங்கள் கணவரைப் பெற்றவர்களோ அவர்களுடைய ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். அதேபோல், மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் பிரச்னைகள் வந்தால், மகளைப் பெற்ற அம்மா மகளுக்காகப் பரிந்து பேசுவதும் வழக்கமான ஒன்றுதான். அதனால்தான், நம் வீட்டுத் திருமணங்களில் இரண்டு பேரல்ல, இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைகின்றன என்று சொல்வது வழக்கம்.

நீங்கள் ஒருவரையொருவர் நம்பி வந்தபிறகு, அவர்கள் பேசுவதை நினைத்து ஏன் வருத்தப்படுகிறீர்கள்? அவர்களை எதிர்த்துப் பேசுவதைவிடக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. அதை விடுத்து அவர்களிடம் வாதம் செய்தால் பிரச்னை இன்னமும் பெரிதாகும் கவனம். குடும்பம் இரட்டை மாட்டு வண்டி. ஒரு மாடு நேராகப் போய், இன்னொரு மாடு குறுக்கே போனால் வாழ்க்கைக்குச் சரியாக வராது.

```ஐயம் ஃபார் யூ', 'யூ ஆர் ஃபார் மீ' என்று வாழ்ந்தால் எந்தக் காதல் திருமணத்திலும் பிரச்னையே வராது.''
மனநல மருத்துவர் ஜெயந்தினி
``அவங்க பிரிவு தாங்க முடியாம ஏர்போர்ட்ல நின்னு அழுதேன்!’’ -  கார்த்திக் வாசு பகிர்ந்த லவ் ஸ்டோரி

நீங்கள் இருவருமே உங்கள் பெற்றோர்கள் உங்கள் வீட்டுக்கு வருவதற்கு எந்தத் தடையும் சொல்ல வேண்டாம். அதற்கு பதில், நீங்கள் இருவரும், `நம் பெற்றோர்கள் என்ன சொன்னாலும், அதன் பொருட்டு நாம் சண்டை போடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள். அவர்களுடைய பேச்சு உங்கள் இருவருக்கும் மனஉளைச்சல் கொடுக்கிற அளவுக்குச் சென்றுவிட்டால், "அவள் என்னை நம்பி குடும்பத்தைவிட்டு வந்தவள். இன்று வாடகை வீட்டில் இருந்தாலும் நாளை நாங்களும் சொந்த வீடு வாங்குவோம்'' என்று உங்கள் கணவர் தன் குடும்பத்திடமும், ''அவர் எனக்காக தன் குடும்பத்தைவிட்டு வந்தவர். எங்கள் இருவருக்குமிடையில் வருகிற பிரச்னையில் நீங்கள் தலையிட வேண்டாம்'' என்று நீங்கள் உங்கள் அம்மாவிடமும் சொல்லுங்கள்.

என் கணவரைப் பற்றி / மனைவியைப் பற்றி குறை சொல்வதைத்தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். கஷ்டமோ, நஷ்டமோ நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி விடுங்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் உங்கள் இரு குடும்பத்தினரின் முன்னிலையில் சண்டை போட்டு விடாதீர்கள். வாழ்க்கைத் துணையை விட்டுக்கொடுக்காதீர்கள். 'எங்கள் பேச்சைக் கேட்காததால்தான் இப்படி சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள்' என்று அவர்கள் சொல்வதற்கு இடம்கொடுத்து விடாதீர்கள்.

love
love
Representational Image
பாலியல் தொழில்; பேக்கரி பிசினஸ்; காதல் திருமணம்! - மேற்குவங்கத்தை நெகிழவைத்த லவ் ஸ்டோரி #Viral

நீங்கள் இவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லையென்றால், அவர்களுடைய பேச்சுக்குக் காதுகொடுக்காதீர்கள். அவர்களே அதைப் புரிந்துகொண்டு தானாகவே பேசுவதை நிறுத்திவிடுவார்கள். இதற்கு பதில், நீங்கள் அவர் குடும்பத்தினரிடம் கோபப்பட்டாலோ, அவர் உங்கள் பெற்றோரிடம் கோபப்பட்டாலோ நிலைமை இன்னமும் மோசமாகத்தான் ஆகும். 'ஐயம் ஃபார் யூ', 'யூ ஆர் ஃபார் மீ' என்று வாழ்ந்தால் எந்தக் காதல் திருமணத்திலும் பிரச்னையே வராது.''

அடுத்த கட்டுரைக்கு